கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 June, 2013

இதுவும் விவேகானந்தர் வாழ்வில் நடந்ததுதான்..!


விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்....
 
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதைவிட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட, அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...
(அறிஞர்கள் வாழ்வில்)

7 comments:

  1. மனம் நோகாத சரியான பதில் அருமை...

    ReplyDelete
  2. ம்ம்ம் பதில் நல்லா இருக்கு.., ஆனா, இந்த கதையை எல்லா அறிஞர்களுக்கும் சொல்றாங்களே அது எப்படி?!

    ReplyDelete
  3. நல்லவேளை நித்தியானந்தா அங்கே இல்லை, பாவம் பொண்ணு தப்பிச்சித்தது.

    ReplyDelete
  4. என்னாது விவேகானந்தர் தாடி வச்சிருந்தாரான்னு கேட்டு உருத்தான் என்கிட்டே பத்தாயிரம் டாலர் பந்தயம் கட்டினான்....ஆமா இந்த தாடி உண்மையா இல்லையா ?

    ReplyDelete
  5. எல்லோரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமானதொரு
    பண்பு இது தான் .வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...