கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 November, 2012

போடா போடி திரை விமர்சனம் / podaa podi cinema review


இன்று காலையில் இருந்து வீட்டில் தான் இருந்தேன். பட்டிமன்றங்கள் முடிந்த‌ை கையோடு சில சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்று தீபாவளி மின்தடை ஏற்பாடாது என்று சத்தியம் செய்தார்கள் சிலர். ஆனால் வழக்கம்போம் சரியாக 12.00 மணிக்கு நம் மின்சார வாரியம் சரியாக தன்கடமையை செய்தது. அதற்குமேலும் வீட்டில் இருக்க மனம் இருப்புக்கொள்ள வில்லை அதனால் கிளம்பி திருவள்ளூர் வந்தேன். நண்பர் கருண்க்கு போன் போட்டால் மாலைதான் வருவேன் என்று சொல்லி விட்டார். மாலையில் துப்பாக்கி பார்ப்போம் என்று முடிவானது. சரி இன்னும் நேரம் இருக்கிறதே அதற்குள் தனியாக போடா போடியை பார்த்தாலென்ன என்ற விபரீத ஆசை தோன்றியது.

வீட்டில் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு சரியாக 2.00 திருவள்ளூர் நகரத்தை அடைந்தேன். திருவள்ளூர் கிருஷ்ணா திரையரங்கில் போடா போடி படம் போடப்பட்டிருந்தது. கூட்டம் அலைமோதும் என அடித்துபிடித்து தியாட்டர் சென்றால் அங்கு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் இருந்தது. படம் வழக்கமான நேரத்தில் 02.10 -க்குதான் ஆரம்பித்தார்கள்.

சரி தாம்மட்டும் படம்பார்த்து விட்டு அமைதியாக இருந்துவிட்டால் நல்லது அல்ல என்று தோன்றியது அதனால் துப்பாக்கி (மாலை 06.15) பார்க்கும் இந்த இடைவெளியில் இந்த பதிவு.


பிரபுதேவா இயக்கத்தில் “எங்கேயும் காதல்” படம் பார்த்தவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் எளிமையாக புரிந்துவிடும். அந்த படத்தில் இன்னோறு பகுதியே போடா போடி... அந்த படம் பாரீஸ்.. இந்த படமும் முழுக்க லண்டன்...  முழுக்கமுழுக்க லண்டன் நகரத்தில் படமாக்கி முடித்திருக்கிறார்கள்

கதைக்கு வருகிறேன்.. இந்த படத்தில் கதை சரியில்லை என்று யாரும  சொல்ல முடியாது ஏனென்றால் அந்த சமாச்சாரம்மெல்லாம் இந்த படத்தில் பெரிசாக இல்லை. நாயகன் சிம்பு, நாயகி வரலட்சுமி ஆனால் திரையில் வரு சரத்குமார் என்றே போடுகிறார்கள். 


ஒரு பெண்னை பார்த்து காதலித்து திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார். அவர்கண்ணில் வரு பட உடனே காதல்.. உடனே திருமணம்... என முடிய அடுத்து ஆரம்பிக்கிறது குடும்பத்துக்குள் சண்டைகள்...


நாயகி வரு ஒரு டான்ஸர்.. லண்டனில் நடக்கும் ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற வேண்டும் என்ற கொள்கையோடு நடன பயிற்சியில் ஈடுபடுகிறார். இவர் இப்படி கலந்துக்கொண்டு நடனத்தில் ஆடுவது சிம்புக்கு பிடிக்க வில்லை. அதை தடுத்த நிறுத்த பல்வேறு ‌ஐடியாக்களை போட்டு தடுக்கிறார்  இறுதியாய் குழந்தை பிறந்தால் ஆடுவது தடைப்படும் என முடிவெடுத்து குழந்தையும் பிறக்கிறது.

தன்னை ஆடவிடாமல் தடுக்கவே குழந்தை முயற்சி என நாயகிக்கு தெரியவர வெறுத்து பிரிகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஒரு விபத்தில் குழந்தை இறக்க நேரிடுகிறது. இதை காரணம்காட்டி நாயகி பிரிகிறார்.

இங்கு இடை‌வேளை விடுகிறார்கள் அம்மாடி என்று பெருமூச்சி திரையரங்கம் முழுவதும் எதிரொலித்தது. அப்படி படத்தின்வேகம் குறைவான இருந்தது. பாதிபேர் அப்போதே நடையை கட்டலாம் என தீர்மானித்தார்கள். ஆனால் தியாட்டரில் தான் கதவை திறக்கவில்லை.

அடுத்த பகுதியில் மீண்டும் இவர்கள் இணைய... டான்ஸ் போட்டியில் கலந்துக்கொள்வதில் இருவருக்கும் மனகசப்பு ஏற்படுகிறது அப்படி மற்றவர்களுடன் ஆடுவது பிடிக்க வில்லை ‌யென்றால் நீயே என்னோடு போட்டியில் ஆடு என நாயகிகூற பின்பு படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது.


தன்னுடைய மனைவி மற்றவர்களுடன் கட்டிப்பிடித்து நடனம் கற்பதும் நடனம் ஆடுவதும் சிம்புவுக்கு பிடிக்க வில்லை. நான் என்னதான் லண்டனில் இருந்தாலும் நாம் வெள்ளைக்காரன் இல்லை தமிழன் என்று சிம்பு கூறுவது அசத்தல். தன்னுடைய மனைவியை வெறுக்கவும் முடியாமல் மற்றவர்களுடன் ஆடுவது பிடிக்கவும் செய்யதால் தவிக்கும் காட்சிகளில் சிம்புவுக்கு மட்டும் கைதட்டலாம்....

