கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 April, 2013

கொசு கடியில் இருந்து தப்பிக்க... பவர் ஸ்டாரின் புதிய கண்டுபிடிப்பு...!


வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?

டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது!
 
*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+

இரவெல்லாம் ஒரே கொசு கடியில் அவதியுற்ற பவர் ஸ்டார்,

கொடிய விஷத்தை மடக் மடக் என்று குடித்து விட்டு கொசுக்களை பார்த்து சொன்னார்,

 இப்ப கடிங்க பார்க்கலாம், கடிச்சா செத்துடுவிங்க ...!!!

 *+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+


 "டார்லிங்! உனக்காக என்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தர நான் தயாரா இருக்கிறேன்"


 "நீங்க என்ன தர்றது, கல்யாணம் ஆகட்டும் நானே எடுத்துக்குவேன்"
*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+

""நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா குறையும்''

""நான் என்ன செய்யணும் டாக்டர்''

""அதான் சொன்னேனே நடங்கன்னு''
*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+

தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!

தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!
*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+

மனைவி: ஏங்க...காசிக்குப் போனா ஏதாவது ஒண்ணை விட்டுட்டு வரணுமாம்ல, நீங்க எதை விடப் போறீங்க?

கணவன்: அதான் நீ கூட வரப்போறல்ல!

*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+

அப்பா: உன்னை விட வயசுல குறைந்த 
தம்பியை நீ ஏன்டா அடிச்சே?


மகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான் 
பண்ணியிருக்கீங்க.  (பசங்க எவ்வளவு தெளிவாயிருக்காங்க பாருங்க)

*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+
மகிழ்ந்திருக்கவே எல்லாம்
படித்ததில் தொகுத்தவைகள்...!

8 comments:

 1. அட்டகாசமான நகைச்சுவைகள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. அருமையான தொகுப்பு
  நகைச்சுவை துணுக்குகளும் படங்களும்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நீங்க கடிக்கிற கடிக்கு ஒரு கொசு படையே வந்து கடிச்சாலும் எதுவும் தெறியாதுபோல.

  ReplyDelete
 4. படங்களும் நகைச்சுவை துணுக்குகளும் அருமை

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...