கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 December, 2012

அலெக்ஸ் பாண்டியன் - ரஜினி பாணியில் கார்த்தி ஒரு முன்னோட்டம்


2012-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் சகுனி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதை ஈடுகட்டும் வகையிலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அலெக்ஸ் பாண்டியனாய் அவதாரம் எடுக்கிறார் கார்த்தி.

பொதுவாக பழைய படப்பெயர்களை எடுத்து கையாளம் இக்காலத்தில் ரஜினி நடித்த மூன்று முகம் படத்தில் பெரியதாய் பேசப்பட்ட ரஜினியின் கதாப்பாத்திரத்தின் பெயரை படத்துக்கு சூட்டியுள்ளார்கள். படமும் ஆரம்பகால ரஜினி ஸ்டைலில் சண்டை நகைச்சுவை என ஒரு மசாலா படத்தை போன்று அமைத்திருப்பாக தெரிகிறது.


கார்த்தி நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’. பருத்தி வீரன்’ முதல் ‘சகுனி’ வரை கார்த்தி வெளிப்பட்ட விதம் வேறு. இப்படத்தில் வெளிப்படும் விதம் வேறு. முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்து விஸ்வரூபமாக வெளிப்படுகிறார்.
 ‘சிறுத்தை’, ‘சகுனி’ படங்களில் கார்த்தியின் நண்பனாக வந்து கலக்கிய சந்தானம் இந்த படத்தில் அவரின் எதிரியாக நடித்திருக்கிறார். இருவருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. சந்தானம் வீட்டில் வந்து சொந்தக்காரராக தங்கும் கார்த்தியை விரட்ட சந்தானம் போடும் திட்டங்கள் எல்லாமே ‘பணால்’ ஆக, கார்த்திக்கு சாதகமாக முடியும் ஒவ்வொரு கட்டமும் நகைச்சுவைக்கு உத்தரவாதம்.

‘அலெக்ஸ் பாண்டியன்’ காமெடி பாதி, ஆக்ஷன் பாதி என்று உருவாகி வரும் படம். பொதுவாகவே சுராஜ் இயக்கும் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். இதில் ஆக்ஷன் கொடியையும் உயரத்தில் தூக்கி பிடித்துள்ளார்.
 
 யார் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஜாலியான பொறுப்பில்லாத இளைஞன்தான் கார்த்தி. அவரை, சந்தானம் ஏன் தன் பக்கத்தில் சேர்க்க மறுக்கிறார். வீட்டிற்கு விருந்தாளியாக வந்தவரை விரட்டியடிக்கத் துடிப்பது ஏன் ? பொறுப்பில்லாத கார்த்திக்கு பெரிய பெரிய எதிரிகள் எப்படி உருவாகிறார்கள், அவர்களை கார்த்தி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் என்பதே படத்தின் கதை. அனுஷ்கா எப்படி கார்த்தியிடம் காதலில் விழுகிறார் என்பது இளமையான, இனிமையான சுவாரசியம்.
 
ஒரு வெற்றிகரமான நடிகரா தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அயராது உழைப்பவர் கார்த்தி. ஓடும் ரயில் மீது ஏறி சண்டை போடும் காட்சிகளில் அபாயம் பற்றிக் கவலைப்படாமல் அசத்தியுள்ளார். தன் தகுதியை உயர்த்திக் கொள்ள இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்.
 
கவர்ச்சிகரமான நாயகியாக வலம் வரும் அனுஷ்கா இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். காலை ஏழு மணிக்கே படப்பிடிப்புக்கு வந்து அவருடைய ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். உடை மாற்ற கேரவனுக்கு கூட போகாமல் செட்டுக்குள்ளேயே உடை மாற்றி நேரத்தை மிச்சப்படுத்தி படத்திற்காக அவர் ஒத்துழைப்பு கொடுத்ததை யூனிட்டே பாராட்டியுள்ளது.
 
வில்லன்களாக மிலிந்த் சோமன், சுமன், மகாதேவன், நடித்திருக்கிறார்கள். மனோபாலா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத், சாலக்குடி, விசாகப்பட்டிணம், மைசூர் ஆகிய தென்னிந்திய இடங்களிலும், மும்பையிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஓடும் ரயிலின் கூரையிலிருந்து கார்த்தியை வில்லனின் ஆட்கள் ஹெலிகாப்டரில் துரத்தும் காட்சியை படமாக்க இந்தியாவில் பல இடங்களைத் தேடி கடைசியில் , மைசூருக்கு அருகில் படமாக்கியுள்ளார்கள்.
 
இக்காட்சிக்காக ரயில் ஒன்றை தினமும் ஏழு லட்ச ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து பத்து நாட்கள் படமாக்கியுள்ளார்கள். கலை இயக்குனர் பிரபாகர் அமைத்துக் கொடுத்த 12 செட்களில் பாடல்களை படமாக்கியுள்ளார்கள்.
 
கார்த்தி நடிக்கும் படத்திற்கு முதன் முறையாக தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களை வாலி, பா.விஜய், விவேகா எழுதியுள்ளனர்.
 
இப்படத்தில் இடம் பெறும் ரயில், ஹெலிகாப்டர், கார் துரத்தல் காட்சிகளை ரசிகர்கள் சிலிர்க்கும் வகையில் ஆக்ஷன் இயக்குனர் கணேஷ் அமைத்துக் கொடுத்துள்ளார் .
 
இறுதிக் கட்டப் பணிகளில் உள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ பொங்கல் வெளியீடாக வர உள்ளது. (நன்றி சினிமா தளங்கள்)

4 comments:

  1. இவருடைய ஆக்ஷன் படம் சிறுத்தை சொல்லிச்சே இவருக்கு ஆக்ஷன் செட்டாகாது என்னு...
    பொருத்திருந்து பார்ப்போம் சகுனியா இல்லை சிறுத்தையா இல்லை...இரண்டும் கலந்ததா அலெக்ஸ் பாண்டியன் என்று

    ReplyDelete
  2. நல்லதொரு முன்னோட்டம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பிரிச்சி ஒரு கை பார்த்துருக்கிங்க அண்ணே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...