கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 January, 2013

அரசியல்வாதிகள் தான் காரணம்! கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! - அஜித்தின் அதிரடி!


மத்திய அரசின் திரையுலகின் மீதான சேவை வரியை எதிர்த்து பல திரையுலகைச் சார்ந்த நடிகர், நடிகைகள், தயரிப்பாளர்கள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசையே மிரள வைத்தனர். தமிழகத்திலும் ரஜினி, விஜய் உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் கமல், அஜித் உட்பட பலர் கலந்துகொள்ளவில்லை.


உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கண்டத்தை தெரிவிக்காவிட்டாலும் நடிகர் அஜித்குமார், மத்திய அரசின் சேவை வரி மீதான தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் “ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் திருந்தினால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். அவர்களாக முன்வந்து தங்களிடமிருக்கும் ஊழல் செய்த கருப்பு பணத்தை தங்கள் பையிலிருந்து எடுத்து கொடுத்தால் தான் இந்தியா வளரும். தேவையில்லாமல் எதற்கும் வரி போட வேண்டிய அவசியமும் இருக்காது.


இது மட்டும் நடந்துவிட்டால் உலகின் பணக்கார முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இவர்களிடமிருந்து இந்த நாட்டை ‘கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’. இதே நிலை தொடர்ந்தால் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல எதிர்காலத்தில் நீருக்கும், காற்றிற்கும் கூட வரி விதிக்க வேண்டிய கட்டாயம் வரலாம்” என்று கூறினாராம். நீருக்கு ஏற்கனவே வரி வசூலிக்கப்பட்டு வருவதால், அடுத்தது காற்று தான்.

7 comments:

 1. தல கருத்து சரிதான்!

  ReplyDelete
 2. தல எப்பவுமே சரியாதான் சொல்லுவார்

  ReplyDelete
 3. Read :
  FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?

  http://rajamelaiyur.blogspot.com/2013/01/FACEBOOK-PHOTO-DOWNLOADER.html

  ReplyDelete
 4. தல சொன்ன நோ அப்பீல்

  ReplyDelete
 5. கருப்புப் பணம் அரசியல் வாதியிடம் மட்டுமா இருக்கிறது.சினிமாவில் இல்லாத கறுப்புப் பணமா?

  ReplyDelete
 6. அன்பின் சௌந்தர் - உண்ணாவிரத்ததில் அஜீத் கலந்து கொள்ள வில்லை. சேவை வரியினை எதிர்ப்[பது சரியல்ல. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...