கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 November, 2012

சத்தியமா இதெல்லாம் ஊர்ல பேசிகிட்டதுங்க...!


சுப்பன் :தமிழகத்துக்கு மத்திய அரசு மின்சாரம் கொடுக்காததற்கு காரணம் கலைஞர்தானாம். 

குப்பன் : ம்... அப்படியா..?


சுப்பன் : தற்போது ஆளும் அதிமுக ஆட்சியின் மீது தொடர் மின்தடையால் மக்கள் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தந்து நிலமை சரியானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெருவது கடினமாகிவிடும்.

குப்பன் : அதனா‌ல...சுப்பன் : வரும் தேர்தல் வரை தமிழகத்துக்கு மின்சாரம் தராதீர்கள் அப்போதுதான் நம் கூட்டணி ஜெயிக்கும் என்று மத்திய அரசிடம் கலைஞர் கூறியிருக்கிறாராம்.

குப்பன் : ... இருக்கலாம்.. நம்ம தானைத்தலைவரை நம்பமுடியாது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவரே...!
*********************************


முனியன்: இ‌லங்கை சோகம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் திமுக பரபரப்பாக செயல் படுவதுபோல் காட்டிக்கொள்கிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஜ.நா-வுக்கும், மனித உரிமை தலைவர்களுக்கு அந்த  நகல்களை மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று கொடுத்து வந்தது ஈழத்தமிழர்கள் மீது உள்ள அக்கறை ஒன்றும் இல்லையாம்.


பக்கிரி : ம்.. அப்ப எதுக்காம்

முனியன்: ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் தன்னுடை மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அப்படியே இந்த நாடகம்.

பக்கிரி : சரிதாம்பா..! உண்மையான அக்கறை என்றால் அவர் ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவே இந்த வேலையை செய்திருக்கலாமே....?
**********************************

கந்தசாமி : அம்மாவிடம் அடங்காமல் இருந்த விஜயகாந்தை கொஞ்சம் அடக்கி வைக்கவே அந்த கட்சி எம்.எல்.ஏ-க்களை அம்மா இழுத்தார்களாம். 

முனுசாமி: ம்... அப்படியா..


கந்தசாமி : நிலைமை மோசமாவதை தொடர்ந்து தற்போது அம்மாவிடம் அடிபணிந்து போய் விட்டார். அதனால் தான் அந்த பிரச்சனை தற்போது அப்படியே மூடி மறைத்துவிட்டனர்.

இன்னும் மீதமிருக்கும் நாட்களில் தன்னுடைய எதிர்கட்சி தலைவர் என்ற பத‌வியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த அமைதியாம்.... அதான் படம் எடுத்த பாம்பு பணிய ஆரம்பிச்சிடிச்சி...

முனுசாமி: அப்பன்னா இவரை எம்ஜிஆர்-ன்னு கூப்பிடறாதா.. நம்பியார்ன்னு கூப்பிடறதா...

********************************

ராமு: தமிழகத்தில் மின் வெட்டுக்கு முக்கிய காரணம் அம்மா தான்
 

சோமு : அப்படியா... ஏன் இதுமாதிரி செய்யுராங்க..
 

ராமு : தமிழகத்தில் இதுமாதிரி மின்பற்றாக்குறை காட்டினாதான் கூடங்குள பிரச்சனை எழாது அப்புறம் இதையே காரணம் காட்டி மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வாங்கிடனுன்னு அம்மா பிளானாம்...
 

சோமு : ஓ... அப்படியா சங்கதி... இந்த விளையாட்டு எப்ப முடியும்...
 

ராமு : அது... ‌ அம்மாவுக்கு மட்டுமே தெரியும்...!

********************************
மறுபடியும் சொல்றேங்க இதை நான் சொல்லல.. ஊர்ல பேசிகிட்டது...

14 comments:

  1. சரிங்க..இதை நீங்க சொல்லல.. ஊர்ல பேசிகிட்டது...
    ஒத்துக்கிறேன்..

    ReplyDelete
  2. நம்பிட்டேனுங்க நானும்.

    ReplyDelete
  3. நானும் நம்பறேங்க!

    ReplyDelete
  4. உங்க ஊருல நல்லாவே பேசிக்குறாங்கப்பா!

    ReplyDelete
  5. சரியாத்தான் பேசறாங்க போல!

    ReplyDelete
  6. அன்பின் சௌந்தர் - இதெல்லாம் ஊர்ல பேசிக்கறது தான் - நமம் காதுல வந்து விழுகிற செய்திகள் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. ஆமா நண்பரே...
    எங்க ஊர்ல கூட பேசினாங்க...
    ம்கூம் ...

    ReplyDelete
  8. நம்பிட்டோம்........இதெல்லாம் ஊர்ல மட்டும் தான் பேசுறாங்களா என்ன!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. ஊர்ல தான் பேசியிருப்பாங்க -நம்புறேன்

    ReplyDelete
  10. விளையாட்டுகள் விபரீதங்களில் அல்லவா முடிகிறது.நல்ல் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...