கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 February, 2013

கணவன் மனைவிக்குள் இருப்பது மட்டும் காதல் இல்லை ... குஷ்பு-வின் அடுத்த பரபரப்பு...!

காதலர்கள் ‘காதலர் தினம்’ கொண்டாடி முடித்துள்ள நிலையில், காதல் வாழ்வில் அவசியமனது என்றும், காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறியதாவது, கணவன் மனைவிக்குள் இருப்பது மட்டும் காதல் இல்லை. வாழ்வின் பல தருணங்களில் காதல் முக்கியமானது. காதல் என்பது அன்பு. நான் என் அண்ணன்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. என் புகுந்த வீட்டில் எனக்கு கொடுக்கும் அன்பு. நான் என் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு என அனைத்தும் காதல் என்ற வார்த்தையில் அடக்கம்.

நானும் என் கணவரும் பல தடைகளை தாண்டியே காதல் திருமணம் செய்துகொண்டோம். முதலில் எங்கள் காதலுக்கு இருவீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு இருந்தது. 
 
நாங்கள் காதலிக்க தொடங்கும் நேரத்தில் சுந்தர்.சி-யின் முதல் படம் கூட வெளியாகவில்லை. நான் நகரத்தில் வளர்ந்தவள். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர் என எங்களுக்கு பல வேறுபாடுகள் இருந்தது. இருந்தாலும் வீட்டில் பேசி புரியவைத்து சம்மதம் வாங்கினோம்.

சொந்த வீடு வாங்கியதும் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சுந்தர்.சி வாக்களித்தார். பிறகு ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இவ்வாறு தன் காதல் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் குஷ்பு.

7 comments:

 1. தலைப்பை வைத்தே ... ஓடிவரச் செய்வதில் உங்களை விட்டால் யாரும் இல்லை.

  ReplyDelete
 2. இன்னா பாஸ் ஏதோ வில்லங்கமான விஷயம் என்று வந்தால் ச்சே.

  ReplyDelete
 3. குஷ்புவின் ஆறு வருட காதல் வீண் போகவில்லை ,ஏனென்றால் நடிகைகளின் திருமணம் என்பது ஜோக்காளியின் தினசிரி ஜோக் மாதிரிதான் !மேலும் சிரிக்க கீழே கிளிக்குங்க ....
  http://jokkaali.blogspot.in/2013/02/blog-post_8918.html

  ReplyDelete
 4. இதுலாம் ஓவரு .... கும்மாச்சி எவ்வளவு பீல் பண்றார் பாருங்க ...

  ReplyDelete
 5. தலைப்பை பார்த்து ஒடிவந்தேன் பல்புதான்

  ReplyDelete
 6. காதல் மட்டுமா. பிஸினெஸ்ம் இருக்கில்ல.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...