கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 December, 2012

ரஜினி கொண்டாட வேண்டிய மனிதர் தானா..? உண்மையை தயங்காமல் சொல்லுங்கள்


ரஜினி...! திரைவுலகம் இருக்கும்வரை அவ்வளவு எளிதில் மறைக்கமுடியாத உச்ச நட்சத்திரமாய் என்றும் மின்னிக்கொண்டிருப்பார். அவரது முதல் படமான அபூர்வ ராகங்களில் இருந்து  அடுத்து வெளிவர இருக்கும் கோச்சடையான் வரை அவரது படங்களின் எதிர்ப்பார்புகள் 6-ல் இருந்து 60 வரை உள்ள அனைத்து ரசிகர்களுக்கு இருக்கிறது.

சிலர் அப்படி என்ன சாதித்து விட்டார். அவருக்கு ஏன் இந்த பாராட்டுகள் என்று மார்தட்டலாம். என்னுடைய கருத்தின் படி அவர் என்னதான் செய்ய வேண்டும். ஒரு தனிமனிதன் தன்னுடைய பொது வாழ்வில் தூய்மையாக இருந்தாலே போதும். அந்த குணமே அவரை பாராட்ட போதுமானது ஆகும்

ஒருவரை பாராட்ட அவர் கொடை வள்ளலாக இருக்க வேண்டும் என்றோ அல்லது இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன்னுடைய குணாதசியங்களால் மற்றவரை ஈர்த்தாலே போதும்.திரைவுலகில் இருக்கும் அத்தனைப்போரும் ஒருமனதாக ரசிக்கும் ஒரே மனிதர் ரஜினி மட்டுமே. பொதுவாக திரையில் வரும் ஒரு முகம் நேரடியாக பார்த்தாலோ அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டலோ பொது மக்களிடம் ஒரு அந்த தகவலை பார்க்க கேட்க என ஈர்ப்பு இருக்கும். 

பொது மக்கள் அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் சாதாரன ஒரு சின்னத்திரையில் வரும் நடிகர் வந்தால் கூட அவரைச்சுற்றி மக்கள் கூடிவிடுவார்கள். அதற்காக அவர் என்ன செய்துவிட்டார். அவரை ஏன் இவ்வளவு பேர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பது தவறு.


தன்னை கொண்டாட வேண்டும், தன்னை மக்கள் பண்பாடவேண்டும், ஊர் முழுக்க தன்னுடைய படங்களை ஒட்டி கொண்டாட வேண்டும் என்று ஒரு சில நடிகர்கள் வேண்டும் என்றால் விரும்பலாம் ஆனால் பெரும்பாலான நடிகர்கள் இந்த வட்டத்தில் வருவதில்லை. ரஜினி அந்த வரிசையில் முதல் ஆள். அவர் சொன்னால் வாரம் ஒரு விழா ஏற்பாடு செய்கிற ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால் ரஜினி அதை விரும்புவதில்லை.

படம் தோல்வி அடைந்தால் அதற்காக நஷ்டத்தை திருப்பி கொடுத்த ஒரு நடிகர் திரைவுலகில் இருக்கிறார் என்றால் சொல்லுங்கள் பார்ப்போம். சொடிந்த தயாரிபாளர்களுக்காக படம் நடித்த கொடுத்த ஒரு ஹூரோ இங்கு வேறு யாராவது இருக்கிறார்களா..? 

இன்னும் தன்னை சுற்றியிருக்கிற பல்வேறு நண்பர்களுக்கும், சுற்றத்திற்க்கும் சத்தமில்லாமல் உதவி செய்துக்கொண்டிருக்கும். நட்சத்திரங்ள் மிகக்குறைவே. அந்தவையில் ரஜினி கொண்டாட வேண்டிய மனிதர்தான்.


ஒரு மனிதரை பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக அவரை வசைப்பாட வேண்டும் என்று சிலர்மாத்திரம்தான் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உயர்ந்த மனிதரை அவருடைய பிறந்த நாளான ஒரு உன்னதமாக வரும் 12-12-12 என்ற தேதி வரிசையில் அவரை வாழ்த்தாமல், புகழால் இருக்க முடிவில்லை...

மங்காத திரைச்சூரியனுக்கு ஒளிரும் நட்சத்திரங்களின் வாழ்த்தோடு என்போன்ற மின்மினிகளின் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள் தலைவா...!

11 comments:

 1. மகாவதார் பாபாஜியின் ஆசிகளும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துகளும்

  ReplyDelete
 2. சத்தமில்லாமல் உதவி செய்துக்கொண்டிருக்கும். நட்சத்திரங்ள் மிகக்குறைவே. அந்தவையில் ரஜினி கொண்டாட வேண்டிய மனிதர்தான்.

  எனது வாழ்த்துக்களும் சேரட்டும்.

  ReplyDelete
 3. உலகமே கொண்டாடும் ஒரு "மனிதரை" நான் கொண்டாடினால் என்ன?

  ReplyDelete
 4. ரஜனி வெற்றியின் சிகரம்.....
  என்னுடைய வாழ்த்தும் சூப்பர்ஸ்டாருக்கு

  ReplyDelete
 5. ரஜனி கொண்டாட வேண்டிய மனிதர்தானா என்பதற்கு இரு எதிர் கேள்விகளே பதிலாக இருக்க முடியும்!

  1. ஒரு சினிமா நடிகன். சினிமாவைத்தவிர வேறொன்றுமறியாதவன். அதிலும் கூட அவனை விட சிறந்த நடிகர்கள் இருந்ததுண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த பில்டப் இல்லை. ஒரு சினிமா நடிகனுக்கு தமிழ்கம் முழுவதும் விழாக்கோலம் பிறந்த நாள் வாழ்த்துச்சொல்ல. அன்னதானம் கோயில்களில் பூஜைகள் இத்யாதி. இவை தேவையா?

  2. சினிமாத்துறை மக்களை எவ்வழியிலும் உயர்த்தவில்லை. அவர்களின் வாழ்க்கையைக்கெடுக்கத்தான் செய்தது. அதே சமயம் பிறதுறைகளில் சாதித்து மக்களின் வாழ்வை வளப்படுத்தியோருக்கு இப்படித் தமிழகமே திரண்டுவந்து பிறந்த நாள் வாழ்த்துச்சொன்னதில்லை. சொலல்வும் மறுக்கிறது என்கிறார் ஒரு பதிவாளர் - பாரதியாருக்கு ஏனில்லை என்று பதிவு போட்டு.

  எதற்கும் எல்லையுண்டு. பொருத்தமும் வேண்டும். நடிகர்களும் இரசிகர்களும் கூடி அவர் வீட்டிற்கு போய் பிறந்த நாள் சொன்னால் அதுவே பொருத்தமும் எல்லையுமாகும்.

  ReplyDelete
 6. அருமையான விரிவான ஆழமான அலசல்
  சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அன்பின் சௌந்தர் - ரஜினியின் 12.12.12 பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடஇயது நன்று. அதனைப் பற்றிய பதிவும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. நல்ல நடிகர்
  மனிதாபிமானி
  நல்ல மனிதன்.

  Cinema News

  ReplyDelete
 9. ஒரு நல்ல மனிதனை கொண்டாடுவதில் தவறில்லை!

  ReplyDelete
 10. அவர் புகழ் பிடிக்காமல் சிலர் செய்யும் வேலைகளை கணக்கில் எடுப்பானேன்? ரஜினி ரஜினி தான்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...