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிம்பு முறைப்படி நடனம் கற்று ஆடினாரா..? அல்லது அவருடைய பாணியில் டப்பாங்குத்து ஆடி வெற்றிப்பெற்றாரா என்பது தான் கடைசி காட்சிகள்.... (அம்மாடி...)



சிம்பு நடிப்பின் அப்படி ஒன்று புதியதாக இந்தப்படத்தில் தெரியவில்லை. சிறிய கதை என்பதால் இந்த இருவரை சுற்றியே கதை நகர்கிறது. தன்னுடைய காதல் கதையை பல பிரிவாக பிரித்து கதைபோல் சொல்லி படம்முழுக்க வருகிறார். அதிகபடியாக பஞ்ச் டயலாக்குகளோ அல்லது விரல் வித்தைகளோ இதில் அதிகம் இல்லை...


நாயகி சரத்குமாருடைய மகளாம்.. ஆனால் இந்த கதைக்கு அவர் எப்படி பொருத்தமானவர் என்று இயக்குனர் முடிவெடுத்தார் என்றுதான் எனக்கு தெரியவில்லை. கதையோடு முழுக்க பொருந்தவில்லை என்றால் ஒரு சுமார் போட்டு ரசிக்கலாம்..


நகைச்சுவைக்கு சிம்புவின் எல்லாபடத்தில் வரும் கணேஷ்தான் இந்த படத்தில்  சிம்புவுக்கு சித்தப்பாவாக வருகிறார். நடனபள்ளி நடத்துபவராக ‌ஷோபனா என நடிகர் வட்டம் மிககுறைவு...


இசை தரண்குமார் என்பவர் பரவாயில்லை ரகம்தான் பாடல்கள் ஏதுவும் தியாட்டரில் ரசிக்கும் படி இல்லை.  லவ் பண்ணலாமா வேண்டாம என்ற பாடல் பரவாயில்லை அதில் சிம்புவின் டான்ஸ்ம் அருமை..


இயக்குனர் விக்‌னேஷ் சிவன் ஒரு காதல் ஜோடிக்குள் நடக்கும் ஒரு யாதார்த்த வாழ்க்கையை கதையாக கையாண்டு இருக்கிறார். இயக்குனருக்கு சபாஷ் சொல்ல வேண்டிய இடங்கள் என்று படத்தில் ஒரு காட்சிக்கூட இல்லை. 

2-ஆம், 3-ஆம் வகுப்பு ரசிகர்களை இப்படம் மகிழ்ச்சி படுத்த தவறிவிட்டது கடைசி ஒரு பாடல்காட்சிக்காக பலநாட்கள் ஓடும் என்று எதிர்பார்ப்பது தவறு...

என்னுடைய கருத்து...“ எங்கம்மா அப்பவே சொன்னாங்க சாப்பிட்டியா வீட்டுல ரஸ்ட்டு எடுன்னு... நான்தாங்க கேட்கல...”

10 comments:

  1. ஏற்கனவே எனக்கு இந்தப்படம் அவுட் ஆப் லிஸ்ட்... இதுல நீங்க வேற இப்படி சொல்லிட்டீங்களா... அவ்வளவுதான்...

    ReplyDelete
  2. போடா போடி போயிந்தா...
    கோவிந்தா... கோவிந்தா

    ReplyDelete
  3. // ஆடுவது பிடிக்க வில்லை ‌யென்றால் நீயே என்னோடு போட்டியில் ஆடு என நாயகிகூற பின்பு படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது.// ராப் நே பநாதி ஜோடி கூட கொஞ்சம் இப்படித் தான் இருக்கும்

    // எங்கம்மா அப்பவே சொன்னாங்க சாப்பிட்டியா வீட்டுல ரஸ்ட்டு எடுன்னு... நான்தாங்க கேட்கல...”// ஹா ஹா ஹா

    ReplyDelete
  4. மொக்கை படத்துக்கு போய் காசை வேஸ்ட் பண்ணிட்டியேன்னு உங்கம்மா உங்களை வெளில ”போடா”ன்னு திட்ட..., உங்களுக்கு சப்போர்ட் பண்ண வந்த உங்க தங்கச்சியை “போடி” உள்ளேன்னு திட்டுனதா காத்து வாக்குல ஒரு சேதி..., நிஜமா சகோ?!

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - நீண்டதொரு விமர்சனம் - ஒவ்வொரு காட்சியினையும் இரசித்துப் பார்த்து ( ??? ) எழுதப்பட்ட விமர்சனம். நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நண்பரே அதான் டைட்டிலிலேயே வைத்துவிட்டானே போடா போடின்னு அது நம்மள தான். பாக்க வர்றவங்கள போடா போடின்னு விரட்டுற படத்துல போய் உட்கார்ந்திருக்கீங்களே

    ReplyDelete
  7. street dance படத்தின் உல்டா என்று கேள்விப்பட்டேன்

    ReplyDelete
  8. அடடா! தீபாவளியும் அதுவுமா இப்படியா லேகியம் சாப்பிட்டு கஷ்டப்படுறது! இதுக்குத்துதான் சொன்ன பேச்சை கேக்கணும்கறது!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...