கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 February, 2013

’என் ரசிகர்களுக்கு நான் தலைவன் அல்ல” - விஜய் பேட்டி!


ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படம் சில தினங்களுக்கு முன் தனது 100-வது நாளை வெற்றிகரமாக கடந்தது. துப்பாக்கி படக்குழுவினர் ஒருவர்க்கொருவர் தங்கது நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு, ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இயக்குனர் விஜய்யுடன் - நடிகர் விஜய் இணையும் அடுத்த படம் ’தலைவா’. ‘விஜய் அரசியலில் இறங்குவதற்கான முதற்கட்ட ஏற்பாடு தான் இந்த படம் என்றும், சில தினங்களில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான முயற்சி என்றும் பலவாறு பேசப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றி பற்றியும், தலைவா திரைப்படம் பற்றியும் விஜய் பேட்டியளித்திருக்கிறார். 


ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேடியில் விஜய் “ துப்பாக்கி 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்ற்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பு தரப்பின் ரிப்போர்ட்படி 3-வது வரமே எதிர்பார்த்த வசூல் வந்துவிட்டது. 

இந்த மாபெரும் வெற்றிக்கு என் ரசிகர்களுக்கும், முருகதாஸுக்கும், படக்குழுவிற்கும் நான் நன்றி சொல்லியாக வேண்டும். ஆனால் துப்பாக்கி படத்தின் இந்த மாபெரும் வெற்றி என் மீதான எதிர்பார்ப்பையும், பொறுப்புகளையும் அதிகமாக்கிவிட்டது.

இயக்குனர் விஜய்யுடன் இணைந்திருக்கும் ‘தலைவா’ அரசியல் சம்மந்தப்பட்ட படம் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. 


எனக்கு என் ரசிகர்கள் தான் தலைவர்களே தவிர அவர்களுக்கு நான் தலைவன் அல்ல. ‘தலைவா’ தலைப்பு பொதுவானது என்பதை படத்தைப் பார்த்ததும் நீங்களே புரிந்துகொள்வீகள். எனக்கும் - இயக்குனர் விஜய்க்கும் இது ஒரு புதுமையான கதைக்களம்.

நிரவ்ஷா படப்பிடிப்பில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். என் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைகள் அறிமுக இயக்குனர்களின் படங்கள் தான். 


படத்தின் கதையமைப்பு தான் இயக்குனரின் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் ‘ஜில்லா’ திரைப்படத்தில் இயக்குனர் நேசனுடன் இணைகிறேன்” என்று கூறியுள்ளார்.

3 comments:

  1. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
  2. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

    ReplyDelete
  3. ஹி.ஹி.ஹி.ஹி......... உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...