கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 December, 2012

வருடத்தின் கடைசி 10 நாளில் ஹிட்ஸ் எடுக்க பரபரப்பான 10 தலைப்புகள்...!வணக்கம் நண்பர்களே
இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிந்து விடப்போகிறது. ஆண்டு இறுதி என்றாலே பதிவு எழுதுபவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது சினிமா பற்றிய பதிவுகளாகத்தான் இருக்கும்.

சினிமா பதிவுகளுக்கு அதிகமான ஹிட்ஸ்களும் கிடைக்கும் திரட்டிகளின் தர பட்டியலில் முன்னிலை வகிக்க அல்லது முன்னிலை பெற பரபரப்பான தலைப்புகளில் பதிவுகள் வரம். அப்படி அதிக ஹிட்ஸ் எடுக்க தேவையான 10 தலைப்புளை இங்கு தொகுத்திருக்கிறேன். அவைகளை பயன்படுத்தி அதிக ஹிட்ஸ் எடுத்து வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறேன். (அப்பா.... இப்படி ஒரு பதிவு போட்டு நாமலும் ஹிட்ஸ் தேத்தியாச்சி... ரைட்டு)


சினிமா பத்திய பதிவுகளுக்குதான் வாசகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ஆகையால் சினிமாபத்திய பதிவுகளுக்கு முன் முன்னுரிமை.தலைப்பு - 1.
2012-ல் கலக்கிய டாப் 10 திரைப்படங்கள்


இதில் இந்தவருடம் திரைக்கு வந்து நல்ல வசூலை வாரிய OK OK, நான் ஈ, துப்பாக்கி, நண்பன், கலகலப்பு, போன்ற படங்களை தொகுத்து ஒரு பதிவிடலாம்.

தலைப்பு - 2.
2012-ல் சொதப்பிய டாப்பா 10 திரைப்படங்கள்


இப்படி தலைப்பிட்டு எதிர் பார்த்து ஓடாதா பில்லா-2, முகுமூடி, தாண்டவம் போன்ற படங்களை தொகுத்து கொடுக்கலாம்.

தலைப்பு - 3.
2012-ல் பேசப்பட்ட டாப் 10 திரைப்படங்கள்

என தலைப்பிட்டு இதில் குறைந்த மூதலீட்டில் வந்து நன்றாக ஓடிய சிறந்தப்படங்களை பட்டியலிடலாம் உதாரணத்திற்கு நான் ஈ, சாட்டை, பீட்சா, தோனி, அட்டகத்தி, போன்றவை.


தலைப்பு - 4.
2012 பவர் ஸ்டாருக்கு எப்படியிருந்தது....

என தலைப்பிட்டு இந்த வருடம் பவர் ஸ்டாருக்கு எற்பட்ட ஏற்ற இறக்கங்களை பட்டியலிடலாம். இதற்கு எல்லாவற்றையும் விட அதிக ஹிட்ஸ் கிடைக்கும். இதற்கு நான் உத்திரவாதம். (இந்த தலைப்பில் கண்டிப்பாக ராஜபாட்டை ராஜாவிடம் இருந்து ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்)

தலைப்பு - 5.
விஜயின் துப்பாக்கி, அஜித்தின் பில்லா-2 இதில் எது டாப்பு எது டூப்பு...

என தலைப்பு மட்டும் போட்டுவிட்டு எதை எழுதினால்ம் அதிக ஹிட் கிடைத்து விடும்.

தலைப்பு - 6.
2012-ல் அதிகம் பேசப்பட்ட பரபரப்பான கிசுகிசுக்கள்.

என தலைப்பிட்டு சிம்பு, திரிஷா, நயன்தாரா போன்றோரின் கிசுகிசுக்களை தொகுக்கலாம்.

தலைப்பு - 7.
2012-ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 நகைச்சுவைப்படங்கள்

இதில் கலகலப்பு, OK OK , போன்ற படங்களை தொகுத்து வெளியிடலாம்.

தலைப்பு - 8.
2012-ல் வெளிவந்த மொத்த தமிழ் படங்கள்

என்ற தலைப்பில் 2012-ல் வெளிவந்த தமிழ்படங்களை தொகுத்து வெளியிடலாம். இது கொஞ்சம் கடினமான வேலையாக இருக்கும் பாத்துக்கங்க.

தலைப்பு - 9.
ஷங்கரும், பாலாவும் ஏன் இப்படி பண்ணாங்க...!

என்ற தலைப்பில் ஷங்கர் நண்பன் ரீமேக், பாலாவின் பரதேசி படத்தை அலசலாம்.

தலைப்பு - 10.
2012-ல் அல்லது 2013-ல் கனவுக்கன்னி யார்...?

இப்படி தலைப்பிட்டாலும் ஹிட்ஸ் அல்லும்.

என்ன மக்களே மேற்கண்ட தலைப்புகளில் பதிவுகள் போட்டுதாக்கி ஹிட்ஸ்களை அள்ளுங்க... இப்படி ஒரு பதிவு போட்ட எனக்கு ஏதாவது சொல்லிட்டுப் போங்க...

15 comments:

 1. இது போங்கு ஆட்டம் நேற்றே இந்த ரகசியத்த வெளியிட்டுட்டன்.. இருந்தாலும் எக்ஸ்ட்ராவா நாலு இருக்கே.. கலக்கல் தல

  //ஷங்கரும், பாலாவும் ஏன் இப்படி பண்ணாங்க...!/

  ஆமா இது என்னா மேட்டர்

  ReplyDelete
  Replies
  1. நாமளே ஏதாவது ஒரு மேட்டரை போட்டு தாக்கனும்...

   Delete
 2. இது நல்ல ஐடியாவா இருக்கே !!!

  ReplyDelete
 3. //இந்த தலைப்பில் கண்டிப்பாக ராஜபாட்டை ராஜாவிடம் இருந்து ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்//

  தலைவனின் விழுதுகள் ஆயிரம் இருந்தாலும் வாத்தி எழுதினாலே அது தனி ராக்ஸ் தான்

  ReplyDelete
 4. நீங்க சொன்ன மாதிரி பதிவெல்லாம் ரெடி பண்ணி பப்ளிஷ் பட்டனைத் தட்டுவதுதான் பாக்கின்னு நிறைய பேர் காத்துகிட்டு இருந்த சமத்தில் இப்படி பெரிய ஆப்பா வச்சிட்டீங்க!! ஹா....ஹா....ஹா....

  ReplyDelete
 5. ஆமா நாளையோட உலகமே அழியுதாம் இதுல அடுத்த ....

  ReplyDelete
  Replies
  1. இதையும் ஒரு தலைப்பா போட்டிருக்கலாம்...

   ஆனா இந்த தலைப்புல நிறை பதிவுகள் வந்திடுச்சி அதான் விட்டுட்டேன்...

   நல்லது சகோதரி...

   Delete
 6. ஐடியா திலகமே! வாழ்க!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...