கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 March, 2013

கோடையைவிட்டு தள்ளிபோன டாப் 5 தமிழ்படங்கள்...

பொதுவாக கோடை விடுமுறையில்தான் பிரபல ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்களைப் போட்டுத் தாக்குவார்கள் கோடம்பாக்கத்தினர். ரஜினி, கமலுக்கு இது பொருந்தாது. காரணம் அவர்களின் படங்கள் எப்போது வந்தாலும் கோடை விடுமுறை எஃபெக்ட்தான்! 
 
அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களுக்கு இந்த கோடை விடுமுறை மிகப் பெரிய வசூல் வாய்ப்பு. ஆனால் இந்த ஆண்டு, கோடையில் அப்படி ஒரு பெரிய படம் கூட வெளியாகாத சூழல் உள்ளது. காரணம் ஒன்று, ஐபிஎல். இன்னொன்று படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பது. 
 
இப்படங்கள் இந்த ஆண்டில் கலக்ககூடிய படங்களாக இருந்தாலும் தற்போது இல்லாமல் தள்ளிப்போகிறது என்ற வருத்தம் ரசிகர்களிடத்தில் இருக்கிறது.
 

கோச்சடையான் 
இந்த ஆண்டு கோடை விடுமுறை ட்ரீட்டாக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சைடையான் படத்தை. இந்தப் படம் இந்திய சினிமாவுக்கே புதிய அனுபவம். 3 டி மட்டுமல்ல, மோஷன் கேப்சரிங் எனும் புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள். ஏப்ரல் 14-ம் தேதி வரும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் இப்போது ஜூலை இறுதிக்கு தள்ளிப் போய்விட்டது.
சிங்கம் 2 
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் நடித்துள்ள படம் சிங்கம் 2. ஹரி இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்றார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. எனவே ஜூனுக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.
 
வலை 
வலை என்ற தற்காலிக தலைப்புடன் தயாராகிவரும் அஜீத் படமும் இந்த சம்மருக்குத்தான் வெளியாகும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படம் ஜூனிலாவது வெளியாகுமா என்று தெரியவில்லை.

தலைவா 
துப்பாக்கியின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தக்கவைக்க, மீண்டும் அதே மாதிரி கெட்டப்புடன், விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தை மேயில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. எனவே ஜூலை அல்லது ஆகஸ்டுக்குப் போய்விட்டது படம்.
ஐ 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட். சம்மரில் வந்தால்தான் இந்தப் படத்தின் பட்ஜெட்டை வசூலிக்க முடியும் என்ற நிலை. ஆனால் 55 சதவீதம்தான் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என ஷங்கர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அடுத்த சம்மருக்கு இலக்கு வைத்திருக்கிறார்களோ என்னமோ...!

3 comments:

  1. இந்த படம் எல்லாம் தள்ளி போயிடிச்சா ரொம்ப மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
  2. அநேகமாக மே மாதம் எல்லாம் வந்து விடும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  3. என்னவோ பண்ணட்டும்.இந்த படங்கள் எல்லாமே மசாலா கேஸ்கள் தானே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...