கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 June, 2013

இதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...?


"எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும் . அதுதான் என்னுடைய ஃபார்முலா" என்று நாரதரிடம் சொன்னார் கடவுள் .

"புரியவில்லையே" என்று வழக்கம் போல் வம்பு செய்தார் நாரதர் .

கடவுள் புன்னகைத்தார் .

"நான் ஜப்பானைப் படைத்தேன் . அந்த நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் . உழைப்பாளிகள் . ஆனால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகளையும் படைத்தேன் ."

" ஆமாம் ".

" உலகத்திலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக அமெரிக்காவைப் படைத்தேன் . அதே சமயம் பாதுகாப்பின்மையையும், பதற்றத்தையும் அவர்களுக்குத் தந்துள்ளேன் ".

"ஆமாம், ஆமாம் " என்ற நாரதர்,

" சரி கடவுளே, நீ படைத்த நாடுகளுள் மிக நல்ல நாடு எது ? "

கடவுள் பதில் சொன்னார் .

" இந்தியாதான் . எல்லா வகை கலாச்சாரங்களும் அங்கே உண்டு . நல்ல இயற்கை வளங்கள், தொழில் வளம், சிறந்த மக்கள் என்று இந்தியாவுக்கு நான் அளித்துள்ளேன் ".

"நல்லதும் கெட்டதும் இருப்பதுதான் உங்கள் ஃபார்முலா என்றீர்களே ? இந்தியாவில் பிரச்னைகளே இல்லாமல் ஏன் செய்தீர்கள் ?"

கடவுள் கலகலவென சிரித்தார் .

"அதற்காகத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்தேன் ".
(முகநூலில் படித்தது...)

****************************************
இந்த நிலை இன்னும் வேண்டுமா...
காடுகளை அழிப்பதை தடுப்போம்...
மரம் வளர்ப்போம்....
மனிதம் வளர்ப்போம்....!

11 comments:

  1. நல்லாத் தான் படைச்சார் போங்க...

    ReplyDelete
  2. படம் சொல்லும் கருத்து அனைவரும் சிந்திக்க வேண்டியது.

    ReplyDelete
  3. "அதற்காகத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்தேன் ".\\
    அதற்காகத்தான் இந்தியாவுக்கு அரசியல்வாதிகளைக் கொடுத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான பதில் ...சகோ. well done

      Delete
  4. படம் சொல்லும் சேதி அருமை. எப்போ விழிச்சுக்க போறோம்ன்னு தெரியலியே

    ReplyDelete
  5. நானும் படிச்சிருக்கேன்! நல்ல கதை! நன்றி!

    ReplyDelete
  6. படித்ததில் பிடித்தது! உங்களுக்கு மட்டுமல்ல!எனக்குந்தான்!

    ReplyDelete
  7. நகைச்சுவை யானாலும் நிஜச்சுவை.

    ReplyDelete
  8. .. மரம் வளர்ப்போம்....
    மனிதம் வளர்ப்போம்....! ..

    உண்மைதான்... தல..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...