கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 January, 2012

பாபர் மசூதி இடிப்பு + ஒரு மகிழ்ச்சி தருணம் + என் இன்னொரு முகம்..


இதுவரை நீங்கள் பார்க்காத என் இன்னொரு முகத்தை, என் மற்றுமொறு பக்கத்தை உலகத்தமிழ்களோடு பகிர்ந்துக்கொள்ளவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர் பணி மற்றும் அச்சுபணி (Printing Press), ஆகியவையுடன் காவல்துறையிலும் என்னுடைய பரிமாணம் தொடர்கிறது.

மேல்நிலைப் படிப்பை முடித்தபிறகு கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் முயற்சிக்கும் ஒரே அரசுப்பணி எதுவாக இருக்கும் என்றால் அது தமிழ்நாடு காவலர் வேலைதான். நானும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து காவலர் பணிக்கு முயற்சி எடுத்தேன். எல்லா பயிற்சியிலும் வெற்றிபெற்று தேர்‌வு வரை செல்வேன் அதன்பிறகு அவ்வளவுதான். எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளேன் என்பது கூட தெரியாது. அதன்பிறகு அந்த முயற்சியை விட்டுவிட்டு எங்கள் ‌தொழிலான அச்சுப்பணிக்கு வந்துவிட்டேன். பிறகு ஆசிரியர்.

காக்கி உடை உடுத்தவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் மற்றொறு வழியில் எனக்கு வந்தது. அது தமிழ்நாடு ஊர்க்காவல் படை. திருவள்ளூர் மாவட்டம் 1997-ல் புதியமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு  காவல் துறையும் புதியதாக உறுவானது. 1999-ல் உறுவாக்கப்பட்ட ஊர்க்காவல் படையில் நான் இணைந்தேன். 12 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையோடு இணைந்து பணியாற்றிக்கொண்டுடிருக்கிறேன். நான் பணிப்புரிவது C5- வெங்கல் காவல் நிலையம். தற்போது பதவி உயர்வுபெற்று ஊத்துக்கோட்டை உட்பிரிவில் பணியாற்றும் ஊர்காவல் படைக்கு உதவி படைபிரிவு தளபதியாக (Asst. Platoon Commander) இருக்கிறேன்.

ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6 ஊர்க்காவல் படையினர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிடுவோம். அதன்பிறகு உயர்அதிகாரிகளின் வசதிக்கு எற்றார்போல் ஒரு நாளில் கொண்டாடுவோம் அந்த கொண்டாட்டம் சனிக்கிழமை (28-01-2012) அன்று நடந்தது. அந்த விழாவைகுறித்த பதிவுதான் இது.

காலை 7.00 மணிக்கு அனைவரும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலக வளாகத்தில் கூடினோம். 8.00 மணிக்கு காலை சிற்றுண்டி. 9.00 மணிக்கு நகருக்குள் தலைகவசம் அவசியம் குறித்த ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினோம். இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பளர் திருமதி. வனிதா அவர்களும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்களும் துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வுக்கு எங்கள் பரப்பு தளபதி (Area Commander) திருமதி ராதிகா வித்யாசாகர் அவர்கள் தலைமையேற்றார். (இந்த ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றது நான்தான்) 60 இருசக்கர வாகனத்தில் இருவர் வீதம் இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு நகர்முழுவதும் வளம்வந்து SP அலுவலகத்தில் முடிவுவெற்றது. ஒரு குழு நகரில் நடந்து சென்று தலைகவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 
(விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார் காவல் கண்காணிப்பாளர் திருமதி வனிதா, கூடுதல் SP திரு செந்தில்குமார், பேரணியின் முதலில் இருப்பது நானே)
 (நடந்து சென்று விழிப்புணர்‌வு துண்டு பிரசுரங்களை வழங்க தயாராகிறது மற்றொறு குழு) வலது ஓரத்தில் எங்கள் ஏரியா காமாண்டர் திருமதி ராதிகா வித்யாசாகர்)

காலை 11.00 மணிக்கு நல்லாதாய் ஒரு தேநீர் கிடைத்தது. அதன்பிறகு விளையாட்டுப்போட்டிகள் துவங்கியது. அனைத்து விளையாட்டுகளின் பொருப்புகளையும் ஒவ்வோறு அதிகாரிகளுக்கும் பிரிந்திருந்தோம் ஆனால் அனைத்தையும் நானே கவனிக்க நேர்ந்தது. முதலில் வாலிபால் போட்டி தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் போட்டியில் பங்கெடுத்தேன். போட்டியை Ad SP  அவர்கள் துவங்கி வைத்தார். 12.30 மணிக்கு ஓட்டப்பந்தையமும் நடந்தது.

