கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 March, 2013

வியந்த ரஜினி! வியக்கப்போகும் ரசிகர்கள்...! கோச்சடையான் புதிய தகவல்


ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மென்ட் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தான் “கோச்சடையான்“.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், R.சரத்குமார், தீபிகா படுகோன், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் 19 ஆம் தேதியன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் துவங்கியது.


தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம், ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளான டப்பிங், ரீரிகார்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், ஆகிய பணிகளை மார்ச் மாதம் 15ஆம் தேதி துவங்கி ஒரே நேரத்தில் மூன்று பிரிவுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர் .

நேற்று (28.02.13) ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார், சௌந்தர்யா அஸ்வின் உட்பட படக்குழுவின் முக்கிய நபர்கள் கோச்சடையான் படத்தை பார்த்திருக்கின்றனர். ரஜினியும், கே.எஸ்.ரவிகுமாரும் படம் பார்த்ததைப் பற்றி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள சௌந்தர்யா“ இந்த நாள் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். கோச்சடையான் பட வேலைகள் முடிந்துவிட்டது. அப்பாவும் (ரஜினிகாந்த்), கே.எஸ்.ரவிகுமார் அங்கிளும் படம் முழுவதையும் பார்த்து வியப்பில் ஆழ்ந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

கோச்சடையான் படத்தின் கதாசிரியரான K.S. ரவிக்குமார் அவர்கள் கூறியதாவது, “நான் நினைத்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக வந்துள்ளது” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு “என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் , மிக பிரமாதமாக வந்திருக்கிறது“ என்று தன் மகளும் கோச்சடையான் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா R அஷ்வின் அவர்களை வெகுவாக பாராட்டினார்.3D-ல் மோஷன் கேப்சூர் டெக்னாலஜி உபயோகப்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளவர் ராஜீவ் மேனன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான் பட பாடல்கள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கிறது. 
கோச்ச்டையான் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை உலக அளவில் பிரம்மாண்ட முறையில் நடந்த சோனி மியூசிக் திட்டமிட்டுள்ளதாம். படக்குழுவின் வேகத்திற்கு ஏப்ரலில் பாடல்களும், மே மாதத்தில் கோச்சடையான் திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (தலைவர் ரஜினிகாந்த் - என்ற போஸ்புக்கிலிருந்து)

6 comments:

 1. போஸ்புக்கா..?

  தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 2. தலைவர் திரையில் தெரிந்தாலே போதும். படம் செம ஹிட்.இதிலென்ன சந்தேகம்.

  ReplyDelete
 3. தகவலும் படங்களும் சுவை.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அன்பின் சௌந்தர் - தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...