கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 August, 2013

இப்படியும் படம்பார்த்தோம்...! தலைவா படம் பார்த்த என் அனுபவங்கள்


தலைவா படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தேன். அதற்கு காரணம் வெகுநாளாக கவிதைவீதியில் திரை விமர்சனம் எழுதாமல் இருந்தேன். ‌‌ கடந்த சில மாதங்களாக வெள்ளி சனி கி‌‌ழமைகளில் விடுமுறை இல்லை என்பதால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால் இந்த வாரம் ரம்ஸான் புண்ணியத்தில் வரிசையாக மூன்று நாட்கள் விடுறை என்பதால் கண்டிப்பாக தலைவா படம் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து டிக்கெட்கூட வாங்கியாகிவிட்டது.


திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இருதிரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்பதால் படமட் பார்ப்பதில் எந்தபிரச்சனையும் இருக்காது என நினைத்தேன்.


ஆனால் கதை திருட்டு, வெடிகுண்டு மிரட்டல், அரசு தரப்பில் ‌மௌனம் என தலைவாவுக்கு வந்த தொடர் தொந்தரவுகளால் கடைசியில் தமிழில் படம் இல்லை என்றாகிவிட்டது.


(திரையரங்கில் வேடந்தாங்கல் கரண்
 

படம் பார்க்க போகிறோம் என்ற ஆவலில் தலைவா திரை விமர்சனத்திற்கு முன்... முழு விவரம்...  என்ற பதிவிட்டேன் ஆனால் வெள்ளிக்கிழமை படம் இல்லை என்ற பிறகு... தலைவா திரைவிமர்சம் மற்றும் சில நகைச்சுவைகள் என்று என் தலைவா ஆசையை பூர்த்தியாக்கிகொன்டேன்.


வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர் சென்றேன். ஆனால் படம் எதுவும்போக மனமில்லை. மதிய உணவுக்கு ரம்ஸான் பிரியாணி வரும் என்ற ஆவலில் கொஞ்சம் இணையத்தில் உலவிக்ககொண்டிருந்தேன்.

1.00 மணிக்கு ‌திருவள்ளூர் ஆயிஷா டெக்ஸ்டைல்ஸ் ஓனர் இல்லத்தில் இருந்து இரண்டு பார்சல் பிரியாணி வந்தது. நண்பர் வேடந்தாங்கல் கருணை அழைத்து ஆளுக்கொரு பிரியாணி சாப்பிட்டோம். ஆந்திர மாநிலம் சத்திவேட்டில் தலைவா படம் வந்திருக்கிறது என்று தெரியவரை மொத்த பிளானும் மாறியது. அடுத்த 30 நிமிடங்களில் கரண் பைக்கில் இன்னோரு நண்பருடன் மூன்று பெரும் பயணமானோம்.(விஜய் போஸ்டருக்கு பீர் அபிஷேகம்... பால் அபிஷேகம்)


சரியாக 2.00 மணிக்கு ஊத்துக்கோட்டை அடைந்தோம். அங்கு வந்த சில விஜய் ரசிகர்களை (தலைவா டி-சர்ட் அணிந்திருந்தார்கள்) விசாரித்ததில் தலைவா படம் இரு தியாட்டர்களில் போட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழில் படம் வரவில்லை தெலுங்கில் தான் ஓடுகிறது என்று கூறிவிட்டார்கள். (அடபாவிகளே விஜய் படத்தை முதல் நாள் பார்க்கும்போது சத்தத்தில் தமிழில் பார்த்தாலே ஒன்றும் புரியாது அது தெலுங்கில் வேறையா...?)

சரி மொழியில் என்ன இருக்கிறது என்று முன்னேறி சரியாக 3.30 மணிக்கு சத்தியவேடு அடைந்தோம்.  சத்தியவேடு முருகன் திரையங்கில் தலைவா தெலுங்கு பதிப்பு படம் போடப்பட்டிருந்தது. சாமூண்டீஸ்வரியில் தமி‌‌ழ் ஆனால் படம் வெளியாகவில்லை. அங்கு நாங்கள் கண்டகாட்சி எங்களாலே நம்ப முடியவில்லை. ஆம்  அந்த திரையரங்கமே பார்க்கதிருக்காத வகையில் சென்னை கூட்டம் நிரம்பி வழிந்தது. வழியெங்கும் சென்னை பதிவு வண்டிகள் நூற்றுக்கணக்கில் நின்றுக்கொண்டிருந்தது. 

 கற்பூரம் காட்டும் விஜய் ரசிகர்கள்


அடுத்த காட்சி மாலை 6.00 மணிக்கு என்று சொல்லிவிட்டார்கள். டிக்கெட் அப்போ‌தே வாங்கியாகிவிட்டது. 2 மணிநேரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பொழுதை போக்கவேண்டியதாகிவி்ட்டது. ஆனால் இதுவரை டாஸ்மார்ககை பார்த்த கூட்டம் ஆந்திரா ஒயின்ஷாப்பை பார்த்தவுடன் அனைத்து கூட்டமும் அங்குதான் நிறைந்து வழிந்தது.