(வாலிபால் போட்டிகளை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார் Ad. SP திரு செந்தில்குமார், அருகில் ராதிகா வித்யாசாகர், மற்றும் மாவட்ட CC திரு ஜெயக்குமார். இடது ஓரம் களத்துக்குள் நான்)

மதியம் 1.30 மணிக்கு சிறப்பான மதிய உணவு பரிமாறப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு பிரிஞ்சி மற்றும் தயிர்சாதம். உணவு இடைவேளை முடிந்த பிறகு கபாடி போட்டிகள் துவங்கின. இதிலும் ஆள் இல்லை என்பதற்காக நானும் கலந்துக்கொள்ள நேர்ந்தது. வாலிபால் விளையாடத் தெரியும், கபாடி அந்தஅளவுக்கு வராது. இறுதியாய் எங்கள் அணி தோல்வியைக்கண்டது. (பின்னே நான் இருந்தேனில்ல).

(கபாடி போட்டியில் கில்லி விஜய் ரேஞ்சுக்கு முயற்சிசெய்தேன் ஆனால் பிடித்து விட்டார்கள்)

போட்டிகள் முடித்துக் கொண்டு மா‌லை 4.00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. திருமதி ராதிகா வித்யாசாகர் அவர்கள் தலைமைதாங்க மாவட்ட SP திருமதி வனிதா அவர்களும், Ad SP திரு செந்தில்குமார் அவர்களும் கலந்துக்கொண்டனர். ‌மேலும் மாவட்டத்தின் அனைத்து அதிகரிகளும் நிகழ்ச்சிக்கு ஆஜர். 4.10 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து. 


எங்களது ஏரியா கமாண்டர் திருமதி. ராதிகா அவர்கள் அழகிய தமிழில் சிறப்பான வர்ணனைகயோடு நிகழ்ச்சியை தொகுத்துகொடுத்தார். 4.30 மணிக்கு அணிவகுப்பு மரியாதை, 4.50 கலை நிகழ்ச்சிகள், 5.20 மணிக்கு என்னுடைய கவிதை வாசிப்பு, 5.30 மணிக்கு சிறப்பு விருந்தினர் SP மேடம் அவர்களும் சிறப்பான உறையாற்றி எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். இறுதியாய் 6.00 மணிக்கு தேசியகீதத்துடன் விழா நிறைவு பெற்றது.

அதன்பிறகு படா கானா என்று சொல்லப்படும் விருந்து. எல்லா VIP -க்களையும் வழிஅனுப்பிவைத்து விட்டு விருந்துக்கு வந்தேன். அப்போது Ad SP திரு செந்தில்குமார் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு. உடனடியாக வாலிபால் எடுத்துக்கொண்டு  வீரர்களுடன் மைதானத்திற்கு வாருங்கள் எனக்கு வாலிபால் ஆட ஆசையாக இருக்கிறது என்றார். மாவட்டத்தின் SP  அவர்கள் அழைக்குபோது விருந்தாது மருந்தாவது என்று ‌அவருடன் இணைந்து நண்பர்களோடு வாலிபால் விளையாடியோம்.

இதில் நான், Ad. SP, மற்றும் வீரர்கள் ஒருப்பக்கமும், மற்றவீரர்கள் ஒருபக்கமும் இருந்தனர். சாருக்கு ஆர்வம் இருக்கிறது ஆனால் விளையாட ஒரளவுக்குதான் தெரிந்து வைத்திருக்கிறார். முதலில் தொல்வி அடைந்தோம். எதிரணி வலுவான அணி நான் அதில்தான் இருந்திருக்க வேண்டும் சாருக்காக நான் எதிபுறத்தில் ஆடினேன். 

(இந்த மனோதான் காக்கி உடையில் இருப்பாரா...
நாங்களும் போஸ் கொடுப்போம்ல...)

