கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 November, 2012

உள்ளத்தைக் கொடு, இல்லாவிட்டால் உயிரை விடு... பெருகி வரும் கொடூரக் காதலர்கள்!

 
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு; காதலிக்க மறுத்த பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்த மாணவன்; காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்.... இவை எல்லாம் இந்தவார ஊடகங்களில் வெளியான செய்திகள்.
 
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. இருவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டால் மட்டுமே அது மலர்ந்து மணம் வீசும். ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒருதலையாக தோன்றும் காதலுக்கு எதிராளி யாரும் பொறுப்பாக முடியாது. மாய்ந்து மாய்ந்து காதலித்து விட்டு அந்த காதல் மறுக்கப்படும்போது காதலியை குரூமாக இம்சிப்பதும் அதையும் தாண்டி கொலை செய்வதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.


கண் இழந்த காரைக்கால் பெண்


காரைக்கால் நகரில் வசித்து வரும் வினோதினி சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை ஒரு தலையாக காதலித்த சுரேஷ் தனது காதலை பலமுறை வினோதினியிடம் தெரிவித்தும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தீபாவளி கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்த வினோதினியின் மேல் ஆசிட் வீசியுள்ளான். இதில் வினோதியின் முகம் சிதைந்து போய்விட்டது. கண் பார்வை முற்றிலும் பறிபோனது.

கோடாரியால் வெட்டிய குரூரம்


அரியானா மாநிலம் ஹிசாரில் குரு ஜம்பேஸ்வரர் பல்கலைக் கழகத்தில் பிடெக் படித்து வந்த மாணவி கீதிகா மேதாவும் அதே பல்கலை கழகத்தில் படிக்கும் பிரதீப் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். திடீரென கீதிகா மீது பிரதீப்புக்கு காதல் ஏற்பட்டது. இதனை கீதிகாவிடம் கூறியபோது அதற்கு கீதிகா மறுத்து விட்டார். இதன்பின்னர் பிரதீபிடம் பேசுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்திலேயே கீதிகாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரதீப்.

 

பெங்களூரு சிறுமிக்கு கத்தி குத்து


பெங்களூர் தாவணகெரே தாவணகெரே பகுதியை சேர்ந்த 19 வயதான ஹைதர் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான செல்வியை ஒருதலையாக காதலித்துள்ளார். தனது காதலை பலமுறை தெரிவித்தும் அதனை ஏற்க செல்வி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹைதர் செல்வியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார் ஹைதர். இப்போது கொலை செய்த குற்றத்திற்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கழுத்தறுத்த காதலன்


இதேபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் அதிகம் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு வேலூரைச் சேர்ந்த லோகநாதன் இருங்காட்டுக் கோட்டையைச் சேர்ந்த சுமதியை காதலித்தார். இந்த காதலை சுமதி ஏற்கவில்லை. இதனால் கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்தார் லோகநாதன். ரத்த வெள்ளத்தில் துடித்த சுமதியை மருத்துவமனைக்கும் கழுத்தறுத்த லோகநாதனை சிறைக்கும் அனுப்பிவைத்தனர் பொதுமக்கள்.
 
தனக்கு கிடைக்காத ஒன்று
 
தனக்கு கிடைத்த ஒன்று யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்குவதுதான் இதுபோன்ற குரூரத்தை செய்யத்தூண்டுகிறது. தன்னால் நேசிக்கப்படும் நபர் எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும் என்று நினைத்த காலம் படிப்படியாக மலையேறி வருகிறது. நமக்கு இல்லாத ஒன்று இல்லாமலேயே போகட்டுமே என்ற எண்ணத்தில்தான் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரூர எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

மனரீதியான பாதிப்புதான்


இது போன்ற கொலைக்கும், ஆசிட் வீச்சுக்கும் காரணம் மனரீதியான சிக்கல்கள்தான் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். நான் உன்னை காதலிக்கிறேன்... நீ என்னை காதலித்தால் சந்தோசம்... அதேசமயம் நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தமில்லை. அதற்காக என்னுடைய காதல் பொய்யாகிவிடாது. நான் தொடர்ந்து காதலித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறும் காதலர்களும் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்களுக்கு காதல் மீதான பார்வையே வேறாக இருக்கும். இதுபோன்ற பழிவாங்கல்களும், கொலை செய்யும் எண்ணமும் ஏற்படாது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். (தொகுப்பு நன்றி தட்ஸ் தமிழ்)
 
காதலில் உள்ள ஆழமும் அழுத்தமும் தான் அவர்களை இப்படி செய்ய தோன்றுகிறது. இதுஇப்படி இருக்க இன்னும் கள்ளக்காதல்கள் கொளைகளை தொகுத்தால் அவ்வளவுதான். காலை செய்திதாள்களை கள்ளக்காதல் கொளைகளும் காதல் தற்கொலைகள், பழிவாங்கள்கள் என பங்கங்களை ‌எல்லாம் நிரப்பி வருகிறது.  (இது ஒரு விழிப்புணர்வுக்காக)
 
புனிதமான காதலை நம் மண்ணைவிட்டு போகாமல் காப்போம். காதலில் மெண்மையை கையாள்வோம்... 

29 November, 2012

பிராபல மற்றும் பிரபல பதிவர்கள் இங்கு கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்..!


ஒரு முறை கல்லூரியில் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள் பேச வேண்டியிருந்தது. அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது என் காரணத்தினால் தன் உதவியாளரிடத்தில் பதினைந்து நிமிட ஆங்கிலப் பேச்சை எழுதித் தருமாறு சொன்னார்...

கூட்டத்தில் அதை அரை மணி நேரம் படித்தார் அவர்..

பிறகு தன் உதவியாளரிடம், “ கால் மணி நேரப் பேச்சு தயாரிக்கச் சொன்னால், நீ ஏன் அரை மணிநேரப் பேச்சைத் தயார் செய்தாய் ”? என்று கோவத்துடன் கேட்டார் ஆபிஷர் அவர்கள்.

”ஐயா..! நான் கால் மணி நேரப்  பேச்சுத்தான் தயாரித்தேன்.  நீங்கள் தான் அதன் நகலையும் சேர்த்து படித்து விட்டீர்கள்..” என்றார் உதவியாளர்.
*********************************


 வீடு சுரேஷ்குமார் ஒரு பெரிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

நிறைய ஆட்கள் வேலைக்குத் தேவைப்பட்டபர்கள். “திருமணமானவர்களுக்கு மட்டும் வேலை...” என்று விளம்பரம் செய்தார் சுரேஷ்குமார்.

இதைப்பார்த்த அவரது நண்பர் தமிழ் பேரண்ட்ஸ் சம்பத், “ உன் விளம்பரம் வேடிக்கையா இருக்கு.. எதற்காக இப்படி விளம்பரம் தந்தாய்?” என்று கேட்டார்.

