கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 February, 2013

என் காதலின் நாட்குறிப்புகள்...! (ரகசியமாய் இருக்கட்டும்)

முடிந்தும் முடியாது போன
நேற்றைய சண்டைக்காக
 கொஞ்ச நேரம்...!
 
புரிந்தும் புரியாத சண்டையின்
சமாதானத்திற்காக
கொஞ்ச நேரம்...!
 
சுற்றும் உலகைநிறுத்தி
சுவைக்கும் சந்தோசத்திற்காக
கொஞ்ச நேரம்...!
 
சூரியன் மறைந்து நேரம்செல்ல
பிரிவின் வலிக்காக
கொஞ்ச நேரம்...!
 
ருகில் இல்லாத அந்திகளில்
நினைவின் அலைகளில்
கொஞ்ச ‌நேரம்...!
தினம் தினம்
இப்படியாகத்தான் கழிகிறது
நம் காதல் பொழுதுகள்...
 

வாசித்த அனைவருக்கும் நன்றி...!

11 comments:

  1. கொஞ்சுவதற்கு இவ்வளவு நேரமா...? (ஓஹோ... ரகசியம்)

    ReplyDelete
  2. அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கொஞ்ச நேரம்?எல்லாநேரமும் கொஞ்சும் நேரம்?!
    நன்று

    ReplyDelete
  4. இப்படி கொஞ்சிய கொஞ்ச நேரங்கள்போக மீதி நேரங்கள்தான் கவிதைகளாய் வந்திருக்கின்ற‌னவோ?

    ReplyDelete
  5. இப்படி கொஞ்சுறது வீட்டுகார அம்மாக்கு தெரியுமா ???

    ReplyDelete
  6. அதற்க்குபின்தான் வாழ்கையின் சந்தோசம் ஆரம்பம்

    ReplyDelete
  7. நடக்கட்டும்! நடக்கட்டும்!

    ReplyDelete
  8. காதல் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றனவோ...! ரகசியம் தெரிந்து கொண்டேன். ம்... ஆவட்டும்...!

    ReplyDelete
  9. அருமையான அழகான நாட்குறிப்பு
    நீண்டநாட்களுக்கு பிறகு வருகின்றேன் எப்படி இருக்கீங்க பாஸ்?

    ReplyDelete
  10. அன்பின் சௌந்தர் - நேரம் களிப்புடன் கழிவது நம் கையில் இல்லை - இருப்பினும் மகிழ்ச்சி தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...