உயர்அதிகாரி தோற்கக்கூடாது என்பதற்காக அடுத்த போட்டியில் நண்பர்களுக்கு சிக்னல் செய்தேன். அதன்பிறகு அவர்கள் விட்டுகொடுத்து எங்களை ஜெயிக்க வைத்தார்கள். (இது எஸ்பி சாருக்கு தெரியாது). போட்டிகள் 7 மணிக்கு முடிந்தது அதன்பிறகு விருந்துக்கு வந்தால் எல்லாம் கதம் கதம் ஆயிருந்தது. (பார்சல் அதிகம் போய்விட்டதாம்) கிடைத்ததை உண்டுவிட்டு சில ஒப்படைப்பு பணிகளை முடித்துத்துக்கொண்டு இரவு 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.

மாலை விழா  ஆரம்பித்தபிறகு என்னுடைய கேமரா பேட்டரி டவுன் ஆகிவிட்டதால் மாலை நேர நிகழ்வுகளின் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. நான் SP மேடமிடம் பரிசு வாங்கியது. கவிதை வாசித்தது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை.

24 January, 2012

மதவாதத்தை தூண்டும் சில மனிதாபிமானமற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..!



‌அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருத்தி, சுவாமி விவேகானந்தரைப் பார்த்து இறைவன் எல்லை கடந்தவர், மனம், வாக்கு, செயல்களுக்கு அப்பாற்பட்டவர் என்றகிறீர். ஆனால் உங்கள் நாட்டில் உருவமற்ற பரம்பொருளுக்கு உருவம் வைத்து வழிப்படுகின்றீர்களே எதற்காக..? என்று விளக்கம் கேட்டாள்.


உடனே சுவாமிஜி அவள் வீட்டில் உள்ள ஒரு போட்டோவை சுட்டிக்காட்டி “அது யார்”? என்று கேட்டார்.


என் தந்தையார் என்று பதில் சொன்னால் அந்தப் பெண்.

வெறும் சட்டமும், கண்ணாடியும், அட்டையும், ஓவியமாக இருக்கின்ற இது உன் தந்தையா? என்று கேட்டார் சுவாமிஜி.

இது என் தந்தையல்ல. ஆனால் என் தந்தையை நினைவூட்டுகின்ற அடையாளம் என்றால் அப்பெண்.

இதேபோல்தான் எங்கள் நாட்டிலுள்ள விக்ரகங்களுக்ளும் இறைவனை நினைவூட்டுகின்ற அடையாளமாகத் திகழ்கின்றன... என்று விளக்கமளித்தார்.



இந்த உலகில் வாழும் மக்கள் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பவும்,  அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், தன்னுடைய சமூக பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உறுவானதுதான் சமயங்கள்.


பண்டைய காலங்களில் எதற்கெல்லாம் பயந்தார்களோ, எதன்மீதெல்லாம் நம்பிக்கை வைத்தார்களோ அவையெல்லாம் இந்த பூமியில் தெய்வமாக மலர்ந்தது. சாதாரண செங்கல் முதற்கொண்டு வானுயர்ந்த சிகரங்கள் வரை இங்கு தெய்வமாக பார்க்கப்படுகிறது.


அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கடவுள்களின் உருவங்களும், சடங்கு சம்பிரதாயங்களும், வழிபாடு முறைகளும் தோன்றியது. இன்றைய காலகட்டத்திற்கும் சிறிதளவும் மாற்றம் அடையால் இந்த உலகில் சமயங்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.


இந்த உலகில் இருக்கும் அனைத்து சமயங்களும் தன்னுடைய தனித்தன்மையை காட்ட பலவகையில் வித்தியாசப்படும். அந்த வித்தியாசத்தை, அவர்கள் வழிப்பாடு முறைகளை, அவரவர் சமய சடங்குகளை மற்ற மதத்தினர்கள் குறைகூறவோ கேலிசெய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

இந்த உலகில் பிரதான சமயங்களாக உள்ளவைகள் மூன்று மட்டுமே அவை, கிறிஸ்துவம், இஸ்லாமியம், இந்து மதம், இந்த உலகம் முழுவதும் பரவிக்கிடப்பவர்கள் இவர்களே. இந்த மூன்று மதங்கள் சொல்கின்ற தத்துவமும், வாழ்க்கை முறையும் ஒன்று தான் அது சில இடங்களில் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடலாம்.


