கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 January, 2013

இன்று நித்தியானந்தா பிறந்த நாள்... விரட்டும் போலீஸ் மற்றும் கோயில் நிர்வாகம்..

இன்று (06.01.2013) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.

7 comments:

 1. \\இன்று (06.01.2012) பிறந்த நாள்\\ என்ன இது ஒரு வருடத்துக்கு முன்னாடி போட்ட பதிவா!!

  ReplyDelete
  Replies
  1. ம்... வாங்க...

   இப்பத்தானே வருஷம் பிறந்திறக்கு கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும்...

   யாருப்ப அங்க புது காலண்டரை மாட்டுங்கப்பா...

   Delete
 2. அருமை. நன்றி நல்ல செய்திக்கு.

  ReplyDelete
 3. நித்யானந்தாவின் சேவை நாட்டுக்குத் தேவை நாமும் வாழ்த்துவோம் வாழ்க பல்லாண்டு

  ReplyDelete
 4. எங்கள் வாழ்த்துக்களையும் நித்தியானந்தாவிடம் சேர்த்து விடுங்கள்.
  வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

  ReplyDelete
 5. இன்னுமா உங்களைல்லாம் இந்த ஊர் நம்புது?!

  ReplyDelete
 6. நண்பா ... இன்று வலைச்சரத்தில் உங்கள் பெயர் ஏன் இடம்பெற்று இருக்கு போயி பாருங்க கொஞ்சம் ....

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...