“திருமணமானவர்கள் தான் எப்பொழுதும் எதிர்த்து பேச ‌மாட்டார்கள்..., வீட்டில் இருக்கிற மாதிரி பணிவாக இருப்பார்கள்” என்று பதில் தந்தார்... சுரேஷ்... (எனக்கு புரிஞ்சிடிச்சி...)

*********************************


ராஜபாட்டை ராஜா  மாணவன் ராமுவை அழைத்து.. நீ சோமுவின் விடைத்தாளை பார்த்துதானே எழுதினாய் என கேட்டார்..

சார் அப்படி நான் யாரைப்பார்த்தும் காப்பி அடிக்கல சார் என்றான் ராமு...

ஏன் இப்படி பொய் சொல்ற என்று மிரட்டினார் ராஜா...

சார்! நான் காப்பி அடித்தாகவே வைத்துக் கொள்ளுங்கள் அதை நீங்கள் எப்படி கண்டு பிடிச்சிங்க என கேட்டான் ராமு.

சோமு தன் விடைத்தாளில் ஒரு கேள்விக்குத் தெரியாது என்று பதில் தந்திருந்தான். அந்த கேள்விக்கு நீ.. “எனக்கும் தெரியாது“ அப்படின்னு பதில்  எழுதியிருக்கிற.... என விளக்க கொடுத்தார் ராஜபாட்டை ராஜா...


*****************************************

டிஸ்கி : இங்கு பிரபல பதிவர்கள் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்...
இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!


தொடரும்.... 

28 November, 2012

என்னுடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா..?



லைக்கணம் கொண்டோரெல்லாம்
தரணியில் நிலையாது

அழிந்துத்தான் போகவேண்டும்
“ஒரு தீக்குச்சியைப்போல...”

சித்த வயிற்றுக்கு ஈயாமல்
பதுக்கப்பட்ட செல்வங்கள் யாவும்
கொள்ளைத்தான் போகும்
“ஒரு தேன் கூடு போல...”


லகின் ஒவ்வொறு நொடியிலும்
வாழ்க்கையை ரசித்து வாழாத யாவரும்
சிதைந்துத்தான் போக வேண்டும்
“ஒரு நீர்குமிழி போல...”
 

ன் மனமென்ற தோட்டத்தில்
சுயநல விதையை விதைத்தோரெல்லாம்
கலைந்து தான் போகவேண்டும்
“ஒரு வெண்மேகம் போல...”


பிறருக்கு தீதென்று அறிந்தும்
கூடாத ஒரு செயலை செய்வோரெல்லாம்
நாளை பொசுங்கித்தான் போக வேண்டும்
“ஒரு விட்டில்பூச்சி போல...”


னிதத்தில் இருந்து தெய்வத்திற்கு

மாறவேண்டிய பரபரப்பெல்லாம் ‌வேண்டாம்
மனித குணத்தோடு வாழ்வோம்....
“ஒன்றும் அறியாத ஒரு குழந்தை போல...”



19 November, 2012

சத்தியமா இதெல்லாம் ஊர்ல பேசிகிட்டதுங்க...!


சுப்பன் :தமிழகத்துக்கு மத்திய அரசு மின்சாரம் கொடுக்காததற்கு காரணம் கலைஞர்தானாம். 

குப்பன் : ம்... அப்படியா..?


சுப்பன் : தற்போது ஆளும் அதிமுக ஆட்சியின் மீது தொடர் மின்தடையால் மக்கள் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தந்து நிலமை சரியானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெருவது கடினமாகிவிடும்.

குப்பன் : அதனா‌ல...சுப்பன் : வரும் தேர்தல் வரை தமிழகத்துக்கு மின்சாரம் தராதீர்கள் அப்போதுதான் நம் கூட்டணி ஜெயிக்கும் என்று மத்திய அரசிடம் கலைஞர் கூறியிருக்கிறாராம்.

குப்பன் : ... இருக்கலாம்.. நம்ம தானைத்தலைவரை நம்பமுடியாது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவரே...!
*********************************


முனியன்: இ‌லங்கை சோகம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் திமுக பரபரப்பாக செயல் படுவதுபோல் காட்டிக்கொள்கிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஜ.நா-வுக்கும், மனித உரிமை தலைவர்களுக்கு அந்த  நகல்களை மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று கொடுத்து வந்தது ஈழத்தமிழர்கள் மீது உள்ள அக்கறை ஒன்றும் இல்லையாம்.


பக்கிரி : ம்.. அப்ப எதுக்காம்

முனியன்: ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் தன்னுடை மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அப்படியே இந்த நாடகம்.

பக்கிரி : சரிதாம்பா..! உண்மையான அக்கறை என்றால் அவர் ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவே இந்த வேலையை செய்திருக்கலாமே....?
**********************************

கந்தசாமி : அம்மாவிடம் அடங்காமல் இருந்த விஜயகாந்தை கொஞ்சம் அடக்கி வைக்கவே அந்த கட்சி எம்.எல்.ஏ-க்களை அம்மா இழுத்தார்களாம். 

முனுசாமி: ம்... அப்படியா..


கந்தசாமி : நிலைமை மோசமாவதை தொடர்ந்து தற்போது அம்மாவிடம் அடிபணிந்து போய் விட்டார். அதனால் தான் அந்த பிரச்சனை தற்போது அப்படியே மூடி மறைத்துவிட்டனர்.

இன்னும் மீதமிருக்கும் நாட்களில் தன்னுடைய எதிர்கட்சி தலைவர் என்ற பத‌வியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த அமைதியாம்.... அதான் படம் எடுத்த பாம்பு பணிய ஆரம்பிச்சிடிச்சி...

முனுசாமி: அப்பன்னா இவரை எம்ஜிஆர்-ன்னு கூப்பிடறாதா.. நம்பியார்ன்னு கூப்பிடறதா...

********************************

ராமு: தமிழகத்தில் மின் வெட்டுக்கு முக்கிய காரணம் அம்மா தான்
 

சோமு : அப்படியா... ஏன் இதுமாதிரி செய்யுராங்க..
 

ராமு : தமிழகத்தில் இதுமாதிரி மின்பற்றாக்குறை காட்டினாதான் கூடங்குள பிரச்சனை எழாது அப்புறம் இதையே காரணம் காட்டி மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வாங்கிடனுன்னு அம்மா பிளானாம்...
 

சோமு : ஓ... அப்படியா சங்கதி... இந்த விளையாட்டு எப்ப முடியும்...
 

ராமு : அது... ‌ அம்மாவுக்கு மட்டுமே தெரியும்...!

********************************
மறுபடியும் சொல்றேங்க இதை நான் சொல்லல.. ஊர்ல பேசிகிட்டது...

18 November, 2012

பவர் ஸ்டார் உருவான விதம் எப்படி..! பரபரப்பு பிண்ணனி தகவல்கள்... ஆதாரங்களுடன்..


தமிழ் திரைவு‌லகை கலக்கிகொண்டிருக்கும் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன் எப்படி தன்னை பிரபலபடுத்திக்கொண்டார் என்பதை ராஜ் டிவி கோப்பியம் நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவாக எடுத்துகாட்டியுள்ளனர். அந்த பரபரப்பு பிண்ணனியும் உண்மை தகவல்களும்  காட்சியாக காணுங்கள்....


