கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 March, 2013

யாருக்கு தெரியும் கலைஞரின் வேதனை..! இனியும் அவரை காயப்படுத்தாதீர்..!


இலங்கைப்பிரச்சனை அனைத்திலும் நாம் முன்நிற்க வேண்டும் என்ற ஆசையும் அதே சமயம் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படகூடாது என்ற ஆதங்கமும் தன் மனதில்போட்டு இரண்டுக்கும் தன்னை மையப்படுத்தி சமநிலையில் இருந்த கலைஞரை தற்போது காலம் தடுமாற வைத்துவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னையில், தான் எடுத்து வைத்த கோரிக்கைகளை மன்மோகன்சிங்கும், சோனியாவும் கண்டு கொள்ளவில்லையே என்ற மனவேதனையில், கனத்த இதயத்துடன், பொங்கி வரும் கண்ணீரை அடக்கி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, விலக்கிக் கொண்டிருக்கிறார், கருணாநிதி.

தி.மு.க., அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை, முன் போல் ஏமாற்றம் ஏதும் தராமல், உண்மையிலேயே, பிரதமரிடம் சேர்ப்பித்திருக்கிறார். இப்படிப்பட்ட, "தியாக' உள்ளம் கொண்ட தி.மு.க., தலைவரை, "கபட வேடதாரி' என்றும், "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் போலி பக்தன்' என்றும், "நடிகர்' என்றும், தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், "கமென்ட்' அடிப்பது, மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஆங்கிலம், இந்தி மொழி பேசத் தெரியாத தன் மகன் அழகிரியை, மத்திய அமைச்சராக்கி, மாபாதகம் செய்து விட்டோமே என்று, எத்தனை இரவுகளில், கண்ணீர் வடித்திருப்பார் கருணாநிதி என்பது யாருக்குத் தெரியும்?

ஊழல் செய்தாலும், தன்னைப் போல், அதிலிருந்து தப்பிக்க தெரியாத ஒரு பெண்ணை, பெற்று தொலைத்து விட்டோமே என்று, கனிமொழி மீது, கருணாநிதி அடைந்திருக்கும் வேதனையை வெளியே சொல்ல முடியாது; அது யாருக்கு தெரியும்?

ஸ்டாலினை, தி.மு.க., தலைவராக அறிவித்திருப்பதை, தமிழக மக்கள் புறக்கணித்து விட்டால், தன் மகனின் எதிர்காலம் சூனியமாகிப் போய் விடுமே என்ற கவலை வேறு, கருணாநிதியை வாட்டுகிறது; இந்தக் கவலை யாருக்கு புரியும்?

லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள், தன் போர் நிறுத்தப் பேச்சை கேட்டு, மாண்டு போயினரே என்று, நித்தமும் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார் அவர்; இது யாருக்கு தெரியும்?

குறிப்பாக, இது, ஜெ.,வுக்கோ, சோனியாவுக்கோ தெரியுமா? "இலங்கை மீது, பொருளாதாரத் தடை விதிக்க மாட்டோம்; தனி ஈழத்தையும் ஆதரிக்க மாட்டோம்' என்கிறார் ராகுல். தனக்கும் அதில் உடன்பாடு உண்டு என்றாலும், அதை வெளியே சொல்ல முடியாமல், அவர் அடையும் வேதனை, யாருக்கு புரியும்?


காங்கிரசைப் பகைத்தால், தி.மு.க., ஜெயிக்காது என்ற உண்மையும், கருணாநிதிக்குப் புரிந்து விட்டது. இதனால், அவருக்கு ஏற்படும் மன உளைச்சல் தான், யாருக்கு தெரியும்?

இப்போது, "தியாகராஜப் பெருமானே... என்னைக் காப்பாற்றுங்கள்' என்று திருவாரூருக்கு சென்று, இரங்கல் பா பாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது யாருக்கும் தெரிய வேண்டாம்... தெரிந்தால், அவருடைய, "ஆத்திக இமேஜுக்கு' களங்கம் ஏற்பட்டு விடும்; பாவம் விட்டு விடுங்கள்! (கடிதத்தில் நண்பர்...)

8 comments:

  1. நண்பர் கலைஞரை விட சூப்பரா கடிதம் எழுதி இருக்காரே!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஈழத்தாயுக்கும் எதாவது ஐடியா சொல்லி ஈழம் கிடைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்.தேவையில்லாமல் கலைஞரோ மற்றவர்களோ ஏதாவது செய்யும் முன்னே

      Delete
    2. அப்படியே ஆத்தாளுக்கும் சூடு,சொரணை வர்றமாதிரி எழுதினால் நல்லா இருக்கும்

      Delete
  2. அப்படியே ஈழத்தாயுக்கும் எதாவது ஐடியா சொல்லி ஈழம் கிடைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்.தேவையில்லாமல் கலைஞரோ மற்றவர்களோ ஏதாவது செய்யும் முன்னே .

    ReplyDelete
  3. ஆமா இப்ப நீங்க என்ன சொல்ல வாறிங்க ..கலைஞர் நல்லவரா கெட்டவரா.....

    ReplyDelete
  4. அப்படியே ஆத்தாளுக்கும் சூடு,சொரணை வர்றமாதிரி எழுதினால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  5. கவிதை வீதி சௌந்தர் அவர்களே உங்களுக்கு என்ன வயது இருக்கும் என்று எனக்கு தெரியாது ராஜீவ் கொல்லப்பட்டபோது அந்த கொலைக்கு காரணம் கலைஞ்சரும் திமுக வும் தன் என்று பேசி ஆட்சி கட்டிலில் அமர்தவர் உங்கள் ஈழத்தாய். அவர்கள் ஒரு தீர்மானம் போட்டார்கள் என்று இந்த குதி குதிக்கும் நீங்கள் 2008 ல் கலைஞர் அவர்களால் போட்ட தீர்மானத்தை எந்த நாயாவது ஆதரித்ததா? இந்த விஷயத்தில் கலைஞர் எது செய்தலும் குற்றம் சொல்லும் நீங்கள் இந்த அம்மா என்ன செய்தார் ஈழதமிழர்களுக்காக முதலில் இப்பொது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் மத்திய அரசை விட்டு வெளியே வா என்று சொன்ன நீங்கள் வந்தவுடன் அதையும் குறைகூருகிறிர்கள் என்றால் ஈழ விசயத்தில் கலைஞர் அவர்களை தனிமை படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் உங்களுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. http://www.vinavu.com/2009/05/06/jayalalitha-is-anti-eelam/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...