அந்த மாறுபாட்டை மற்ற மதத்தவர் மதித்து நடந்துவிட்டால் இந்த உலகில் சண்டைசச்சரவுகள் இல்லாமல் இருக்கும். ஆனால் சில தீயசக்திகள் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என மற்றவரை விமர்சித்து அதில் எழும் சண்டைகளில் குளிர்காய்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.


வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே சாதாரண வாழ்நாளைக்கொண்ட நாம் யுகம் வாழ்பவர்கள்போல் மற்ற மதத்தவரை இழிவுபடுத்தியும், அவர்களை சாடியும் இந்த உலகின் சகமனிதர்கள்மீது அக்கறைகொள்ளாமல் வாழ்வது வீணே.


மதங்கள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதுஇல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தற்போதைக்கு அதுகுறித்து சண்டைச்சச்சரவுகள் இல்லாமல் மட்டும் இருந்தால் போதும்.


எச்சரிக்கை என்றுதான் ‌தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். இது எச்சரிக்கை ஒன்றும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான அன்பு கலந்த கோரிக்கை அவ்வளவுதான்.

16 January, 2012

சென்னை புத்தகக் கண்காட்சியும்.. என் அனுபவங்களும்...


வழக்கம்போல் சென்‌னையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் ஆரம்பித்திருந்தது 35-வது புத்தக கண்காட்சி. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக (எத்தனை முறை என்று சரியாக ஞாபகம் இல்லை) தொடர்ச்சியாக புத்தகக் கண்காட்சிக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளோம். நானும் வேடந்தாங்கல் கருணும்.

எப்போதும் எங்களுடன், எங்களுடைய நண்பர்கள் யாராவது கூட வருவார்கள். ஆனால் இந்தமுறை யாரும் இல்லாமல் நாங்கள் இருவர் மட்டும் இருசக்கரவாகனத்தில் திருவள்ளூரில் இருந்து கிளம்பினோம். (14-01-2012 சனிக்கிழமை) ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், வழியாக புத்தக கண்காட்சிக்கு சென்றோம்.
 
பொதுவாக நாங்கள் ஒவ்வொறு வருடமும் மாலை நேரத்தில் செல்வதுதான் வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் இம்முறை காலை 9.00 மணிக்கே கிளம்பினோம். கிளம்பிய ஒரு மணிநேரத்தில் நண்பர் ரஹீம் கசாலி அவர்களிடம் இருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

”வணக்கம் தலைவரே.. சொல்லுங்க என்றேன்..”
 
“நான் சென்னை வந்திருக்கிறேன். புத்தக கண்காட்சிக்கு வரப்போகிறேன். நீங்களும் வருகிறீர்களா..?” என்று கேட்டார்.

”கிளம்பிட்டேன்... தலைவரே... சரியா.. 11.00 மணிக்கு அங்க இருப்போம்... என்றேன்..”

“அப்படியா நான் 2.00 மணிக்குதான் வருவேன் என்றார்”
 
“கூட யார் வற்றது என்றார்... ” “கருண் என்றேன்...”
 
”ரொம்ப நல்லதா போச்சி..” என்றார்...

சரிங்க பார்க்கலாம்.. என்றேன்...

நாங்கள் சரியாக 11.30 மணிக்கு புத்தக கண்காட்சியை அடைந்தோம். விடுமுறை நாள் என்பதால் அப்போதே கூட்டம் அலைமோதியது. பைக் பார்க் செய்ய ஒரு நீண்ட வரிசை இருந்தது. அதற்கு 10 ரூபாய் வேறு வசூலித்தார்கள். (இதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது).


வாகனங்களை நிறுத்த மிகபெரிய இடம் இப்பள்ளியில் இருக்கிறது. (இதற்கு முன் கயிதே மில்லத் கல்லூரியில் தான் புத்தக கண்காட்சி நடக்கும். அங்கு வாகனங்கள் நிறுத்த மிகபெரிய அவஸ்தையாக இருக்கும் ஸ்பென்சர் பிளாசாவில்தான் பார்க்கிங் இருக்கும்) புத்தக கண்காட்சியை இங்கு மாற்றிய பிறகு அந்த பிரச்சனை இல்லை.

