கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 February, 2013

இப்படி கூடவா நடக்கும்...


அலைகளில் கால் நனைத்து 
நடக்கும் ஒவ்வொறு நாளிலும்
உனக்கான போட்டியில் அலைகளோடு
நான் தோற்றுப்போகிறேன்...

கரையோரம் ஈரமடைந்த மணலில்
தெளிவாய் எழுதிவைக்கிறேன்
உன் பெயரையும் 
அதன் அரு‌கே
என் பெயரையும்...

கோவமாய் ஓடி வரும் அலை
அழித்துவிட்டுச் செல்கிறது
என் பெயரை...

அணைத்துவிட்டுச் செல்கிறது
உன் பெயரை...

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

8 comments:

 1. // கோவமாய் ஓடி வரும் அலை
  அழித்துவிட்டுச் செல்கிறது
  என் பெயரை...

  அணைத்துவிட்டுச் செல்கிறது
  உன் பெயரை... // போட்டி போடுதோ..?

  ReplyDelete
 2. அலை ஒருவேளை ஆணோ ?

  ReplyDelete
 3. என்ன கொடுமை...? அலைக்குக் கூட நம்மளை பிடிக்கலையே...!

  ReplyDelete
 4. அலைக்கு ஆண்களைக் கண்டால் இப்படித்தானாம் அந்த பக்கம் போகாதிங்க.

  அழகான வரிகள்.

  ReplyDelete
 5. அணைத்துவிட்டுச் செல்கிறது
  உன் பெயரை... //
  பெண்ணென்றால் இயற்கையும் அனைத்துக்கொள்ளுமோ? நல்ல கற்பனை

  ReplyDelete
 6. அருமையான கற்பனை! வரிகள் அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. நல்ல கற்பனை..
  அலைக்கு ஏன்
  கொலை வெறி?

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...