கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 March, 2013

பெண்ணே...! இதை கூடவா சரியாக செய்யமாட்டாய்..!


ந்தித்துவிட்டு பிரியும் 
ஒவ்வொறு முறையிலும்
செல்லமாய் கிள்ளிவிட்டுப்போவாய்..!


கிள்ளிய தடத்தில் வலிகள் பார்த்து

உள்ளுக்குள்ளே ரசித்துக்கிடக்கிறது மனசு
கடந்த இரண்டு நாட்களாய்....!
 

நீ கிள்ளிய இடத்தை
ரசித்து பார்க்க இன்று தேடுகையில்
தடயம் தெரியாமல் ‌போக
தவிக்கிறது மனசு...!


ம்.. போ...
உனக்கு சரியாய் 

கிள்ளக்கூட தெரியவில்லையே...!
 
மீண்டும்
நீ செல்லமாய் கிள்ளிவிட்டு பிரியும்
நாளுக்காக காத்திருக்கிறேன் தற்போது...!வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

15 comments:

 1. பார்த்துங்க.. அடுத்த முறை ரத்தம் வந்துட மாதிரி கிள்ளிட போறாங்க..

  ReplyDelete
  Replies
  1. அப்படி நடந்தால்..

   கிள்ளிய அவள் கைகள்
   வலிக்காமல் பார்த்துக்கொள்கிறேன்...

   என் வலியை விட
   அவளின் வலிகளுக்குதான்
   நான் ஒடிந்துப்போவேன்...


   பார்ரா...

   இங்க ஒரு கவிதை....

   Delete
 2. ஹா ஹா ஹா ! என்ன லொள்ளு!

  ம்ம்ம் நல்லாருக்கு நண்பரே! கிள்ளுவதற்கு பதிலாக கடிக்காமல் இருந்தால் சரி,

  உங்கள் பதிவை என்னால் படிக்கமுடியவில்லை, குதிக்கிறது அடிக்கடி ரீப்ரஷ் ஆகிறது. இதற்காகவே நான் ஒரு பதிவும் போட்டேன் நீங்க கண்டுக்கவில்லை, இப்பகூட உங்க பக்கத்தை ஸ்டாப் செய்து வைத்துக்கொண்டுதான் படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கனும் நண்பரே....

   இந்த பிரச்சனை இருப்பது தற்போதுதான் தெரிய வருகிறது... தோழி அம்மனாடியாள் அவர்களும் சமீபத்தில்தான் இந்த பிரச்சனை இருப்பதாக கூறினார்..

   மற்ற எல்லா இடங்களிலும் சரியாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன்...

   தகலுக்கு மிக்க நன்றி...

   Delete
  2. //////
   இதற்காகவே நான் ஒரு பதிவும் போட்டேன் நீங்க கண்டுக்கவில்லை
   ///////

   மீண்டும் மன்னிக்கனும்.....
   அந்தப்பதிவின் லிங்கை தயவு செய்து தரவும்....

   நன்றி

   Delete
 3. கிள்ளுவதால் துள்ளிக் குதிப்பது ஒருபுறம் இருக்கட்டும்...

  துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன...? நேரம் கிடைப்பின் பார்க்கவும் :

  http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் குறிப்பிட்ட பதிவை பார்த்தேன்...

   எனக்கு விளங்க வில்லை தலைவரே...
   .Com என்று மாறுவதற்கு ஏற்கனவே சசி சொன்ன விதத்தில் ஒரு போடிங் போட்டிருக்கிறேன்....


   இந்த பிரச்சனையை தீர்க்க இன்னும் யாரையாவது அனுவேண்டும் என்று நினைக்கிறேன்...

   தகலுக்கு நன்றி தனபாலன் சார்...

   Delete
  2. துள்ளிக் குதிப்பது ஆகாஷ் அவர்களுக்கு மட்டும் தானா..? என்று தெரியவில்லை...
   அவர் இன்று சென்ற இன்னொரு தளத்திலும் சொல்லி இருந்தார்...

   எதற்கும் இங்கு சென்றும் கருத்துரைகளை பார்க்கலாம்... (நேரம் கிடைப்பின் )

   http://jayadevdas.blogspot.com/2013/03/blog-post_12.html

   Delete
  3. .Com என்று மாறுவதற்கு ஏற்கனவே சசி சொன்ன விதத்தில் ஒரு போடிங் போட்டிருக்கிறேன்....//

   அந்த நிரலில் தான் பிரச்சனை. அதை நீக்கிவிட்டு வேறு நிரலை இணைக்க வேண்டும்.

   http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

   Delete
 4. அடுத்த தடவை நறுக்குனு கிள்ளச்சொல்றேன்...

  ReplyDelete
 5. அப்படி போகுதா கதை நடக்கட்டும் நடக்கட்டும்கவிதை சூப்பர்
  கவிதை நாயகியே!
  எப்படி வேண்டுமானாலும் கிள்ளிவிட்டுப்போ! ஆனால் சௌந்தரை தள்ளிவிட்டு மட்டும் போகாதே!

  ReplyDelete
 6. அன்பின் சௌந்தர் - கிள்ளுவதில் உள்ள சுகம் கிள்ளப்பட்டவரின் மகிழ்ச்சியினையும் தூண்டும் சுகம். - சில சமயம் சரியாகக் கிள்ளாமல் அவசரத்தில் சென்று விடும் போது இவரின் மனம் வருந்தும். ம்ம்ம்ம்ம்ம் - கிள்ளுவது சுகமா அல்லது கிள்ளப் படுவது சுகமா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. இன்னாது கிள்ளறாங்களா? டீச்சர் கிட்ட சொல்லிடுங்க. சௌந்தர் கவிதை அருமை.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...