17 November, 2012

சர்ச்சை மன்னன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம்


அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.

மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

இன்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மாலை 3.30 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டு வாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இந்த செய்தி வெளியில் இருந்த சிவசேனா கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பரிமாறப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.

பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் மாராட்டிய மாநிலமெங்கும் பதட்ட நிலை தொடர்கிறது.


வாழ்க்கை வரலாறு...

பாலா சாஹேப் டாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால் கேஷவ் டாக்கரே மராட்டி: बाळासाहेब केशव ठाकरे(1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிறந்தவர். இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மஹாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.


ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலும்

பாலா சாஹேப் டாக்கரே (மாதம் இரு முறை வெளிவரும் பத்திரிகையான பிரபோதன் அல்லது "ஞானோபதேசம்" என்று பொருள்படும் பத்திரிகையில் தாம் எழுதிய கட்டுரைகளால், பாலகட் மத்தியப் பிரதேசத்தில், பிரபோதாங்கர் டாக்கரே என்றும் அறியப்பட்ட) கேஷவ் சீதாராம் டாக்கரே என்பவரின் மகனாகக் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கேஷவ் டாக்கரே ஒரு முற்போக்கு சமூக சேவகர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார். அவர் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றி (ஒன்றிணைந்த மஹாராஷ்டிரா இயக்கம் என்றே நேரடியாகப் பொருள்படுவதான) சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால்|சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்னும் இயக்கத்தின் மூலம் 1950ஆம் ஆண்டுகளில் மராத்திய மொழி பேசும் மாநிலமாக மஹாராஷ்டிரா உருவாவதிலும், அதன் தலைநகராக மும்பய் அமைவதிலும் முக்கியப் பங்காற்றினார்.


பாலா சாஹேப் டாக்கரே தமது தொழில் வாழ்க்கையை மும்பய் நகரில் 1950ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. 1960ஆம் வருடம் அவர் மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழ் ஒன்றைத் தனது சகோதரருடன் இணைந்து துவக்கினார். குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பயில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் (மராத்தியர்கள் என்றழைக்கப்படும்) பிறப்புரிமையாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவ சேனாவைத் துவக்கினார். சிவ சேனாவின் ஆரம்ப கால நோக்கமானது தென்னிந்தியர்கள், குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் போன்று வேறு மாநிலங்களிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிராக மராத்தியர்கள் பணிககாப்பு பெறுவதை உறுதி செய்வதாகவே இருந்தது.

அரசியல் ரீதியாக, சேனா பொதுவுடமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பயின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகத் தலைவர்களிடமிருந்து காப்புப் பணம் வசூல் செய்வதாகவே இருந்தது. பின்னர், இது பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி-சிவ சேனா கூட்டணி 1995ஆம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1995 முதல் 1999வது வருடம் வரை அரசு புரிந்த காலகட்டத்தில் டாக்கரேயை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.


சிவ சேனா கட்சி, மராத்தி மனூக்களுக்கு (சாமானிய மராத்தியர்கள்) மும்பய் நகரில் பொதுத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் உதவியதாக டாக்கரே கோருகிறார். சிவ சேனா அரசு புரிந்த கால கட்டத்தில், தனது அடிப்படை சித்தாந்தமான 'மண்ணின் மைந்தர்கள்' என்னும் கருத்தாக்கத்துக்கு மாறாக, மராத்திய இளைஞர்கள் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளான பொதுவுடமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. (தகவல்கள் விக்கி பீடியா..)

இஸ்லாமியர்களுக்கு எதிராக,  வடஇந்தியர்களுக்கு எதிராக, அப்துல் கலாம் மற்றும் காதலர் தினம், என பல்வேறு நிகழ்வுகளுக்கும், அதிகபடியான போராட்டங்கள் கருத்துகள் என இந்தியாவில் அதிக சர்ச்சைகளை கிளப்பியவர் இவராகத்தான் இருக்க முடியும். அவர் இந்த உலகை விட்டு மறைந்தார் அவர் ஆத்மா சாந்தியடை வேண்டுகிறேன்.

16 November, 2012

அநானமிகளுக்கு ஒரு எச்சரிக்கை...! துவங்கியது களையெடுக்கும் பணி...!


இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. 

அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. 

நடப்பாண்டில் இதுபோல் 596 தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

15 November, 2012

இது பெண்களுக்கு பிடிக்காதது...!


 
மெய்போல் பொய் பேசியது
அவளது கண்கள்...!  


சிறகுகள் போல் படபடத்தது
அவளது இமைகள்...!  

கொடிகள் போல் அசைந்தாடியது
அவளது இடை...!  

காற்றில் வீணை மீட்டியது
அவளது கைகள்...! 

சிறகை விரித்து பறந்தாடியது
அவளது தாவணி...! 

குழுக்களாய் கூடவே தாளம் போட்டது
அவளது வளையல்கள்...! 

நாணத்தோடு கோலமிட்டது
அவளது பாதங்கள்...! 

எப்போதும்...
காதலை கண்டால் வெறுத்து ஓடுகிறது
அவளது இதயம்...!   

14 November, 2012

துப்பாக்கி படம் இஸ்லாமியத்திற்கு எதிராக உள்ளதா?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமியத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரிக்கபட்டுள்ளதாக சில கருத்துக்கள் எழுந்துள்ளது.  சில இஸ்லாமி அமைப்புகள் விஜய் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் சில செய்திகள் வருகின்றது..


அப்படி என்ன இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே அந்த திரைப்படத்தில் தீவிரவாதி போன்ற கதாபாத்திரம் வந்தால் அதற்கு சரியான தேர்வாக ஒரு இஸ்லாமிரை காட்டுவது என்பது இத்தனை ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதுவும் தமிழ் படம்என்றால் தீவிரவாதியானவன் கண்டிப்பாக தீவிர இஸ்லாமியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலாலை தமிழ் திரைவுலகம் கடைபிடித்து வருகிறது.


தமிழ் படத்திற்கு உள்ள பார்முலாபடி துப்பாக்கி படத்தில்  தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமியர்களைத்தான்  காட்டவேண்டும் என்று முடிவு செய்து படத்தில் வரும் அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் போல் காட்டப்பட்டுள்ளது. அவர்களை கொண்று நாட்டுக்கு ஏற்படும் தீமையை கதாநாயகன் போக்குவது போன்று படம் உள்ளது.



இந்த உலகிற்கு, மனித சமூகத்திற்கு, அடுத்த உயிருக்கு தீங்கு விளைவிக்கும் செயல் செய்தால் அது யாராக இருந்தாலும் தீவிரவாதியே ஆனால் உலகம் ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமிய இனம்தான் என்ற முடிவுக்கு வருவது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிகிறது. 