நேராக சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு நானும் கருணும் புத்தக கண்காட்சி ”பாரதிதாசன் பாதை” வழியாக உள்ளே நுழைந்தோம்.

பொதுவாக கடந்த மூன்று வருடமாக நாங்கள் வாங்க நினைக்கும் புத்தகங்களை பட்டியலிடுவதில்லை. (அதற்கு முன்பெல்லாம் என்னன்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்று பட்டியலோடு வந்து புத்தகங்களை வாங்குவோம்) இம்முறை நாவல், கவிதை, போன்றவற்றை தவிர்த்து பயன்படும் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றும் நானும்,

தன் மூன்று வயது மகளுக்காக சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கருணும் முடிவு செய்திருந்தோம்.

முதலில் ஒரு ஓ‌ஷோ அவர்களின் புத்தம் ஒன்றை வாங்கினேன். அதன் பிறகு சுராவின் இயர்புக், தமிழக வரலாறு புத்தகம், சில நகைச்சுவை புத்தகங்கள், பாடம்சார்ந்த சில புத்தகங்கள் வாங்கினேன்.

அந்த பரபரப்பில் சிபி செந்தில் குமாரிடம் இருந்து போன். எந்த படத்துக்கு போறீங்க.. எந்த படத்துக்கு விமர்சனம் எழுதபோறீங்க என்று கேடடார். நான் விவரத்தை சொல்ல... அவர் நிம்மதியாக வேட்டை படத்துக்கு சென்றார். 

அனைத்தையும் கண்டுகளித்த பிறகு நேரம் 1.30-ஐ எட்டியது. எங்களுக்கு தேவையான சில புத்தகங்களை வாங்கிய பிறகு முதல் பாதை வழியாக வெளியே வந்தோம்.

மணி இரண்டு ஆகபோகிறது என்றவுடன் அடுத்து நாங்கள் சென்ற இடம் உணவகம். இருவரும் டோக்கன் வாங்கி
சோளாபூரி வாங்கி சாப்பிட்டோம். உணவகப்பொறுப்பை பெரிய நிறுவனம் எடுத்திருந்தது. பார்ப்பதற்கும், அங்கு இருந்த சூழலும் 5 நட்சத்திர ‌ஹோட்டலை ஞாபகப்படுத்தியது. விலைதான் கொஞ்சம் அதிகம். சில பள்ளி மாணவர்கள், கல்லூரி பெண்கள் விலை பட்டியலை பார்த்துவிட்டு திரும்பிச்சென்ற காட்சியை பார்க்க முடிந்தது.

மதிய உணவை முடித்துக்கொண்டு புதிய தலைமுறை கலையரங்க பந்தலுக்கு வந்தமர்ந்தோம். மேடையில் மணிமேகலை பிரசுரம் சார்பில் 25 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. லேனா தமிழ்வாணன் தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு டி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டிருந்தார். பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் வெளியிடு நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது புத்தக காட்சிக்கு வந்திருந்தார் ரஹீம் கசாலி,  மற்றும் சிராஜ் அவர்களும், அவர்களுடன் மெட்ராஸ பவன் சிவக்குமார். மற்றும் பிலசபி பிரபாகரன் ஆகியோருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அரங்குகளை சுற்றினோம். 

சிராஜ் அவர்கள் சமயம் சார்ந்த நூல்கள் வாங்க பெரிய பட்டிய‌வோடு சில அரங்குகளை முற்றுகையிட்டார். கசாலி இதையெல்லாம் ஊருக்கு நான் சுமந்து ‌செல்ல வேண்டும் என்ற கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
 

வெகுநேரம் ஆனதால் 4.30 மணிக்கு கிளம்ப தீர்மானித்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

கிளம்பியபோது மிகபெரிய கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கே.ஆர்.பி. செந்தில், கேபிள் சங்கர் ஆகியோர் மாலை 6.00 மணிக்குதான் கண்காட்சிக்கு வருவதாக சொன்னார்கள். அதனால் அவர்களை பார்க்க முடியவில்லை. 



வருடாவருடம் புத்தக கண்காட்சிக்கு மக்கள் தரும் ஆதரவு பிரமிக்கவைக்கிறது. இம்முறை குழந்தைகள், சிறார்களை அதிகம் காண முடிந்தது. மக்களிடம் புத்தகம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பது நல்லதே. புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.


