கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 October, 2013

நீங்களே பாருங்கள் இந்த காதல் எப்படியாகிவிட்டது என்று...!மூளை முதிராத 
என் இளமைக் காலங்களில்
உனக்கு கடிதம் எழுதினால்
என்ன புத்தகம் எழுகிறாயா
என்று கிண்டலடிப்பார்கள்....

 கிண்டல்களை குறைப்பதற்காக
குறைத்துக்கொண்டேன் பக்கங்களை..
அதை என்ன கட்டுரையா 

என்று கலாய்த்தார்கள்...

குறையாத காதலை வைத்துக்கொண்டு
குறைக்கவேண்டியதாயிற்று

உனக்கும் எனக்குமான காதலை
ஒரு இன்லேண்ட் கடிதத்திற்குள்...!


தற்போது அதற்கும் வழியில்லாமல்
அறைகுறை ஆங்கிலத்தில்

குறுஞ்செய்தியாக நம் காதலை
கைபேசியில் படிக்கவைத்துவிட்டது காலம்...

காதலுக்குள் நெருக்கம் நேர்கையில்
இருவருக்குள் பாறிமாறிக்கொள்ளும் 

காதல் வார்த்தைகளுக்கும் 
சுருக்கம் வந்துவிடும்போல...

என் அன்பே... 
வார்த்தைக் குறைப்பால் 
நம் காதல் குறைந்துவிட்டது 
என்று எண்ணிவிடாதே.....
 

கடுகு சிறுத்தாலும்
கொஞ்சமும் குறையாது காரம்...

சுண்ட காய்ச்சியப்பால் 
எப்போதும் சுகம்தானே...!
 
காதல் நீளும்... கவிதைகளில்.....

10 comments:

 1. அருமை... எவ்வளவு பெரிதாய் பேசுகிறோம் என்பதை விட எதை பேசுகிறோம் என்பது தானே முக்கியம்....

  ReplyDelete
 2. சுகமான வரிகள்.... பாராட்டுக்கள்....

  ReplyDelete
 3. கடுகு சிறுத்தாலும்
  கொஞ்சமும் குறையாது காரம்...
  சுண்ட காய்ச்சியப்பால்
  எப்போதும் சுகம்தானே...!//

  உண்மைதான்!

  ReplyDelete
 4. //குறையாத காதலை வைத்துக்கொண்டு//
  //சுண்ட காய்ச்சியப்பால்
  எப்போதும் சுகம்தானே...!// அருமை! அருமை! த.ம.4

  ReplyDelete
 5. பாசந்தியாய்த் தித்திக்குதே கவிதை .
  கூர்மையான அவதானிப்பு.

  ReplyDelete
 6. வணக்கம்
  கவிதையின் வரிகள் மிக மிக அர்தம்முள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. சுண்டக் காய்ச்சிய பாலின் சுவை அதிகம் தான்! அருமை! நன்றி!

  ReplyDelete
 8. அழகான கவிதை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. #காதலுக்குள் நெருக்கம் நேர்கையில்
  இருவருக்குள் பாறிமாறிக்கொள்ளும்
  காதல் வார்த்தைகளுக்கும்
  சுருக்கம் வந்துவிடும்போல...#
  சுண்டக் காச்சிய பால் .பால் கோவா ஆகும் ,பால் கோவா நாக்கில் இருந்து தொண்டைக்கு சென்று காணாமல் போய் விடுவதைப் போல் ...வார்த்தைகளும் காணாமல் போய்விடும் !
  த.ம 8

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...