கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 December, 2012

முடியலடா சாமி...! இதெல்லாம் உங்களுக்குதாங்க...

 

தொண்டன் 1 : தலைவர் பேசிகிட்டு இருக்கும்போது, ஏதோ கல்லை எடுத்துக் காட்டுறாரே.. எதுக்கு..?

தொண்டன் 2 : அது தான் அவரோட அரசியல் வாழ்வில் மைல் கல்லாம்...!

**********************************

நிருபர் : உங்க வீதிக்கு திடீர்ன்னு கமாராஜர் தெருன்னு பேர் வச்சிருக்கீங்களே எதுக்கு...

அரசியல்வாதி : அதுவா.. நாங்க காமராஜர் வழியிலே நடப்போம்ன்னு சொன்னோம்ல அதுக்காகத்தான்...!

**********************************


நர்ஸ் 1 : ஆப்ரேஷன் பண்றப்ப பயன்படுத்துற ஆயுதங்கள் எல்லாத்தையும் டாக்டர் நோயளிக்கிட்டே காமிக்கிறாரே.. ஏன்..?

நர்ஸ் 2 : மயக்க மருந்து தீர்ந்து போச்சாம். பேஷண்டுக்கு மயக்கம் வரவைக்க ட்ரை பண்ராராம்..!

**********************************


தொண்டன் 1 : தலைவர் தன்னோட சின்ன வீட்டையும் இந்த கல்யாண விழாவுக்கு கூட்டிகிட்டு வந்திருக்கிறரே...

தொண்டன் 2 : பத்திரிக்கையில் “இரு வீட்டார் அழைப்பு“ -ன்னு போட்டிருக்கிறதாம் அதான்...!

**********************************

தொண்டன் 1 : கட்சி கூட்டத்தில கணக்கு கேட்டவரைப்பார்த்து தலைவரு ஏன் ஆச்சர்யப்பட்டாராம்..?
தொண்டன் 2 : அட .. நம்ம கட்சியில கூட கணக்கு வழக்கு தெரிஞ்சவன் இருக்கானேன்னு அசந்து போயிட்டாராம்.

**********************************

போதுண்டா சாமி...

9 comments:

 1. உடனே அந்த டாக்டரையே போய் பார்கிறேன் முடியல

  ReplyDelete
 2. புன்னகை வரவழைக்கிற நகைச்சுவைகள். கடைசிபடம் செம காமெடி.

  ReplyDelete
 3. கடைசி படம் சூப்பர்.

  ReplyDelete
 4. ஆமா, எஸ்,எம்.எஸ் வெச்சே பதிவை தேத்தலாம்ன்னு முடிவு பண்ணீட்டீங்களா!?

  ReplyDelete
 5. படங்களும் கமெண்ட்டும் அசத்தல்.

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா !!!
  செம சிரிப்பு நண்பா. ரசித்தேன்.

  ReplyDelete
 7. அன்பின் சௌந்தர் - சூப்பர் ஜோகெஸ் - படமெல்லாம் அத வுட சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...