இந்தியாவில் பெரும்பாலன இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அந்த இனத்தையே தீவிரவாதிகள் போல் காட்டுவது அனைவரையும் நாம் இழிவு படுத்துவதுபோல்தான் ஆகும். இஸ்லாமியத்தில் தீவிரவாத கருத்துடைய சிலர் இருக்கிறார்கள் என்றால் தான் வாழும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நாட்டுப்ற்றும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவுக்கா பாடும் இஸ்லாமிய இன இளைஞர்கள் இங்கு ஏராளம்.



கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் கூட தீரவாதிகள் நால்வரில் ஒருவர் இந்துவாக காட்டியிருப்பார்கள். அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக ஹாரீப் என்ற ஒரு முஸ்லீம் இருப்பார். அதனால் அந்தப்படம் பொதுமைபடுத்தி காட்டப்பட்டிருந்தது. 

ஆனால் துப்பாக்கி படத்தில் தீவிரவாதியாக இருக்கும் அனைவரும் இஸ்லாமியர் என்ற போர்வையில் இருந்தது. ஆனால் அவர்கள் குரான் படிப்பது உருது பேசுவது, இஸ்லாமியத்தை உயர்த்தி பேசுவது போன்ற காட்சிகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல். துப்பாக்கி படம் வெளிப்படையாக இஸ்லாமியத்தை தாக்குவதாக இல்லை அதற்காக படத்திற்கு வாக்காலத்து வாங்க எனக்கு விருப்பம் இல்லை.


பொதுவாக ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, ஒரு சமூகத்தையோ, ஒரு குழுவையோ தவறாக குறிப்பிடுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இனிவரும் இந்தியதிரைப்படங்கள் அதுபோன்ற காட்சி அமைப்பை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதுவும் ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து அதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கும்போது அந்த சம்பவம் இன்னும் தன்னுடைய வடுக்களை மறக்காமல் துன்பத்திலே நீடிக்கவைக்கிற செயலாகத்தான் அது தெரிகிறது. குண்டு வெடிப்பு என்றால் மும்பை என்பது அதனுடைய மற்ற புகழ்களை மறைக்க வைப்பது போல் உள்ளது.

விஜய்யின் துப்பாக்கி திரை விமர்சனம் - thuppakki tamil movie review


வணக்கம் நண்பர்களே.... தங்களை மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தோடு சந்திக்கிறேன்...


தீவிரவாதம்.. தீவிரவாதி.. குண்டு வெடிப்பு.. போன்ற கதைகள் கொண்ட படமாக இருந்தால் அதற்கு சரியான இடம் மும்பை என்று தீர்மானித்து விட்டார்கள் போலும் இந்திய சினிமாவினர்கள்.

துப்பாக்கி படமும் அதுபோன்று தீவிரவாதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே. பொதுவாக ஒரு குண்டு வெடித்தால் அதை வைத்தது யார்..? எதற்காக வைத்தார்கள்..? அவரை பிடித்து உண்மையை வரவைப்பது ‌போன்று தான் இது வரை படங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப்படம் மேற்கண்ட அத்‌தனை கேள்விகளையும் ஓரம் தள்ளிவைத்து விட்டு ஒரு குண்டு வெடிப்பில் அதை வைத்த தலைமைக்கும் அதை வைத்த கடைசி ஆளுக்கும் தொடர்பு இல்லாமல் கூட இருக்கலாம். அப்படி கடைமட்ட ஆட்கள் இந்தியா முழுக்க பரவியிருக்கிறார்கள்  என்றும் அவர்களை  ஸ்லிப்பர் செல் (Sleeper Cell) என்று இனம் கண்டு அவர்களை பிடித்து விசாரிப்பது வீண் அவர்களை வைத்து தலைமையை கண்டறிந்து அழிப்பதுதான் இவர்கள் செயல்படாமல் வைக்க முடியும் என்பதுதான் கதையின் கரு...


அதன்படி இந்த ஸ்லிப்பர்களை எப்படி கொன்றார்கள் இவர்களை வைத்து தலைமையாளனை எவவாறு அறிந்து அவர்களை ஹீரோ எப்படி அழிக்கிறார் என்பதுதான் துப்பாக்கி படத்தின் கதை.

நாயகன் விஜய் இரணுவத்தில் இருந்து 45 நாள் விடுமுறையில் மும்பை வருகிறார். அங்கு ஒரு பேருந்தில் குண்டு வெடிக்கிறது. அவனை பின்தொடர்ந்தபோது இன்னும் சில தினங்களில் 12 இடங்களில் குண்டி வெடிக்க போகிறது என்ற தகவல் கிடைக்கிறது. பின்பு தன்னுடன் விடுமுறைக்கு வந்த ராணுவ நண்பர்களுடன் அந்த 12 இடத்தில் குண்டு வைக்கும் 12 நபர்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கிறார்கள்.  அந்தகாட்சியில் துப்பாக்கியை பயன்படுத்தியதால் தான் படத்துக்கு துப்பாக்கி என்று வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.



இந்த 12 ‌பேரும் அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்பு விஜய்யை தேடி வில்லனும்... வில்லனும் தேடி விஜய்யும் எப்படி காய்நகர்த்துகிறார்கள் என்பதை கொஞ்சம் விரிவாக  தமிழ் படத்துக்கே உரிய பாணியில் கொஞ்சம் விரிவாக  திரையில் ஓடவிட்டிருக்கிறார்கள்.

விஜய்யை பொருத்தவரை தீவிரவாத கதைக்கு விஜயகாந்த் மற்றும் அர்ஜூனுக்கு பிறகு நன்றாக பொருந்தியிருக்கறார். அவருக்கு நண்பராக காவல் துறை அதிகாரியாக சத்யன் கூடவே இருக்கிறார். சண்டைககட்சிகளில் நல்ல முறையில் செய்திருக்கறார் விஜய். 12 தீவிரவாதிகளை தாக்க எடுக்கும் முயற்சிகள் அழகாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. ஆனால் இந்த விறுவிறுப்பு படம் முழுக்க இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்.

நாயகி கஜோல் அகர்வால் முதல் பெண்பார்க்க வந்து வேண்டாம் என்றும் பின்பு அவருடைய கேரக்டரை புரிந்து வேண்டும் என்றும்... படம் முழுக்க இடையிடையில் இந்த வேண்டும் வேண்டாம் என்ற விளையாட்டு ஓடுகிறது. இவர்களுக்கு இடையில் ராணுவ அதிகாரியாக வரும் ஜெயராமை நகைச்சுவைக்காகவே பயண்படுத்தியிருக்கிறார்கள்.

இறுதியில் வில்லனுடன் அரபிக்கடலில் ஒரு கப்பலில் நேருக்கு நேர் மோதி அவரை அழித்து திருப்புகிறார் விஜய்.

குண்டு எதற்கு வெடிக்கிறது. அதன் பின்னணி என்ன?  ‌போன்ற ‌கேள்விகளுக்கு விடையில்லை. படம்முழுக்க பாட்டு காதல் சண்டை என கலந்துக்கொடுத்துள்ளதால் எதுவும் முதன்மையானதாக கருதமுடியவில்லை.

