கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 August, 2013

போலீஸிடம் மாட்டிய அஜீத்....! இப்படியும் சண்டை போட்டாரா..?

 
அஜீத் குமார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றபோது தமிழக-கர்நாடக எல்லையில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். 
 
அஜீத் குமார் தான் புதிதாக வாங்கிய பிஎம்டபுள்யூ பைக்கில் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். ரேஸ் சூட்டில் சென்னையில் இருந்து கிளம்பிய அவர் ரோட்டோரக் கடை ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட்டார். 
 
தமிழக-கர்நாடக எல்லையில் அஜீத்தை பரிசோதித்த டிராபிக் போலீஸ் ரோட்டோரக் கடையில் அஜீத்தை பார்த்துவிட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அதன் பிறகு அவர் பெங்களூர் சென்றார். 
 
தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அஜீத்தின் பைக்கை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டனர். 
 
ஹெல்மெட்டை கழற்றியதும் பைக்கில் இருந்தவர் அஜீத் என்பதை பார்த்து போலீசார் ஆச்சரியப்பட்டனர். பின்னர் அஜீத் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
 
***********************************

ஹாலிவுட்டில் அனைத்து சண்டைக் கலைஞர்களும் ஒருமித்த குரலில் பாராட்டுவது நடிகர் டாம் க்ரூஸை. சமீபத்தில் அவரது Oblivion வெளியான போது வளைத்து வளைத்து பாராட்டினார்கள்.

அனைத்துவிதமான சண்டைக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர் டாம் க்ரூஸ். அவருக்கு எப்படி பைட் பண்ணுவது என்பது தெரியும். முக்கியமாக சண்டைக் காட்சியின் போது எப்படி அடிபடாமல் தற்காத்துக் கொள்வது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அவரை வைத்து சண்டைக் காட்சி அமைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினர்.

 
டாம் க்ரூஸுடன் சண்டைக் காட்சியில் பணியாற்றியவராம் லீ விட்டேகர். இவர்தான் ஆரம்பம் படத்தின் சண்டைக் காட்சிகள் சிலவற்றை வடிவமைத்திருக்கிறார். 
 
அஜித்தின் சண்டையிடும் திறமையைப் பார்த்தவர், அஜித்தைப் பார்க்கும் போது டாம் க்ரூஸின் நினைவு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பார்க்கலாம், ஆரம்பத்தில் அஜித் எப்படி சண்டை போட்டிருக்கிறார் என்று.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...