கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 July, 2013

இப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...!


அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr).  ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV  என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ்  நோய் ஏற்பட்டது.


ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.


அதற்கு ஆர்தர், “பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.


“வெற்றி பெறும்போது “ஏன் நான்?”  எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.


அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.

‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.

ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!

9 comments:

  1. ஆர்தர் ஆஷ் அவர்கள் = பாடம்...

    நன்றி...

    ReplyDelete
  2. .. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...! ..

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு! இந்த மாதிரி ஒரு மனிதரை காண்பது அரிதுதான்! நன்றி!

    ReplyDelete
  4. ‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும்
    ----
    உண்மைதான்... நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - இன்பம் துன்பம் அனைஅத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக் கொள்ள வேண்டும் - அப்பொழுது தான் வாழ்க்கை சம நிலையில் செல்லும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...