முதல் முறையாக விஜய் படத்தில் எந்தபாட்டும் எடுபடவில்லை. எல்லாம் பாடல்களும் பாப் பாடல்கள் போல் தோன்றுகிறது. படத்திற்கு அவை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் பாடல் மட்டுமே கொஞ்சம் சுமார்...


எ.ஆர்.முருகதாஸிடம் அதிகம் எதிர்பார்த்து சென்றேன் ஆனால் அவருடைய முந்தைய படங்களை ஒப்பிடும்போது அவ்வளவு பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது.

பாடல்களை தவிர்த்து, பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கும் கஜோலை தவிர்த்தால் ஒரு முறை பார்க்கலாம்.


விஜய்க்கு இந்தப்படம் கொஞ்சம் முன்னேற்றத்தை தரும் என்று நினைத்தேன் ஆனால் அதில் கொஞ்சம் பின்னடைவே மிஞ்சியிருக்கிறது.

13 November, 2012

போடா போடி திரை விமர்சனம் / podaa podi cinema review


இன்று காலையில் இருந்து வீட்டில் தான் இருந்தேன். பட்டிமன்றங்கள் முடிந்த‌ை கையோடு சில சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்று தீபாவளி மின்தடை ஏற்பாடாது என்று சத்தியம் செய்தார்கள் சிலர். ஆனால் வழக்கம்போம் சரியாக 12.00 மணிக்கு நம் மின்சார வாரியம் சரியாக தன்கடமையை செய்தது. அதற்குமேலும் வீட்டில் இருக்க மனம் இருப்புக்கொள்ள வில்லை அதனால் கிளம்பி திருவள்ளூர் வந்தேன். நண்பர் கருண்க்கு போன் போட்டால் மாலைதான் வருவேன் என்று சொல்லி விட்டார். மாலையில் துப்பாக்கி பார்ப்போம் என்று முடிவானது. சரி இன்னும் நேரம் இருக்கிறதே அதற்குள் தனியாக போடா போடியை பார்த்தாலென்ன என்ற விபரீத ஆசை தோன்றியது.

வீட்டில் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு சரியாக 2.00 திருவள்ளூர் நகரத்தை அடைந்தேன். திருவள்ளூர் கிருஷ்ணா திரையரங்கில் போடா போடி படம் போடப்பட்டிருந்தது. கூட்டம் அலைமோதும் என அடித்துபிடித்து தியாட்டர் சென்றால் அங்கு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் இருந்தது. படம் வழக்கமான நேரத்தில் 02.10 -க்குதான் ஆரம்பித்தார்கள்.

சரி தாம்மட்டும் படம்பார்த்து விட்டு அமைதியாக இருந்துவிட்டால் நல்லது அல்ல என்று தோன்றியது அதனால் துப்பாக்கி (மாலை 06.15) பார்க்கும் இந்த இடைவெளியில் இந்த பதிவு.


பிரபுதேவா இயக்கத்தில் “எங்கேயும் காதல்” படம் பார்த்தவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் எளிமையாக புரிந்துவிடும். அந்த படத்தில் இன்னோறு பகுதியே போடா போடி... அந்த படம் பாரீஸ்.. இந்த படமும் முழுக்க லண்டன்...  முழுக்கமுழுக்க லண்டன் நகரத்தில் படமாக்கி முடித்திருக்கிறார்கள்

கதைக்கு வருகிறேன்.. இந்த படத்தில் கதை சரியில்லை என்று யாரும  சொல்ல முடியாது ஏனென்றால் அந்த சமாச்சாரம்மெல்லாம் இந்த படத்தில் பெரிசாக இல்லை. நாயகன் சிம்பு, நாயகி வரலட்சுமி ஆனால் திரையில் வரு சரத்குமார் என்றே போடுகிறார்கள். 


ஒரு பெண்னை பார்த்து காதலித்து திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார். அவர்கண்ணில் வரு பட உடனே காதல்.. உடனே திருமணம்... என முடிய அடுத்து ஆரம்பிக்கிறது குடும்பத்துக்குள் சண்டைகள்...


நாயகி வரு ஒரு டான்ஸர்.. லண்டனில் நடக்கும் ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற வேண்டும் என்ற கொள்கையோடு நடன பயிற்சியில் ஈடுபடுகிறார். இவர் இப்படி கலந்துக்கொண்டு நடனத்தில் ஆடுவது சிம்புக்கு பிடிக்க வில்லை. அதை தடுத்த நிறுத்த பல்வேறு ‌ஐடியாக்களை போட்டு தடுக்கிறார்  இறுதியாய் குழந்தை பிறந்தால் ஆடுவது தடைப்படும் என முடிவெடுத்து குழந்தையும் பிறக்கிறது.

தன்னை ஆடவிடாமல் தடுக்கவே குழந்தை முயற்சி என நாயகிக்கு தெரியவர வெறுத்து பிரிகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஒரு விபத்தில் குழந்தை இறக்க நேரிடுகிறது. இதை காரணம்காட்டி நாயகி பிரிகிறார்.

இங்கு இடை‌வேளை விடுகிறார்கள் அம்மாடி என்று பெருமூச்சி திரையரங்கம் முழுவதும் எதிரொலித்தது. அப்படி படத்தின்வேகம் குறைவான இருந்தது. பாதிபேர் அப்போதே நடையை கட்டலாம் என தீர்மானித்தார்கள். ஆனால் தியாட்டரில் தான் கதவை திறக்கவில்லை.

அடுத்த பகுதியில் மீண்டும் இவர்கள் இணைய... டான்ஸ் போட்டியில் கலந்துக்கொள்வதில் இருவருக்கும் மனகசப்பு ஏற்படுகிறது அப்படி மற்றவர்களுடன் ஆடுவது பிடிக்க வில்லை ‌யென்றால் நீயே என்னோடு போட்டியில் ஆடு என நாயகிகூற பின்பு படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது.


தன்னுடைய மனைவி மற்றவர்களுடன் கட்டிப்பிடித்து நடனம் கற்பதும் நடனம் ஆடுவதும் சிம்புவுக்கு பிடிக்க வில்லை. நான் என்னதான் லண்டனில் இருந்தாலும் நாம் வெள்ளைக்காரன் இல்லை தமிழன் என்று சிம்பு கூறுவது அசத்தல். தன்னுடைய மனைவியை வெறுக்கவும் முடியாமல் மற்றவர்களுடன் ஆடுவது பிடிக்கவும் செய்யதால் தவிக்கும் காட்சிகளில் சிம்புவுக்கு மட்டும் கைதட்டலாம்....

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிம்பு முறைப்படி நடனம் கற்று ஆடினாரா..? அல்லது அவருடைய பாணியில் டப்பாங்குத்து ஆடி வெற்றிப்பெற்றாரா என்பது தான் கடைசி காட்சிகள்.... (அம்மாடி...)



