கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 October, 2013

இவைகள் முட்டாள் தனமான செய்கைகளா....?


 
ங்க ஊர் பேருந்தில் ஏறினால்
நான் விரும்பி அமரும் இடம்
கடைசி சீட்டின் வலது ஜன்னலோரம்....!

துளசி திரையரங்கம் சென்றால்
எனக்கு பிடித்த இருக்கை வரிசை
எஸ் ஒன்பது முதல் பதினேழு வரை..!

வெளியில் நாத்திகம் பேசினாலும்
ஆலமரத்து விநாயகர் கோயில் வந்தவுடன்
பக்தியோடு தரிசித்துவிட்டு வருகிறேன்...!

மாம்பிஞ்சுகள் கூட பிடிக்காத எனக்கு
புளியம் பிஞ்சுகள் ரசித்து உண்வது
எதற்காக என்று புரியாது யாருக்கும்...!

பறக்கும் பட்டாம்பூச்சிகளை பிடித்து
அதன் சிறகுகளை வருடியெடுத்து
விரலில் ஒட்டிய வண்ணங்களால் திலகமிடுகிறேன்...!

கடைவீதிக்கு எப்போது சென்றாலும்
மறக்காமல்  நினைவுக்கு வந்துவிடுகிறது
பளிச்சென்றிருக்கும் பஞ்சுமிட்டாய்...!


இன்னும் எத்தனையெத்தனையோ
இதுபோன்ற ஆசைகள் எனக்கு தெரியாமலே
எனக்குள்ளே புகுந்துக்கொண்டுவிட்டது...!


மற்றவர்களுக்கு தெரியாது....
இவைகளெல்லாம் நான் சேர்த்துவைத்துள்ள
அ‌வளை நினைவுபடுத்தும் ஞாபகங்களென்று...! 

ரசித்தமைக்கு நன்றி!

12 comments:

 1. அடேங்கப்பா... அ‌வளை நினைவுபடுத்தும் ஞாபகங்களென்று...!

  ரசித்தேன்...

  ReplyDelete
 2. அதெப்படிப்பா! லவ் வந்தாலே வண்ணத்துப்பூச்சி, மாம்பிஞ்சு, பஞ்சுமிட்டாய்ன்னு செலவு குறைச்சலான பொருளுக்கே ஆசைப்ப்டுறீங்க!?

  ReplyDelete
  Replies
  1. ஏதோ நம்மலால முடிஞ்சது...

   அப்படி இல்லன்னா அதிக செலவு வச்சிடுவாங்க..

   Delete
 3. //இவைகளெல்லாம் நான் சேர்த்துவைத்துள்ள
  அ‌வளை நினைவுபடுத்தும் ஞாபகங்களென்று...!//காதலில் எல்லாம் நினைவில் சேர்த்து வையுங்கள்...கல்யாணம் ஆனால் எல்லாம் மறந்து விடுங்கள்!! :)

  ReplyDelete
  Replies
  1. மறககாமல் இருந்தால் அது உண்மையான காதல்...

   Delete
  2. உண்மைதான்.. விளையாட்டாய் எழுதிய கருத்து தான்..தவறாக என்ன வேண்டாம் :)

   Delete
 4. அடடா!!! ....... எத்தனை எல்லாம் சேர்க்கிறார்கள் . அவளை நினைத்தாலே உருகிவிடுகிறதே.
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 5. ஞாபகம் ஊட்டும் பொருட்களை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. அன்பின் சௌந்தர் - நிச்சயமாக முட்டாள் தனமான செயல்கள் இல்லை.

  //இவைகளெல்லாம் நான் சேர்த்துவைத்துள்ள
  அ‌வளை நினைவுபடுத்தும் ஞாபகங்களென்று...! // நன்று நன்று - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. ஓ.... உங்கள் வாழ்வில் இவ்வளவு நடந்திருக்கிறதா...?

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...