கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 December, 2012

கலைஞரின் நாடகமும்... கிளம்பும் கண்டனங்களும்...!முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அவரது நாக்கு தான் பலமும், பலவீனமும். சமீபத்தில் மின்வெட்டைக் கண்டித்து அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் வெறுத்துப் போனவர், பேசும் போது தேவையில்லாமல் தினமலர் பற்றி கருத்து வெளியிட்டு இருந்தார். அவரது கருத்திற்கு தற்போது பல பக்கங்களில் இருந்தும் கண்டனம் கிளம்பியுள்ளது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர் இது.
 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மின்வெட்டை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தினார். அதற்கு பாராட்டு வந்ததோ இல்லியோ ,போராட்டம் நடக்கும் இடத்தை சுற்றி எதிர்ப்பை சொல்லும் போஸ்டர்கள் நிறைய ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் ஒன்று தான் இது. மின்வெட்டின் காரணகர்த்தரான கருணாநிதி, தற்போது போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறராம். அதை அ.தி.மு.க., விசுவாசிகள் கடுமையான வார்த்தை பிரயோகத்துடன் போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
நம்ம தானைத்தலைவர் அரசியலில் இன்ன என்ன நாடகங்களை அறங்கேற்ற போகிறாறோ..?

12 comments:

 1. பார்ப்பனரை எதிர்த்தால் மற்றவர்களின் ஆதரவு கிடைத்துவிடும் என்று நம்புகிறார்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதாங்க.... ஆனால் இங்கு யாரும் ஏமாளிகள் இல்லீங்க...

   Delete
 2. இப்படியெல்லாம் பேட்டியில் எதையாவது
  குதர்க்கமாகச் சேர்க்காவிட்டால் அவர்
  பேசியதே தெரியாமல் போய்விடும்
  எனவே அவர் செய்வதும் சரிதான்

  ReplyDelete
 3. தொடரும் இது போன்ற எழுத்து,தொலைக்காட்சி,பத்திரிகை விளம்பரங்களே கலைஞருக்கான பலம்.எப்படியோ லைம் லைட்டில் இருப்பதே நிலைத்த அரசியலுக்கான வழி என்பதை புரிந்து வைத்துள்ளவர் என்பதால் யாரும் எப்படி குட்டு வைத்தாலும் தனக்கான அங்கீகாரகமாகவே எடுத்துக்கொள்வார்.

  மேலும் கலைஞரின் தவறுகளை மக்கள் மறக்கும் மாத்திரை ஜெயலலிதாவிடம் இருக்கிறது.

  ReplyDelete
 4. அன்பின் சௌந்தர் - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. அரசியலில் இதெல்லாம் சகஜம்தான்

  ReplyDelete
 6. இவங்க அடிச்ச கொள்ளையை கொண்டாந்து மக்களுக்கு கொடுத்தாலே போதும், தமிழ்நாட்டு பஞ்சம் முழுசா தீர்ந்திடும்!!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...