சிம்பு நடிப்பின் அப்படி ஒன்று புதியதாக இந்தப்படத்தில் தெரியவில்லை. சிறிய கதை என்பதால் இந்த இருவரை சுற்றியே கதை நகர்கிறது. தன்னுடைய காதல் கதையை பல பிரிவாக பிரித்து கதைபோல் சொல்லி படம்முழுக்க வருகிறார். அதிகபடியாக பஞ்ச் டயலாக்குகளோ அல்லது விரல் வித்தைகளோ இதில் அதிகம் இல்லை...


நாயகி சரத்குமாருடைய மகளாம்.. ஆனால் இந்த கதைக்கு அவர் எப்படி பொருத்தமானவர் என்று இயக்குனர் முடிவெடுத்தார் என்றுதான் எனக்கு தெரியவில்லை. கதையோடு முழுக்க பொருந்தவில்லை என்றால் ஒரு சுமார் போட்டு ரசிக்கலாம்..


நகைச்சுவைக்கு சிம்புவின் எல்லாபடத்தில் வரும் கணேஷ்தான் இந்த படத்தில்  சிம்புவுக்கு சித்தப்பாவாக வருகிறார். நடனபள்ளி நடத்துபவராக ‌ஷோபனா என நடிகர் வட்டம் மிககுறைவு...


இசை தரண்குமார் என்பவர் பரவாயில்லை ரகம்தான் பாடல்கள் ஏதுவும் தியாட்டரில் ரசிக்கும் படி இல்லை.  லவ் பண்ணலாமா வேண்டாம என்ற பாடல் பரவாயில்லை அதில் சிம்புவின் டான்ஸ்ம் அருமை..


இயக்குனர் விக்‌னேஷ் சிவன் ஒரு காதல் ஜோடிக்குள் நடக்கும் ஒரு யாதார்த்த வாழ்க்கையை கதையாக கையாண்டு இருக்கிறார். இயக்குனருக்கு சபாஷ் சொல்ல வேண்டிய இடங்கள் என்று படத்தில் ஒரு காட்சிக்கூட இல்லை. 

2-ஆம், 3-ஆம் வகுப்பு ரசிகர்களை இப்படம் மகிழ்ச்சி படுத்த தவறிவிட்டது கடைசி ஒரு பாடல்காட்சிக்காக பலநாட்கள் ஓடும் என்று எதிர்பார்ப்பது தவறு...

என்னுடைய கருத்து...“ எங்கம்மா அப்பவே சொன்னாங்க சாப்பிட்டியா வீட்டுல ரஸ்ட்டு எடுன்னு... நான்தாங்க கேட்கல...”

12 November, 2012

மூன்றாம் ஆண்டு முதல் நாளும்...! தீபாவளி திருநாளும்..!


 என் இனிய பதிவுல உறவுகளுக்கு,
 நண்பர்களுக்கும், 
வாசக பெருமக்களுக்கும் 
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

கவிதை வீதி தளம் இன்று தன்னுடைய மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. கவிதை வீதியில் வளம்வந்து  எனது கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளுக்கும்  படித்து கருத்திட்டு ஆதரவு நல்கிவரும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

நன்றி..! நன்றி..!! நன்றி..!!!!

10 November, 2012

அதிரடியாக வரும் வடிவேலுவும், வருத்தப்படும் விஜய்யும்..!


விஜயகாந்தை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கிய வடிவேலு. தன்னுடைய பிரச்சாரத்தால் திமுக-வுக்கு எந்த பலனும் இல்லை என்ற பிறகு.. எதிர்த்தவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில் கிட்டதட்ட ஓரம்கட்டப்பட்டார். அவருடைய நகைச்சுவை விருந்தை தமிழக ரசிகர்கள் வெகுவாக இழந்து வாடினார்கள்.

தற்போது அடுத்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்கிறார் வடிவேலு. தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து அமைதி காத்தவர், இப்போது ஒரு பேட்டியில் அவரே முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார். ஏன் இத்தனை பெரிய இடைவெளி.. அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வடிவேலு, "ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிரடிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன்.


நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட் 2'. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு', யுவராஜோட 'தெனாலிராமன்', அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்'. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!'', என்று பதிலளித்துள்ளார். வடிவேலு ரசிகர்களுக்கு உண்மையிலேயே நல்ல செய்திதான்!


விஜய் தனது கெரியரில் எத்தனையோ முடிவு எடுத்துள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு முடிவை நினைத்து இன்றும் வருத்தப்படுகிறார்.


 இயக்குனர் தரணி தூள் படத்தின் ஸ்க்ரிப்ட்டை எடுத்துக் கொண்டு முதலில் விஜயிடம் தான் சென்றுள்ளார். கதையைக் கேட்ட விஜய் இதெல்லாம் ஒத்து வராது என்று தீர்மானித்து தரணியிடம் ஒரு சாரி சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். உண்மையில் அது தவறான முடிவு என்று விஜய் தற்போது உணர்ந்திருக்கிறார்.

தூள் படம் கிடைக்காத இழப்பை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்வார்களா இருவரும்.. பொருத்திருந்து பார்ப்போம்.

09 November, 2012

என்னது...! கருத்து சொன்னா போலீஸ்ல புடிக்கிறாங்களா...!


‌பேஸ்புக், டுவிட்டர், இணைய பதிவுகளில் இதுவரை என்னவேண்டுமானாலும் போடலாம்.. யாரை வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அது சமீபகாலமாக ஒரு பயத்தை ஏற்படுத்தி வருகிறது. தவறாக கருத்திட்டாலோ அல்லது அவதூறான கருத்துக்களையோ செய்திகளையோ பரப்பினால் கைது என்ற நிலை தற்போது நிலவுகிறது.


ஒரு தனிமனிதர் மீது, வார்த்தை வசைகள் தொடுப்பது மற்றும் அவர்கள் கருத்துக்கு மறுப்புகருத்து வெளியிடுவது என்ற எண்ணம் தற்போது குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.


தனிமனித தாக்குதல் என்பது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமி‌ர்தமும் நஞ்சுதானே... அது சரி யார் மீது தாக்குதல் இருக்க கூடாது.. எவர் ஒருவர் பொது வாழ்வில் ஈடுபடவில்லையோ அவர்கள் மீது கண்டிப்பாக அவதூறுகள் பரப்பக்கூடாது. ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவரைப்பற்றி கண்டிப்பாக விமர்சிக்ககூடிய உரிமை அனைவருக்கும் உண்டு.


அரசியலோ, கலைதுறையோ, அல்லது வேறு ஏதாவது முறையில் பிரபலமானவர் ஒரு கருத்தை சொல்லும் போது அதை எதிர்த்தோ மறுத்தோ கருத்துச்சொல்லக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. அப்படி சொல்வது தவறு என்றால் அந்த நபர் வாயை முடிக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது பொதுவாழ்க்கை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதிர்த்து வழக்கு தொடுப்பது அவர்களை கைது செய்து தன்னுடைய பலத்தை காட்டுவது இதெல்லாம் அயோக்கிய தனம் என்று தான் நான் சொல்லுவேன்.



அதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதூறு அல்லது அவமரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி சொன்னாலும் அதை ஏற்க்கொள்கிற மனபக்குவம் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வரவேன்டும்.


