கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 October, 2013

உலகை பயமுறுத்தும் ஒரே பறவை...!



சிறகு முளைத்ததும் 
தாய் பறவைக்குத் தெரியாமல்
கூண்டை விட்டு பறக்கும்
இளம்பறவைப்போல்...

எப்போது வேண்டுமானாலும் 
சிறகு முளைத்துவிடும்
நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும்
நம் உயிர் பறவைக்கு...

ஆதி எது அந்தம் எது அறியவில்லை
இந்த உலகில் பிறந்த யாரும்
வந்தது தெரியும் போவது எங்கே
புரியாத புதிர்தானே இதுவரையில்...

 மாற்றங்களே மாற்றிவிடுகிறது
மனிதர்களின் உருவங்களை
எப்போது மாறாமல் வாழ்கிறது
உடலில் ஒட்டியிருக்கும் ஜீவன்....

பயமும் பக்தியும் இருப்பதற்கு
காரணம் ஏன்னவென்றுத் தெரியுமா
அவைகள்தான் உள்ளிருக்கும் உயிரை
வதைக்காமல் காக்கும் கேடயங்கள்...!

உயிர் பறக்கும் என்ற பயத்தில் தான்
நிற்காமல் ஓடுகிறது இந்த உலகம்
உயிருக்கு பாதகம் இல்லை என்றால்
என்னவாகும் எண்ணிப்பாருங்கள்...

மணிக்கும் நெடிக்கும் பயந்து ஓடி
காலத்தை கடக்கையில்
நிறமாறிப்போகிறோம் நாம்
நீர்க்காமல் உயிர்வாழ்கிறது உயிர்...!

வாழ்க்கையை வாழாதவர்களுக்கு
மரணம் என்பது வேதனை....!
வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு
மரணம் என்பது விடுதலை...!



தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

18 comments:

  1. அனுபவம் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்தை தவிர்த்து இங்கு வாழ்க்கையில்லை...

      கருத்திற்கு நன்றி

      Delete

  2. ஒவ்வொரு மரணமும் அடுத்தவர்களுக்கு பாடமே!

    ReplyDelete
    Replies
    1. மரண பயம் மட்டும் இல்லையென்றால் இங்கு யாரும் மனிதராக இருக்கமாட்டார்கள்...

      மரணமே வாழ்க்கையை பயத்தோடும் பொருப்போடும் நகர்த்த வழி செய்கிறது

      Delete
  3. ஆழமான பொருளுடைய
    அற்புதமான கவிதைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்லது ஐயா... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      Delete
  4. சிறகிருந்தும் பறப்பதற்கு பயம் பலருக்கும் !
    த.ம 6

    ReplyDelete
  5. வாழ்க்கை தத்துவம் போதிக்கும் அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  6. கடைசி “கண்ணி“ நச்சென்று இருந்தது.
    வாழ்த்துக்கள் சௌந்தர்.

    ReplyDelete
  7. வணக்கம்
    வாழ்க்கையை வாழாதவர்களுக்கு
    மரணம் என்பது வேதனை....!
    வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு
    மரணம் என்பது விடுதலை...!

    கவிதைக்கு இதை விட வேறு என் வார்தைகள் தேவை....அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அற்புதமான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்க்கையை வாழாதவர்களுக்கு
    மரணம் என்பது வேதனை....!
    வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு
    மரணம் என்பது விடுதலை...!

    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சகோ .
    சிறந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. நிகழுக்கான நிர்பந்தத்தின்
    நிதர்சனத்திற்காக ஓடும் நாம்
    சில இடங்களில் சிந்தித்து
    செயல்கொளவதும் மரணம் எனும் பயத்தாலே
    என்று உணர்த்தும் அற்புதமான கவிதை நண்பரே...

    ReplyDelete
  11. ” உலகை பயமுறுத்தும் ஒரே பறவை...! ” – இந்த தலைப்பே சொல்லும் ஆயிரம் கவிதை. வள்ளுவரும்,

    குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே-
    உடம்பொடு உயிரிடை நட்பு

    என்று உயிரை ஒரு பறவையோடுதான் ஒப்பிடுகிறார். கவிதைக்கு நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...