அனைத்து அரங்குகளும் அழகிய வண்ணத்தில் ‌பலலட்சம் புத்தகங்கள் அலங்கதித்தது. விலையில் 10% கழிவு கொடுத்திருந்தார்கள். இதை இன்னும் கொஞ்சம் அதிகரித்து 15 அல்லது 20 சதவீதம் என கொடுத்திருந்தால் புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.


சமூகத்தில் எத்தனை பரிமாற்றங்கள் வந்தாலும் புத்தகங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு மற்றும் ஆர்வம், புத்தக வாசிப்பு இந்த நூற்றாண்டுகளில் முடிந்துவிடும் நிகழ்வு என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு உள்ளது.

15 January, 2012

நாடு முழுதும் இது தொடர வேண்டும்...



 நேற்று செய்திதாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த ஒரு சம்பவம் அது தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம். அதைப் பார்க்கும் போது இப்படி நாடுமுழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...

ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப்படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.

அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.

ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்.

இதையடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். (செய்தி)

இப்படித்தான் நாடு முழுவதும் பல்வேறு 
எம்.எல்.ஏ க்கள் அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு தன்னுடைய சங்கதியினரை வளர்த்துக் கொண்டிருக்கிறனர். எல்லா மக்கள் மனதிலும் இது போன்று தவறு செய்பவர்களை தண்டிக்க எண்ணமிருக்கிறது. ஆனால் மக்கள் அவர்களின் பணபலம் ஆள்பலம் பார்த்து பயந்துவிடுகின்றனர்.

பொதுமக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிட்டு அதன் பிறகு எந்த பிரச்சனைகளையும் தீர்க்காத, தொகுதிப்பக்கம் வராத தவறுசெய்யும் ஆட்களையும், அளவுக்கு அதிகமாக சொத்து குவிக்கும் ஆட்களையும் இப்படி விரட்டினால் நாடு கண்டிப்பாக செழிக்கும்.

பொதுமக்கள் விழித்துக்கொண்டால் நம் நாடு வல்லரசுதான். அப்போது வாங்கிய சுதந்திரம் தூக்கி நிறுத்தப்படும்.

நண்பர்களே இது என்னுடைய சொந்த கருத்து அதற்காக நான் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சில பிரச்சனைகளுக்கு தீர் வு இதில்தான் இருக்கிறது.

09 January, 2012

அதனதன் குணம் அப்படி...! என்ன செய்வது...!



யக்கும் மாலைப் பொழுது
சுடர்விடும் சூரியன்...
மௌனமாயிருக்கும்...!

ண்ணுக்கு புலப்படாது
நம் இதயம்தொடும் காற்று... 
சலசலத்துக் கொண்டிருக்கும்...!

றவைகள் கொஞ்சியாட
தன் கிளைவழியாய் மரம்...
சாமரம் வீசும்...!

ண்ணத்தால் மொழிபேசி
கவிதையாய் வாசம் வீச...
செடி பூத்து வைக்கும்...!

பூமியில் உயிர்கொண்ட
மானுடத்தை ஒரு முறையேனும்...
காதல் இம்சிக்கும்...!

ன்ன செய்ய
அதனதன் குணம் அப்படி...!


 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

05 January, 2012

சுத்தமும், அமைதியுமே எனக்கு நரகம்...!



வாசல் முழுக்க சிதறிக்கிடந்தது
ஒடித்து எறியப்பட்ட 
செடிக்கொடிகள்...!

சுண்ணாம்பு பூசிய வீட்டுச்சுவரில்
அடுப்புக்கரியால்  அழகற்ற
கிறுக்கல்கள்...!

வீட்டின் கூடம், முற்றம் என
எங்குபார்ப்பினும் கிழித்து எறியப்பட்ட 
புத்தகக் கிழிசல்கள்...!

மூக்கை உறிஞ்சி... 
சிரித்து... அழுது....
சண்டையிட்டு விளையாடிய
குழந்தைகளை பார்க்க சகியாமல் திரும்பினேன்....

வீடுமுழுக்க சுத்தமும்
அறைகள் தோறும் அமைதியுமே...
நரகமாய் இருந்தது...!

குழந்தைகள் இல்லாத 
என்வீடு...!

 தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!

Related Posts Plugin for WordPress, Blogger...