கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 May, 2013

ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு ... ராமதாஸ் கைது... கிளம்பும் பூதங்கள்..!



மதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கிய வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவரை இன்று மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
 
சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் சிகரெட் பிடித்து நடித்தது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் 2004-ம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2004-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி ராமதாஸ் மதுரை வந்தார். நெல்பேட்டை பகுதியில் ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் கருப்பு கொடி காட்டினர். இதை தடுத்த பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரஜினி ரசிகர் மன் றத்தைச் சேர்ந்த வக்கீல் மணவாளன் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு மதுரை ஜேஎம் 1 கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. ராமதாஸ், இளஞ்செழியன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் ராமதாசுக்கு ஏற்கனவே கோர்ட் வாரன்ட் பிறப்பித்து இருந்தது. 
 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் இளஞ்செழியன் மதுரையில் கொலை செய்யப்பட்டார். தற்போது ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை தாக்குதல் வழக்கிலும் அவரை கைது செய்யும் வகையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி போலீசார் மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ரவி முன்பு நேற்று மனு தாக்கல் செய்தனர். 
 
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ராமதாசை கைது செய்யும் பிடிவாரன்டை பிறப்பித்தார். இதை போலீசார் பேக்ஸ் மற்றும் இமெயில் மூலம் திருச்சி சிறைக்கு அனுப்பியதால் நேற்றிரவே ராமதாஸ் கைது செய்யப்பட்டார். 
 
ஜாமீன் கிடைத்தும் ராமதாஸ் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமதாசை இன்று மதுரைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதேவேளை, ராமதாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் போலீசார் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த வழக்கில் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து, ராமதாஸ் உள்ளிட்ட 363 பேரை ஜாமீனில் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது. இதை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் மகாராஜா ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை அவசரமாக ஒரு மனுவை தாக் கல் செய்தனர்.

பின்னர், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆஜராகி, ராமதாஸ், அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும். ராமதாசை கைது செய்ததால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறியல் நடந்தது. அரசு பஸ்கள் எரிக்கப்பட்டது. பல இடங்களில் பாலங்களுக்கு கீழே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் நீதிமன்றம் ஆராய்ந்து பார்க்காமல் அவசர அவசரமாக, எந்திரதனமாக நிபந்தனை ஜாமீன் கொடுத்தது தவறானது. இதை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.இதைக் கேட்ட நீதிபதி, போலீசார் வரும் 6ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மனு மீது விசாரணை நடத் தப்படும் என்று உத்தரவிட்டார்.

இதனிடையே ராமதாஸ் கைதானதை அடுத்து பல்வேறு பகுதிகளில் நேற்றும் வன்முறைகள் தொடர்ந்தன. இரண்டு பஸ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் 50 க்கு மேற்பட்ட பஸ்கள் சேதமாக்கப்பட்டன. பல இடங்களில் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் பல பனகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது.

1 comment:

  1. இந்த கேஸ் எப்போ வரும் ,எப்படி வரும்னு தெரியாம இருந்தது .ஆனா வர வேண்டிய நேரத்திற்கு வந்திடுச்சே !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...