கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 March, 2013

சென்னையில் ஒரு நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா - ஒரு சிறப்பு முன்னோட்டம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரா என்ற இளைஞனின் இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்திய உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் டிராஃபிக் என்ற படத்தை எடுத்தனர். இதயம் இருப்பது ஓரிடம். அதனை பொருத்த வேண்டிய நபர் இருப்பது வேறிடம். குறிப்பிட்ட காலஇடைவெளியில் இதயத்தை உரிய மருத்துவ பாதுகாப்புடன் சேர்த்தாக வேண்டும். நெரிசல்மிக்க சாலைவழியாக மட்டுமே போக முடியும். இதயத்தை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துச் சென்று இதயம் தேவைப்படுகிற நோயாளிக்கு பொருத்தினார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பாக காட்டியிருந்தார்கள்.

டிராஃபிக்கை தமிழில் எடுக்க விருப்பப்படுகிறேன் என்று கமல் சொன்ன பிறகு டிராஃபிக் பற்றி தமிழில் அதிகம் பேச ஆரம்பித்தனர். மலையாளத்தில் இந்தப் படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். ஆனால் இயக்குனர் வேறு. தமிழில் இயக்கியிருப்பவர் ஷஹீத் காதர்.

மலையாளத்தில் குஞ்சாகா போபன் நடித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும், கார் ஓட்டும் போலீசாக நடித்த சீனிவாசனின் பாத்திரத்தில் சேரனும், அனூப் மேனனின் போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமாரும், ரகுமான் நடித்த வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்துள்ளனர்.

அஜயன் பாலா, பாபி சஞ்சய் திரைக்கதை எழுதியுள்ளனர். சரத்குமாரின் கதாபாத்திரத்தை டெவலப் செய்ய கேட்டுக் கொண்டதால் டிராஃபிக் இயக்குனர் சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்குவதிலிருந்து விலகியதாக ஒரு பேச்சு உள்ளது.
 
88*******************************88


முதல் படம் பசங்க அளவுக்கு வம்சமோ, மெரினாவோ போகவில்லை. பாண்டிராஜ் காரணத்தை ஆராய்ந்திருப்பார். காமெடியை கொஞ்சம் தூக்கலாக வைக்கலாம் என்ற முடிவில் அவர் இயக்கியிருக்கிற படம்தான் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

பசங்க படத்தில் அறிமுகப்படுத்திய விமலும், மொpனாவில் அறிமுகம் செய்த சிவ கார்த்திகேயனும் ஹீரோக்கள். விமலுக்கு ஜோடி பிந்து மாதவி, சிவ கார்த்திகேயனுக்கு ரெஜினா.

திருச்சி பொன்மலை பின்னணியில் படம் உருவாகியிருக்கிறது. பொன்மலை ரயில் நிலையமும் ரயிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறதாம். படம் தாமதமானதற்கு இந்த ரயில் நிலைய காட்சிகளே காரணம் என்றும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவை பயன்படுத்தியிருக்கிறார். மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் ஒரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார். பாண்டிராஜின் பசங்க தயாரிப்பு நிறுவனமும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் படத்தை வெளியிடுகிறது.

படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...