கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 July, 2013

இஸ்லாமியர் வேடம்...! மீண்டும் சர்ச்சைக்குள் விஜய்..!


விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த பரபரப்பு சமீபத்தில் தான் அடங்கியது. டிரெய்லர் வெளியீடு, பாடல் வெளியீடு என எல்லாம் முடிந்து ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தலைவா ரிலீஸ் ஆகிறது என ஐங்கரன் நிறுவனம் அறிவித்துவிட ‘தலைவா... தலைவா...’ என மகிழ்ச்சி ஆரவாரம் செய்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கும் ஜில்லா திரைப்படத்தின் ஒரு ஃபோட்டோ வெளியாகி தலைவா திரைப்படத்தின் பரபரப்பை அப்படியே தன் பக்கம் திருப்பிக்கொண்டது. அந்த ஃபோட்டோவில் விஜய் அடர்த்தியான தாடியுடன், இஸ்லாமியர் போல் உடையணிந்துள்ளார்.சமூக வளைதளங்களில் இந்த படம் வேகமாக பரவ, விஜய் ஜில்லா திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்களையும், திரையுலகத்தையும் பரபரப்பாக்கிவிட்டது.


சென்ற வருடம் துப்பாக்கி படம் ரிலீஸான போது ஏற்பட்ட பிரச்சனையில் சுமூக முடிவு கண்ட பின் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் இஸ்லாமியர்கள் சகோதரர்களாகவே நினைக்கிறார். இப்போது ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு பிராய்ச்சித்தமாக விஜய் ஒரு திரைப்படத்தில் இஸ்லாமியராகவே நடிப்பார்’ என்று கூறியிருந்தார்.

எனவே ஜில்லா திரைப்படத்தில் விஜய் இஸ்லாமியராக நடிக்கிறாரா? என விசாரித்தபோது “திரைப்படத்தின் ஒரு முக்கியமான காட்சியில் மட்டும் விஜய் இஸ்லாமியர் போன்ற தோற்றத்தில் நடிக்கிறார்” என்று கூறியிருக்கிறது ஜில்லா படக்குழு.

இப்படத்தில் அப்படி இஸ்லாமிய வேடத்திலோ அல்லது வசனங்களிலோ அல்லது காட்சிகளிலோ எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்தால் நல்லது...!

4 comments:

  1. ஜில்லா கல்லா கட்ட ஆரம்பம்...!?

    ReplyDelete
  2. இப்படியும் ஒரு விளம்பரமா?!

    ReplyDelete
  3. தமிழனை பாண்டி பாண்டி என்று கிண்டல் பண்ணும் மோகன்லால் மீண்டும் தமிழ் படத்திலா....!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...