எங்க ஊர் கோயில் மரத்தடியில் உட்கார்ந்து இன்றைக்கு முதல்வர், பிரதமர், எ‌ன அத்தனை போரையும் கிழிகிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் அதற்காக அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைத்தால் அப்படியே  இந்தியாவில் இருக்கும் அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டியிருக்கும்.


தெருவுக்கு தெரு மேடைப்போட்டு அரசியல் கட்சிகளும் அடுத்தவர் பற்றி அவதூறு செய்திகளையும் வன்மையான வார்த்தைகளையும் சொல்லி வசைப்பாடிக்கொண்டிருக்கிறது. அவர்களை பற்றி அவர்களுக்கு எதிராக என்ன செய்துவிட்டார்கள். அந்தந்த கட்சி பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் போன்றோரின் பேச்சுகளை கேட்டால் போதும் அவ்வளவுதான் நம் காதுகள் பாழாகிவிடும்.

பொது ஊடகங்களில் பொதுவாழ்வில் இருப்போர் பற்றி அவர்களின் செயல் பாடுகள் மற்றும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக எதிர்கருத்தை மறுப்பு கருத்தை பதிவுசெய்யக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. கொஞ்சம் சபை நாகரீகம் கருதி செயல்பட்டால் போதும்.

என்பதிவுகளில் சிலபதிவுகளில் சில அரசியல் தலைவர்கள், சில பொது ஊடகங்களை விமர்சித்து அவர்களின் தவறை அல்லது அவர்களின் தவறாக கொள்கையை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு செயல் செய்யும் போது அதை பாராட்டினால் ஏற்றுக்கொள்பவர்கள் அதில் உள்ள குறைகளை சொல்லும்போதுமட்டும் பொங்குவது சரியல்ல.

08 November, 2012

நம் நாட்டை கேலி செய்கிறதா தி ஹிந்து நாளிதழ்.. ! இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது..?

சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று மாணவர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு கிராம மேம்பாடு மசோதாவைப் பற்றி பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் என்ன நடைபெறுகிறதோ அதே போல இருக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர். 


விவாதம் தொடங்குகிறது. ஒருவர் எழுந்து மசோதாவை வாசிக்கிறார்... மற்ற பிரிவினர் அவரை பேச விடாமல் தடுக்கின்றனர். நாற்காலியை தூக்கி அடிக்கின்றனர்.பேப்பரை கிழித்து முகத்தில் வீசுகின்றனர். ஒரே கூச்சல் குழப்பம் நிலவுகிறது. அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கூறுகிறார். அந்த மைக்கும் பிடுங்கி உடைக்கப்பட்டுகிறது. 


கூச்சல் சப்தம் குறைக்கப்பட்டு மெல்லிய இசை ஒலிக்க "பிஹேவ் யுவர் செல்ப், இந்தியா!. யூத் ஆர் வாட்சிங்'( இந்தியாவே நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்) என்ற வாசகங்கள் திரையில் ஒளிர்கின்றன. 


தி ஹிந்து நாளிதழ் தயாரித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம்தான் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. பெரும்பாலோனோர் விருப்பம் தெரிவிக்கும் இந்த விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து என்ன சொல்ல வருகிறது? இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையா? அல்லது வருங்காலத்தில் அரசியல் தலைவர்களாகப் போகும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனரா? இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்வு இதுதானா? தொலைக்காட்சிகளில் லோக்சபா, ராஜ்யசபா நிகழ்வுகள் ஒளிபரப்பாகின்றன. 


சில சமயங்களில் கூச்சல் குழப்பம் நிகழ்வதுண்டு. ஆனால் நாற்காலிகள் உடைக்கப்படுவதும், மைக் பிடுங்கி அடிக்கப்படுவதும்தான் நாடாளுமன்றத்தின் அன்றாட நிகழ்வு என்பது போல்தானே இந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 


இதை பார்க்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் தினசரி நிகழ்வே இதுதான் என்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா? தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் இடையேயான போர்தான் பெரும்பாலும் அவர்களின் விளம்பரங்களில் எதிரொலிக்கும். ஆனால் இப்பொழுது இந்த புதிய விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து நாளிதழ் சொல்ல வரும் தகவல்தான் என்ன? எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம் என்றால் விளம்பரத்தை, விளம்பரமாக பார்த்துவிட்டு விட்டுவிடுங்கள்....

அந்த விளம்பரம்...

06 November, 2012

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இணைந்திருப்போம்...


வீறுகொண்ட என் கவிதைகளுக்கு 
கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!

உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த 
அந்த ஒற்றை ரோஜாவை 
வெடுக்கென்று பறித்து சூடிக்கொண்டாய்... 
அதைகண்டு கண்ணீர் வடிக்கிறது 
என் கவிதைகள்..!

சிட்டுக்குருவி சிணுங்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுங்களை
நான் கவிதையாக்க...!

ஒற்றைப் பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும் 
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ...
காயப்பட்டு காத்திருக்கிறது 
என் வார்த்தைகள்...!

உன்னால் மட்டும்தான் முடிகிறது
நான் எழுதும் என் கவிதைகளுக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...

ஆயிரம் முறை எழுதிய 
உன்னைப்பற்றிய வர்ணனைகள்
எப்போதும் புதியதாகவே இருக்கிறது ...

அது எப்படி ஒவ்வொறு முறையும் 
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள் 
 உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது...!

இதுவரையில் முடியவில்லை
உன்னையும் காதலையும் கலக்காமல் 
கவிதையை முடிக்க..!

இருதரப்பிலும் எழுகிறது பிரச்சனைகள்
இருந்தாலும் காதலிப்போம்
என் கருவறையில் அவதரிக்கும்
தம் கவிதைகளுக்காக...!

வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி...!

05 November, 2012

தினமலரில் அரசு செய்தியும், அதிர வைத்த கருத்துக்களும்.


 //////////// தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ////////// என்று தினமலரில் ஒரு ‌அரசின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது...


அந்த செய்தியை படித்த நான், அந்த செய்தியில் வாசகர்கள் தந்த சில கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...

அவைகள் சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும், சுவாரஸ்யமாக இருந்தது அவைகளில் நான் ரசித்தவைகள் மட்டும் கீழே....

//////////s.maria alphonse pandian - chennai , இந்தியா
04-நவ-201211:11:03 IST Report Abuse
s.maria alphonse pandian எதற்கெடுத்தாலும் புரட்சி தலைவியை குறை சொல்வதெற்கென்றே ஒரு கூட்டம்....தடையில்லா மின்சாரம் வழங்காவிட்டாலும் தடையில்லா மது வழங்குகிறாரே...அதை பாராட்டலாமே? கல் நெஞ்சுகாரர்கள் ...///////////////

//////p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-நவ-201210:49:43 IST Report Abuse
p.manimaran சீக்கிரம் குடிச்சிட்டு சாவுங்கடா?? நாட்டில் மக்கள் தொகை குறையட்டும்.  ////////////

7malai - Chennai,இந்தியா
04-நவ-201209:46:21 IST Report Abuse
7malai பிள்ளைகளுக்கு 13 வகை உணவு வழங்கவேண்டுமானால் அப்பனிடம் இப்படி காசைப்பிடுங்கிதானே ஆகவேண்டும்.



