கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 February, 2013

இந்த கடிதத்திற்கு ஜெயலலிதா அவர்கள் என்ன பதில்சொல்லபோகிறார்கள்...!.!

தமிகத்தில் சில வருடங்களாக மின்பிரச்சனை மிகுந்த வேதனையை கொடுத்து வருகிறது. தற்போதுவரும் கோடையில், இன்னும் மின்வெட்டு அதிகமாகும் சூழ்நிலையில், கவர்னர் உரையில் மின்பற்றாக்குறை தீர, புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாமல் போனது, கவலை தருகிறது.

நிலக்கரி கிடைப்பதும் அரிதாகி போனது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தியாகும் நெய்வேலியும், அணுசக்தி மூலம் மின்உற்பத்தி செய்யும் கல்பாக்கமும், கூடங்குளமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பல மாநிலங்களுக்கு, மின் பகிர்மானம் செய்யப்படுவதாலும், தமிழகத்தின் பயன்பாட்டுத் தளம், மிக மிகக் குறைவே. 
எனவே, தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கான மின்சாரத் தேடலை புனல், அலை, காற்று, சூரியன் மூலம் நிகழ்த்தலாம். அதற்கான ஏதுக்கள் அதிகம் கொண்டது தமிழகம். சரியான திட்டமிடல் இருந்தால், மின் உற்பத்தி அபரிமிதமாகும்; ஆதாயமும் அதிகமாகும்.

தமிழகத்தில் சில மாவட்டங்கள் நீங்கலாக, பிற அனைத்திலும் சிறு, பெரு நீர் வீழ்ச்சிகள் அதிகம் உண்டு. தடுப்பணை கட்டி தேக்கி வைத்தால், மின்சாரமும் கிட்டும்; விவசாயத்திற்கான நீரும் கிடைக்கும். பெருவாரியான நீர் நிலைகள், வீணாக ஓடி, கடலோடு கலக்கும் நிலைதான் உள்ளது. 

மேட்டூர் போன்ற சமவெளிகளிலும், பாபநாசம், கோதையாறு போன்ற மலைகளிலும் நீரைத் தேக்கி, மின்சார உற்பத்தி செய்து வருபவர் நாம் என்பதை. மறக்கலாகாது. ஆண்டின் அத்தனை நாளும், காற்று வீசும் முப்பந்தல், கயத்தாறு, கோவை பகுதிகளை, சரிவர பயன்படுத்தினால், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாகும்.

கணவாய் இருக்கும் பகுதிகளில், காற்று அதிவேகத்தில் வீசும். முப்பந்தலும், கோவையும் இத்தன்மைகள் கொண்டவை. ஆனால், உற்பத்தியாகும் மின்சாரத்தை. தேக்கி வைப்பதற்கான கட்டுமானங்கள் அதிகம் இல்லாததால், காற்றாடிகள், பல நாட்கள் சுழலாமலேயே நிறுத்தப்படுகின்றன. தேக்கி வைப்பதற்கான வசதிகள் அரசால் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டு, பகிர்மானம் செய்யும் இணைப்பு வசதிகளும் பெருக்கப்பட்டால், மின்பற்றாக்குறையை இல்லாமல் ஆக்கலாம்.

கோவையில், காற்றாலைகள் அதிகமாக நிறுவப்பட்டு சேமிக்கும் திறன் கொண்டவையானால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் மின்சாரத்தால் தன்னிறைவு பெறும். சூரிய சக்தி பெற, தமிழகத்தில் அதிக இடமுண்டு. குஜராத் பார்முலாவை தமிழகம் பின்பற்றலாம். 
 
கதிரவன் அதிகமாக ஒளி பாய்ச்சும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தேர்வு செய்யலாம். சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலன்களை நிறுவி, சேமிக்கத் துவங்கினால், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சூரிய சக்தி பெறலாம். 

உற்பத்தியாகும் இடங்களை சுற்றி, தொழிற்சாலைகளும் பெருக, வேலைவாய்ப்பும் பெருகும். சிறிய தேவைகளுக்கு அரசே மானியம் கொடுக்க முன் வந்தால், வீடுதோறும் சூரிய சக்தியை பெறுவதற்கான உற்பத்தியை பெருக்க முடியும். 
சாலையோர மின்கம்பங்களில், சூரியசக்தி பெறும் கருவிகளை பொருத்தினால், அபரிமிதமான மின்சாரம் மிச்சமாகும்.தமிழகத்தின், ஒரு பகுதி கடலால் சூழப்பட்டது. 

மேற்கத்திய நாடுகளில் கடல் அலையிலிருந்து, மின்சாரம் தயாரிக்கும் நுணுக்கம் உள்ளது. அதை அறிந்து செயல்படுத்தினால், ஒவ்வொரு நாளும் கடல் அலைக்கும் பஞ்சமிருக்காது. அதிலிருந்து நாம் பெறும் மின்சாரத்திற்கும் பஞ்சம் வராது.

நன்றி : முனைவர், எஸ்.ஸ்ரீகுமார், அணுசக்தி நகரியம், கல்பாக்கம்.

5 comments:

  1. அருமையான பகிர்வு.
    ஜெயலலிதா பதில் சொல்வாரா?

    ReplyDelete
  2. வரும் கோடையில் வேறு மின்சார தேவை அதிகமாயிருக்கும்.. மக்களின் துயரை புரிந்து இதற்கு பதில் வர வேண்டும்.

    ReplyDelete
  3. உண்மையான வரிகள்..தமிழகம் ஒளி பெறுமா?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...