கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 May, 2013

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் ஏகப்பட்ட ஜோக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக சில ஜோக்குகள் வந்துள்ளன. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு பெயர் போனவர். ஆனால் அவரை வைத்து பலர் இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டரில் காமெடி பண்ணுகிறார்கள். இந்த கூத்து அனைவருக்கும் தெரிந்தது தான். 

தற்போது மேலும் சில ஜோக்குகள் ரஜினியைப் பற்றி உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்...

 
ரஜினிகாந்த் இன்று சுடப்பட்டார்... 
நாளை குண்டுக்கு இறுதிச் சடங்கு

காம்பஸை வைத்து ரஜினி நேர் கோடு வரைவார்
 ரஜினியின் நாடித்துடிப்பை ரிக்டர் அளவுகோலை வைத்து கணக்கிடுவார்கள்.

இந்திய ரூபாயின் அடையாளமான 
ஆர் ரஜினிகாந்த் பெயரின் முதல் எழுத்து
 ரஜினிகாந்த் இஸ் த சீக்ரட் ஆஃப் பூஸ்ட்'ஸ் எனர்ஜி

காம்ப்ளான் இஸ் எ ரஜினிகாந்த் பாய்
 100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ரஜினி முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.

இன்டெல்லின் புதிய விளம்பரம்: "ரஜினிகாந்த் இன்சைட்"
 

அலெக்சாண்டர் கிரகாம் பெல் முதன்முதலாக தொலைபேசியை பயன்படுத்தியபோது அதற்கு ஏற்கனவே ரஜினி 2 மிஸ்ட் கால் கொடுத்ததை கண்டுபிடித்தார்.

மேக்னடிக் காம்பஸ் ஏன் எப்பொழுதும் வடக்கையே காட்டுகிறது? ஏனென்றால் ரஜினி தெற்கில் வாழ்கிறார். அவரைப் பார்த்து கை காட்ட யாருக்கும் தைரியம் இல்லை.
 
 நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே ரஜினி தான்.

ரஜினி 5 மொழிகளில் விசில் அடிப்பார்

மோனோலிசா ஓவியம் ஏன் சிரிக்கிறது என்பது ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்.

 தனது காதலி செய்த தவறை ஒப்புக்கொள்ள வைக்க ரஜினியால் மட்டுமே முடியும்.

1947ல ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற காரணம் ரஜினி பிறந்தது தான்...
 
இது எப்படியிருக்கு தலைவரைப்பத்தி இன்னும் சொல்லனுமா இதுபோதுமா....!

(எப்படியெல்லாம் கிளம்பியிருக்காங்க பாருய்யா...)

9 comments:

  1. நல்ல கூத்துக்கள் தான்...! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...!!!

    ReplyDelete
  2. கொஞ்சம் டெனசன் ஆனேன் இருந்தாலும்பறவாயில்லை

    ReplyDelete
  3. நல்லா தான் யோசிக்கிறாங்க....!!!

    ReplyDelete
  4. ரொம்பவே யோசிக்கிறாங்க

    ReplyDelete
  5. யப்பா..
    முடியல.. சாமி...

    ReplyDelete
  6. உண்மையாக இருக்கலாம்...

    ReplyDelete
  7. நண்பர்களே...
    நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
    அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
    நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
    பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
    எதுவும் வெளியிடாமல்...
    அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
    இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

    அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
    இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. ரஜினி தமிழராக பிறக்கவில்லையே என
    மனம் ஏக்கம் கொண்டது

    ReplyDelete
  9. நன்றாகத்தான் யோசிக்கிறார்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...