கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 July, 2013

சூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சனம்...!


2010-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முழுநீள கமர்ஷியல் படமாக வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை விட, சூர்யாவின் உயரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான் அதிகம்.


அதிலும் சமூக வலைதளங்களில் சூர்யாவை விட அவரது ஜோடியான அனுஷ்கா உயரமாக இருக்கிறார் என்று பலவாறு பேசப்பட்டது. ஆனால் எந்த விமர்சனத்தையும் பொருட்டாக மதிக்காமல் மறுபடியும் சூர்யா - அனுஷ்கா ஜோடி சிங்கம் 2 திரைப்படத்தில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (09.07.13) நடந்த சிங்கம் 2 சக்சஸ் மீட்டில் கலந்துகொடு பேசிய நாசர் ” நான் இப்ப சில இந்தி படத்துல நடிக்கிறேன். இந்தி ஃபீல்டுல இருக்குறவங்க சூர்யா உயரம் என்னனு கேட்டதுக்கு நான் சாதாரண உயரம் தான் இருப்பாருன்னு சொன்னத அவங்க நம்பல.

ஸ்கிரீன்ல பாக்க பிரம்மாண்டமா இருக்காரு. அவர் சாதாரண உயரம்னு சொன்னா எப்படி நம்ப முடியும்னு கேட்டாங்க. அது தான் சூர்யாவின் உயரம். உடலின் உயரம் ஒரு பிரச்சனையே இல்ல. அதையும் தாண்டி பெரிய நட்சத்திரமா உயர்ந்த இடத்துல இருக்காரு” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சிங்கம் 2 படத்தின் வில்லனான ரகுமான் “ சூர்யாவோட உயரம் அவரோட வளர்ச்சியை எந்த விதத்துலையும் பாதிக்காது. சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம். சிங்கம் சின்னதா இருந்தாலும் அது தான காட்டுக்கு ராஜா” என்று பேசினார்.


அதன்பிறகு பேசிய சூர்யா “ சிங்கம் 2 படத்தின் வெற்றி இயக்குனர் ஹரியையே போய்ச் சேரும். சிங்கம் 2 எடுத்து என்ன கழட்டப்போறாங்க? சிங்கம் ஹிட் ஆனதால, சிங்கம் 2 எடுத்து எப்படியாவது ஓட்டிடலாம்னு படம் எடுக்குறாங்க என பேசப்பட்டது.அப்படி இல்லாம புதுசா எதாவது படத்துல இருக்கனும், ரசிகர்களை ஏமாத்தக் கூடாது என எல்லாத்தையும் தான் தலைல தூக்கி வெச்சி மெனக்கட்டு வேலை செஞ்சிருக்காரு ஹரி.அவரோட நான் 4 படம் வேலை செஞ்சிருக்கேன். இப்ப அவர் என் குடும்பத்துல ஒருவராகிட்டார். அவரோட சேர்ந்து இன்னொரு படமும் பண்ணனும்னு ஆசை இருக்கு” என்று கூறினார்.


இயக்குனர் ஹரி பேசிய போது “ நானும் சூர்யாவும் 4 படத்துல ஒண்ணா வேலை செஞ்சிருக்கோம். எங்களுக்குள்ள இருந்த இயக்குனர், ஹீரோ உறவு மாறி சகோதரர்களா பழகிகிட்டு இருக்கோம். எதிர்காலத்துல நானும் சூர்யாவும் மறுபடியும் ஒரு படம் பண்ணுவோம்” என்று கூறினார். (சினிமா தளங்கள்)

3 comments:

  1. சிங்கம் 2 இன்னும் பார்க்கல பாஸ்... பார்க்கனும்...

    ReplyDelete
  2. sorry for minus vote-mistake,,,,,,,,,,,

    ReplyDelete
  3. சிங்கம் 2 இன்னும் பார்க்கல,பார்க்கனும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...