கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 August, 2013

தலைவா செம காமெடிதான் போங்க...
"ஹலோ வசந்த் & கோ தானே..? எனக்கும் மனைவிக்கும்

பெரிய சண்டை.. உடனே வாங்க.."

"நாங்க எதுக்கு வரணும்.."?

"நீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம் வரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து தீர்த்து வைப்போம்ன்னு..!"

********************************************

"சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?"

"ஏன் சார்...இவ்வளவு அக்கறையா கேட்கறீங்க?"

"எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் டேபிளுக்கு வந்து சேருது"

********************************************"என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?"

"ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!"

********************************************

விருந்தாளி : நீங்க என்னை வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப‌ சந்தோஷமா இருக்குங்க..

வீட்டுக்காரர் : அதெல்லாம் ஒண்ணுமில்ல... நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும் நம்ப முடியலீங்க..!

********************************************


திருடன் : நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ சாவியக் கொடு..

டாக்டர் : நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா ஓடிப் போயிடு..!

********************************************


அவள்: டாக்டர்! என் கணவருக்கு வர வர ஞாபக மறதி கூடிக்கிட்டே போகுது?

டாக்டர்: ஏன் என்ன செய்யறார்?

அவள்: திடீர் திடீர்னு என்ன சமைக்கச் சொல்லி சாப்பாடும் போடச் சொல்றாரு.

********************************************


பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"

டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"

பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."

********************************************


 வெறும் நூறு ரூபாயில் ஸ்போக்கன் இங்கிலீஷ், மியூசிக், டான்ஸ், கராத்தே, குங்பூ Meditation, என அனைத்தும் சொல்லி தரும் ஒரே ஆசிரியர்....

குவார்ட்டர் பாட்டில் மட்டுமே ;-)

********************************************
நகைச்சுவைகள் முகநூலில் இருந்து தொகுக்கப்பட்டவை....

12 comments:

 1. படங்கள் அருமை

  ReplyDelete
 2. கடைசி வரிகளின் சொந்தக்காரனுக்கு பிளாட்டினம் ஆடை போத்தணும்! சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. "ஹலோ வசந்த் & கோ தானே..? எனக்கும் மனைவிக்கும்

  பெரிய சண்டை.. உடனே வாங்க.."

  "நாங்க எதுக்கு வரணும்.."?

  "நீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம் வரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து தீர்த்து வைப்போம்ன்னு..!"
  சும்மா....கலக்கிட்டிங்க...போங்க
  அண்ணேன்...
  நீங்க கவிதை வீதி அல்ல...
  செம காமெடி வாதி...சரியா ?

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா சூப்பர் சௌந்தர்

  ReplyDelete
 5. அய்யோ - தாங்க முடியல - சிரிச்சு சிரிச்சு ....... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. தலைவா அப்படின்னதும் நான் என்னமோ நெனச்சு வந்தேன்

  ReplyDelete
 7. படங்கள் அருமையோ அருமை

  ReplyDelete
 8. படத்துக்கும் ,ஜோக்குக்கும் செம போட்டி.ஒன்னை ஒன்னு அசரடிக்குதில?

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...