கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 June, 2013

விஜய் வழியில் குறுக்கிடும் அரசியல் கட்சிகள்..! விஜய் எடுக்கப்போதும் அதிரடி முடிவுகள்...!நடிகர் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22) முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1 கோடி ரூபாய் அளவில் ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டுமைதானத்தில் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இந்நிகழ்ச்சியை மாபெரும் நிகழ்ச்சியாக மாற்றும் எண்ணத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் ரசிகர்களுக்கும் நிகழ்ச்சிக்கு வந்து சேரும்படி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை மன்றத்திலிருந்து கண்டிப்பான அழைப்பு விடுக்கப்பட்டது. 

விஜய்யின் 39-வது பிறந்தநாள் என்பதால் 3900 ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படவிருப்பதாகவும், மேலும் இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தனது ரசிகர் பலத்தை எடுத்துக்காட்டும் ஒரு அரசியல் மூவ்-ஆகவும் இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.

இதற்கேற்ற வகையில் சென்னையின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிக்கான பேனர்கள் அமைக்கப்பட்டு சென்னை நகரமே அமர்க்களப்பட்டுவந்தது. 
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் புக் செய்யப்பட்டு ஜூன் 8-ஆம் தேதியன்று சென்னையை நோக்கி வரவிருந்ததால், விஜய் அரசியல்வாதிகளுக்கு தன் பலத்தைக் காட்டும் முயற்சியாக இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு தான் வெற்றி என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இப்படி ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியைக் காணவும், அரசியல்தரப்பில் விஜய்யின் அடுத்த மூவ் பாற்றி அறியவும் ஆவலாக இருந்த சமயத்தில் ‘விஜய் தலைமையில் ஜூன் 8-ஆம் தேதி நடக்கவிருந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து தகவல் வந்துள்ளது. 

நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதற்கான காரணங்கள் சொல்லப்படாவிட்டாலும், அரசியல் தலையீடுகளினால் தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கோடம்பாக்கத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பொதுவாழ்வில் ஈடுபடபோவதாக விஜய் அறிவித்தார் என்று ஊடகங்கள் மூலமாக பல்வேறு செய்திகள் வந்திருந்தது. நடிப்பைத்துறந்து அரசியலில் மும்முரமாக ஈடுபட்டால் எதிர்வரும் தேர்தலில் வாக்கு வங்கியை கலைக்கலாம் என தமிழக கட்சிகள் கலக்கத்தில் இருந்தன.

கடந்த தேர்தலில் திமுக மீதான கசப்பில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட பிரச்சாரமே செய்தார். அவர் தந்தையும் களத்தில் இறங்கினார். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும் அணில் மாதிரி உதவினேன் என்று அவர் அறிவிக்க, அடுத்த நிமிடமே ஆட்சி மேலிடம் 'அணில்' விஷயத்தில் கறார் பார்வையுடன் நடக்க ஆரம்பித்தது.

ஆனால் திராவிடக்கட்சிகள் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க கண்டிப்பாக ஊக்குவிக்கமாட்டார்கள். ஆளும்கட்சியும் சென்னையில் இதுபோன்ற ஒரு பெரிய விழாக்களை நடத்து அனுமதித்துவிட்டு பின்பு அதனால் வரும் பிரச்சனைகளை ஏன் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று எண்ணியே பின்புலத்தில் இருந்து காய் நகர்த்துகிறார்கள் என்று எண்ணப்படுகிறது.

'பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'அணிலை' பெரிதாக வளர்த்து, அதனிடமே ஆதரவு கேட்க வேண்டிய சூழல் வேண்டாமே என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்!' என்று கண்ணடிக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

இச்சூழலில் தமிழக அரசியலில் அதிரடியாக இறங்குவதா அல்லது சினிமாத்துறையிலே நீடிப்பதா என்ற விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்.

3 comments:

  1. நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  2. இன்னும் என்னென்னலாம் சந்திக்கனுமோ இந்த தமிழகம்?!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...