கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 July, 2013

ஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..? சுயநல கலைஞர் என்ன செய்வார்...!


"ஸ்டாலின் தான் அடுத்த தலைவராகி, கட்சியை வழி நடத்த வேண்டும். அவருக்குத் தான் தகுதி உண்டு. கட்சியில், வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை' என, மதுரையில், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., நிர்வாகிகள் பேசியுள்ளனர். 

காலச்சக்கரம் சுழல்கிறது... இன்று, ரத்தக் கண்ணீர் விடுகிறார் கருணாநிதி. அன்று, 1972-ல், "எம்.ஜி.ஆர்., தான், எங்கள் தலைவராகி கட்சியை வழி நடத்த வேண்டும். அவருக்குத் தான் தகுதியுண்டு. கட்சியில் வேறு யாருக்கும், அந்த தகுதியில்லை' என்று, ஒட்டு மொத்த உடன்பிறப்புகளும் உரக்க உரைத்தனர். 

இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "என்னிடமே கணக்கு கேட்கிறார் எம்.ஜி.ஆர்.,' என்று சீறி, அவரை, தி.மு.க.,விலிருந்து விலக்கினார் கருணாநிதி. அதற்கு, கடுந்தண்டனையாக, 13 ஆண்டுகள், கருணாநிதி மூலையில் முடங்கி கிடந்ததை, மறப்பதற்கில்லை. 

அடுத்து, 1995-96ல், "வைகோ தான் எங்கள் தலைவர். அவர் தான் அடுத்த முதல்வர். இதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது' என்று, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கருணாநிதி கடு கடுக்கும்படி பேசினர். 

உடனே, விடுதலைப் புலிகளைத் தூண்டி விட்டு, "மனித வெடிகுண்டு மூலம், என்னை படு துண்டுகளாக, துடி துடிக்க, சாகடிக்கத் துடிக்கிறார் துரோகியான வை.கோபால் சாமி' என்று, கொலைப் பழி கூறி, வைகோவை தி.மு.க.,விலிருந்து விரட்டியடித்தார், 

கருணாநிதி. இன்று, "ஸ்டாலின் தான் எங்கள் தலைவர். அவர் தான், அடுத்த முதல்வர். கட்சியில் வேறு எவருக்கும், அந்தத் தகுதி இல்லை' என்று, பல கதைகளைக் கூறி, தி.மு.க., நிர்வாகிகள் பேசியதை அறிந்து, எம்.ஜி.ஆர்., - வைகோ இருவரையும் நீக்கியது போல், ஸ்டாலினை தி.மு.க.,விலிருந்து, "டிஸ்மிஸ்' செய்வாரா கருணாநிதி? 

இந்தக் கேள்வியை, முத்து, செல்வி, அழகிரி, தமிழரசு, ராசாத்தி, ராஜா, குஷ்பு ஆகியோர் படு ஆவேசமாகக் கேட்கின்றனர். என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? 

7 comments:

 1. காலச்சக்கரம் சூழலும்...!

  ReplyDelete
 2. இவங்க எல்லாம் விட்ட அறிக்கை எந்த பத்திர்கையில் சார் வந்திருக்கு?

  ReplyDelete
 3. இவளவு காலம் போராட்டமே இதற்கு மகனை அரியணையில் ஏற்ற தானே

  ReplyDelete
 4. அவங்க வேறு இவர் வேறு அல்லவா? நீக்க மாட்டார்! பதவியை நீட்டுவார்!

  ReplyDelete
 5. இது இவரின் வாழ்க்கைச் சக்கரம்...
  அன்பழகன்தான் அடுத்த தலைவர் என்று யாராவது கொளுத்திப் போட்டால் நடவடிக்கை எடுப்பார்...

  ReplyDelete
 6. குழம்பிப் போய் கிடக்கிற குடும்பத்தில இன்னும் குழப்பமா? நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...