கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 April, 2013

சிவாஜியை அடுத்து பாலாவை கலாய்த்த விவேக்..!

 
வயிறு குலுங்க சிரிக்கக்கூடிய காமெடி காட்சிகளில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து பல நாட்களாகிவிட்டன. எனவே இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க ’மச்சான்’ திரைப்படத்தில் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறாராம் விவேக்.


சமீபத்தில் ’நடிகர் திலகம்’ சிவாஜியைப் போல் வேஷமிட்டு நடித்து கிண்டல் செய்ததற்காக பெரும் எதிர்ப்பை சந்தித்த விவேக் மச்சான் படத்தில் யார்யாரை கிண்டல் செய்கிறாரோ, அவர்களிடமெல்லாம் பர்மிஷன் வாங்கி வருகிறாராம். மச்சான் படத்தில் பெரிய பணக்காரராக இருக்கும் விவேக் தான் செய்யும் சில காரியங்களால் பிச்சைக்காரனாகி விடுவாராம்.

அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவன், ’யோவ், நீ பாலா படத்துல நடிக்க போவலாம்ல. கெட்டப் அப்படியே இருக்கு! என்று ஐடியா கொடுக்க, 'பாலா படத்துலயா, நானா, நடிக்க சொல்றீயா? அடப்பாவி. பாலா படத்துல நடிச்சவங்க ரொம்ப பேரு இப்ப இப்படிதானேடா திரியுறாங்க' என்பதுபோல் வசனம் வைத்திருக்கிறாராம்.

மறுபடியும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக டீசண்டாக இயக்குனர் பாலாவுக்கு ஃபோன் செய்து “சார் உங்கள கலாய்க்கிற மாதிரி வசனம் வெச்சிருக்கேன். உங்களுக்கு சங்கடம்னா எடுத்துறலாம். இல்லன்னா பேசிடலாம்” என்று கூறினாராம்.

இதற்கு பாலா “ அதெல்லாம் பரவால்ல பேசுங்க. இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கலாய்ச்சிக்கோங்க” என்று முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். விவேக் பொதுவாகவே மற்றவர்களை கிண்டலடித்து தான் காமெடி காட்சிகளில் நடிப்பார். தமிழ் சினிமாவில் விவேக் கிண்டல் அடிக்காத ஆளே இல்லை எனலாம்.

7 comments:

 1. எப்படியோ இப்படியே வண்டியை ஓட்டுகிறார்...

  ReplyDelete

 2. //
  இதற்கு பாலா “ அதெல்லாம் பரவால்ல பேசுங்க. இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கலாய்ச்சிக்கோங்க” என்று முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.//

  -பாலாவிற்கு பெரிய மனசுதான்..

  ReplyDelete
 3. பாலாவுக்கு நல்ல மனசுதான்! நன்றி! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மத்தவங்களைக் கலாய்க்கறது ரொம்ப ஈஸி. அவங்களை மாதிரி புகழ் பெறுவதுதான் கஷ்டம்! இன்னும் சொல்லப் போனா கலாய்த்தலும் ஒருவிதமான புகழ்சசியே! அதனால விவேக்கை அனுமதிச்ச பாலாவின் பெருந்தன்மையைப் பாராட்டிட்டு, உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன்.!

  ReplyDelete
 5. நிஜமாகவே பாலாவிற்கு பெரிய மனசுதான், விவேக் இன்னும் எத்தனை நாளுக்கு இந்த மாதிரி அடுத்தவர்களை நக்கல் செய்தே காலத்தை ஓட்டப்போகிறார்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...