AyyalurMagideshwaran - Muscat,ஓமன்
04-நவ-201209:15:00 IST Report Abuse
AyyalurMagideshwaran குடிச்சி குடிச்சி குடலெல்லாம் அரிச்சு, சந்துலயும் சகதிலயும் சாஞ்சு கெடந்து, மான மருவாதியெல்லாம் எழந்து, முடிவெடுக்க முடியாதபடி மூளையும் ஒருநாள் மக்கிப்போய் நீ சாகக்கிடக்க ரெண்டு நாளைக்கி முன்னாடியே தேர்தல் வரும்... அப்பவும் கூட நன்றிக்கடனா மீண்டும் இதே ஆட்சிக்கு ஓட்டுபோட்டுட்டு செத்துப்போவாயடா ஞானக்குடிமகனே...


SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
04-நவ-201208:41:00 IST Report Abuse
SENTHIL KUMAR (தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது) வாவ் சூப்பர்.. இது ஒரு நல்ல இலக்கு உங்கள் இலக்கு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.ஓட்டு போட்ட குடிமக்களின் ஆசையை நிறைவேத்தும் முதல்வர் அம்மா அவர்களே நீர் வாழ்க. 


arun kumar - UK,யுனைடெட் கிங்டம்
04-நவ-201208:10:11 IST Report Abuse
arun kumar ஜனநாயகக் கடமையாற்ற வாரீர் குடிமகன்களே ...




s.maria alphonse pandian - chennai ,இந்தியா
04-நவ-201206:44:25 IST Report Abuse
s.maria alphonse pandian நல்ல வேலை...காந்தி பிறந்த நாளன்று கடைகளை மூட மத்திய அரசின் ஆணை உள்ளது...இல்லாவிட்டால் அன்றைக்கும் 125 கோடிக்கான இலக்கை நிர்ணயித்திருப்பார்கள்...இந்த "டாஸ்மாக்" ஆட்சியாளர்கள்...


"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
04-நவ-201206:23:06 IST Report Abuse
தமிழனை தப்பவிடகூடதுன்னு "target" வச்சு அடிக்கிறான்யா..... ஆஹாஆ

saravanan - Tuas South Ave 06,சிங்கப்பூர்
04-நவ-201206:09:42 IST Report Abuse
saravanan இதுவும் அம்மாவின் ஓராண்டு சாதனையோ? தடையில்லா மின்சாரம் கேட்டா,நீங்க தடையில்லா மதுபானம் கொடுக்குறீங்க பெருமையா இருக்கு.குடிப்பவனை யாராலும் திருத்த முடியாது,குறைந்ததது அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுக்காமல் இருந்தால் போதும்.நீங்க செய்ற இந்த சாதனை இன்னும் பல குடிமகன்களை தமிழ்நாட்டுக்கு பெற்று தரும் என்பது என் கருத்து
ammaiyatimai - chennai,இந்தியா
04-நவ-201205:58:45 IST Report Abuse
ammaiyatimai அண்டா குண்டானவ அடகு வச்சு பத்தல பத்தல பத்தல மப்பு பத்தல. போத இறங்கி போச்சு பைத்தியம் புடிச்சி போச்சி என்ன செய்ய இப்ப......... அம்மா ஆயியம்மா விலையில்லா ஒரு கட்டிங் குடும்மா.................ஓம் கிரீம் கிலீம் மிடாஸ் ச்வாஹா..........புத்தி கெட்ட தமிழன் மரண குழிக்கு போஹா....

லாடு லபக்கு தாஸ்... - லாடு லபக்கூர், இந்தியா
04-நவ-201201:45:38 IST Report Abuse
லாடு லபக்கு தாஸ்... தீபாவளியன்று "சரக்கு&39 விற்பனை இலக்கு ரூ.125 கோடி என்பது போதுமானதாக இல்லை../// மேலும் முயற்சி செய்தால் 250 கோடி இலக்கை எளிதாக அடையலாம்..//

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:08:56 IST Report Abuse
tamil Selvan எல்லா மக்களுக்கும் விலையில்லா குவார்ட்டர் கொடுத்தா மின்சாரம் இல்லா நேரத்தில் கொசு கடி தெரியாமல் தூங்கலாம்,அரசின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கவே மின்வெட்டை அமல் படுத்துகிறார்கள். 

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:03:17 IST Report Abuse
tamil Selvan தமிழ்நாட்டில் எது தட்டுப்பாடு வந்தாலும் இவர்களுடைய மிடாஸ் கம்பெனி சரக்குக்கு மட்டும் தட்டுப்பாடே வராது.தீபாவளி வருது பிறகு கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பொங்கல் எல்லாம் வருது என்ஜாய் பண்ணுங்க மக்கா.


தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-நவ-201202:57:28 IST Report Abuse
தமிழவேல் ஆனா சரக்கு தரலைன்னா குடிமகன்க கிட்டேருந்து 70 கோடி கறக்க முடியாது......

Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
04-நவ-201203:18:46 IST Report Abuse
Sentamil karthikஒழுங்கான நிர்வாகம் கொடுக்க கூடியவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் ( இதை இன்னொரு முறை படியுங்கள் )... // இதை தான் இதையே தான் நானும் சொல்கிறேன் ... எங்கு கேட்கிறார்கள் அவர்கள் கண்களுக்கு கருணா , ஜெயா தவிர மற்றவர்கள் தெரிவதில்லை ... திமுக அப்படி செய்தது என்றால் அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா ?? என்கிறார்கள் .. இரண்டும் பணம் தின்னி கழுகுகள் என்று யாவரும் நன்கறிவர் ... இருப்பினும் அவர்களுக்கே ஓட்டை மாற்றி மாற்றி போடுவார்கள் ..நேர்மை , மனசாட்சி , தன்மானம் போன்றவை முதலில் இந்த கற்றோர் சபையான தினமலர் வாசகர்களிடமே இல்லை .. அப்பறம் எப்படி மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ???...

அந்த பக்கத்தை பார்க்க

//////////....இது என்னுடைய கருத்து....////////

ஒரு நாடும்  அந்த நாட்டின் அரசும் மக்களுக்கு எது நல்லதோ எது அவசியமோ அதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நாட்டில் இருந்து போதைப்பழக்கத்தை அறவே நீக்கிவிடமுடியாது அது சாத்தியமில்லாத விஷயம்தான். ஆனால் அதற்கான முயற்சியை துவங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இலைறை காய் மறைவாக இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொதுவான விஷயம்போல் ஆக்கியிருப்பதுதான் வேதனைக்குறியதாக இருக்கிறது.

குடியில்லாத சமுதாயம் செய்வோம்.....
Related Posts Plugin for WordPress, Blogger...