கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 April, 2013

காங்கிரஸை ஒழிக்க ஒரே அணியில் ஜெயலலிதா / கலைஞர்... சூடுபிடிக்கும் 3-ம் அணி

தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா தெரிவித்துள்ளார். 
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால் மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். 

மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக்கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. 

மாநிலக்கட்சிகளின் முதல்வர்கள், தலைவர்களை சந்தித்து 3-ஆவது அணி அமைப்பது குறித்து பேசுவேன். குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக மாநிலக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன். 

கர்நாடக சட்டசபை தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சியின் சக்தியை வெளிப்படுத்திய பிறகு மே 5-ந் தேதிக்கு பிறகு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலக்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்றார்.

செய்யுங்கப்பா...!

4 comments:

  1. நடக்கட்டும்... நடக்கட்டும்...

    ReplyDelete
  2. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...