பிறகு 5.30 மணிக்கு காட்சிக்கு சென்றால் கூட்டம் கட்டகடாங்கமால் இருந்தது. விஜய் போஸ்டருக்கு பீர் அபிஷேகம் பால் அபிஷேகம் நடந்தது... (எப்படி டெவலப் ஆயிருக்காங்க பாருங்க) பிறகு அடிச்சி பிடிச்சி உள்ளே சென்றால் வெறும் 500 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் 1500 பேர் பாதிபேர் நின்றே பார்க்கவேண்டிய நிலை எங்களுக்கு பெஞ்சி ஒரு ஓரம் இடம் இடைத்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எந்தப்படத்தை பார்த்ததில்லை. கூட வந்த நண்பர் அவசர அழைப்பின் பேரில் படம் ஆரம்பித்த அரை மணிநேரத்தில் கிளம்பிவிட்டார் (பஸ் வழியாக).


நானும் கரணும் மட்டும் கடைசிவரை வேர்க்க விருவிருக்க பார்த்துவிட்டு இரவு 10.00 மணிக்கு கிளம்பினேன். வரும் வழிமுழுவதும் அடர்ந்த காட்டுப்பகுதி ‌என்பதால் பயந்துகொண்டே வந்தோம். இரவு 11.15 மணிக்கு வீட்டுக்குவந்தோம்.

எப்படியோ படம் பார்த்தாகிவிட்டது ஆனால் பார்த்தோம் என்றாகிவிட்டது. திரையரங்கில் கூட்டம் அதிகம் என்பதால் காற்றே இல்லை. படம் பார்த்த அனைவரும் வேர்த்துகொட்டித்தான் பார்த்தார்கள். படம் முழுக்க ஒரே சத்தம் ரசிகர்களின் ஆரவாரம் அடக்க முடியாமல் இருந்ததது.
 (சத்தியவேடு திரையரங்க வாசலில் அமர்களப்படுத்தும் சென்னை ரசிகர்கள்)

இவ்வளவு ரசிகர்களை விஜய் வைத்திருப்பது பெருமைக்குறிய விஷயம்தான் ஆனால் அத்தனை ரசிகர்களும் குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிடுவாதுதான் வேதனைக்கூறிய விஷயமாக இருக்கிறது.


தமிழகத்தில் இந்த படத்தை எதற்காக ‌வெளியிட தடைசெய்தார்கள் என்று புரியவில்லை ஒரு வேளை இந்த படத்தை பிரபலப்படுத்தும் முயற்சியா இது.
 
பார்ப்போம் படம் ஓடுகிறதா இல்லையா என்று...

9 comments:

 1. தேவையின்றி விஜயை பெரிய ஆள் ஆக்குகிறார்கள்! சினிமாவை பிரபலப்படுத்தவும் இப்படி நடந்திருக்கலாம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய சந்தேகமும் அதுதான் சுரேஷ்...

   தமிழகத்தில் தற்போது இதுஒருபேஷனாகா மாறி வருகிறது...

   Delete
 2. என் கதையை விட பெரிய கதையா இருக்கும் போல இருக்கே. அது சரி இவ்வளவு சிகப்பா நான் கருணை பார்த்ததே இல்லையே, எதாவது கிராபிக்ஸ் முயற்சியா செளந்தர்.

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர்... கரண் சிகப்புதாங்க... நீங்க சரியா பார்ககலன்னு அர்த்தம்...

   Delete
 3. பீர் அபிசேகம். தமிழ் நாட்டு ரசிகர்கள் முன்னேற்றப் பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னபண்றது தலைவரே... நாடும் ரசிகர்களும் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறார்கள்...

   படம் வெளியாகவில்லை என்று கோவையில் ஒருவர் தற்கொலையாம்....

   இன்னும் தெளிவு பிறக்க வேண்டும்

   Delete
 4. படத்தின் வெற்றிக்காக செய்யும் ஸ்டண்டாகவே இது தெரிகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் இது ஒரு மோசமான முன்னுதாரண்மாகிவிடும்... அதே சமயம் அரசியல் குறுக்கீடு என்றால் அரசுக்கு மக்களைப் பார்ப்பதைவிட இதில்தான் இப்போது கவனம் அதிகம் என்பது உண்மை.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய இரண்டு கருத்தும் உண்மையே...

   Delete
 5. பால்அபிஷேகம்போய் பீர் அபிசேகம் !! முன்னேறிவிட்டார்கள்.

  இருந்தாலும் இவ்வளவு கூட்டமா !!!!!!!!!!!!!!! இதற்குள் படம்பார்த்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...