கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 April, 2013

இரவு நேர மின்தடையும்... விஜய் நம்பும் அதிர்ஷ்மும்...!

தமிழகம் எங்கும் பல்வேறு இடங்களில், சூழ்நிலைக்குத் தக்கபடி, பல நேரங்களில் மின் வெட்டு இருப்பது, அனைவரும் அறிந்ததே. ஆனால், இரவு, 12:00 மணி முதல், 1:00 மணி வரையிலும், அதிகாலை, 3:00 மணி முதல், 4:00 மணி வரையிலும் உள்ள மின்வெட்டு, குழந்தைகள், பெரியவர்கள் என, அனைவருக்கும் மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இரவு சரியாக தூங்க முடியாததால், மாணவ, மாணவியர் பள்ளியில் சுறுசுறுப்பாக இருக்க முடிவதில்லை. பெரியவர்களுக்கும் அடுத்த நாள் பணிகள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். குடும்பத் தலைவிகளும், அடுத்த நாள் எழுந்து, கடமைகளைச் சரிவர செய்ய முடிவதில்லை.
மின்சாரம் நிறுத்தப்பட்ட உடனேயே, கொசுக்களின் தொல்லை மிகுதியாகி விடுகிறது. இந்த இரண்டு மணி நேர மின்வெட்டும், திருடர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. 
எனவே, மாணவ, மாணவியர், வயதானோர், குடும்பத் தலைவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் நலனை கருத்தில் கொண்டு, இரவு, 10:00 மணிக்கு மேல் மின் நிறுத்தம் செய்யாமல் இருந்தால், அனைவருக்கும் பயனாக அமையும்.  யோசிக்குமா மின்சாரவாரியம்.

+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+**+*+*+
“ஒரு படத்திலாவது, உங்களுடன் நடிக்க வேண்டும் என்று விஜய் மகன் சஞ்சய், அவரிடம் ஆசையாக கேட்டார். அதையடுத்து, “வேட்டைக்காரன் படத்தில், “நான் அடிச்சா தாங்கமாட்டே என்ற பாடலில், மகனை, தன்னுடன் சிறிது நேரம் நடனமாட வைத்தார் விஜய். 
அந்த வகையில், நானும், ஒரு நண்பன் போலதான் என்று சொல்லும் விஜய், மகன் மூலம் தான், தன் படங்கள் பற்றி, வெளியே என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்கிறார். “என் படங்களின் பாடல்களை முதலில், அவனிடம் போட்டுக் காட்டுவேன்.

அவனுக்கு, எந்தெந்த பாடல்களெல்லாம் பிடித்திருக்கிறதோ, அதெல்லாமே கண்டிப்பாக ஹிட்டாகும். “துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற, “கூகுள் கூகுள் பாடலை கேட்டு விட்டு, இந்த பாட்டு, கண்டிப்பா ஹிட்டாகும்னு சஞ்சய் அடிச்சி சொன்னான். அதே போன்றே ஹிட்டானது என்கிறார் விஜய்.

3 comments:

  1. சூப்பர் நடிப்புக்காக விஜய்'க்கு ஆஸ்கர் விருது கிடைக்கப் போகுது தெரியுமாலேய் உனக்கு...?

    ReplyDelete
  2. ஆம்.இரவு நேர மின் தடை , பகல்நேரப் பணிகளைப் பாதிக்கின்றது, மின்வாரியம் மனது வைக்க வேண்டும்

    ReplyDelete
  3. இரண்டு பதிவுகளை இணைத்திருப்பது சரியா?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...