கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 July, 2013

விஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி டா..!


வேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது).

விஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


விஜய் - மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜில்லா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஜில்லா படத்தின் ஷூட்டிங் கூட முடிவடையாத நிலையில் 18 கோடிகள் கொடுத்து அதன் டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது சன் டிவி.

ஜில்லா படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது படத்தின் ஹைலைட்.

ஆல்ரெடி வசூல் மன்னனாக இருக்கிறார் விஜய். அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோர்க்கிறார். விஜய்யின் உயரம் வானம் போல விரிந்துகொண்டே போகிறது.

5 comments:

  1. அண்ணேன்....அப்படினா
    படம் எப்படியோ....?
    தலைவாவுக்கு
    நல்ல விளம்பரம் கேரண்டி....
    திருப்பதி ஒத்தண்டி மாதிரி

    ReplyDelete
  2. ஆடிக்காத்து பலம்மாத்தான் வீசுது...!

    ReplyDelete
  3. இவனுகளுக்கு இம்புட்டு பணம் எங்கே இருந்துய்யா வருது ? ச்சே நாமளும் மாடு மாதிரி உழைச்சுட்டுதான் இருக்கோம் பேங்க்ல வெறும் ஐநூறு ரூபாய் மட்டும்தான் இருக்கு...!

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - 15 / 18 கோடி - யம்மா - எங்கே போகுது மார்க்கெட் - ம்ம்ம்ம்ம் - தகவல் பகிர்வு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. விஜய்யின் உயரம் வானம்போல் விரிந்துகொண்டே போகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...