கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 November, 2013

மழையில் கூடவா காதல் இப்படி செய்யும்...!





விலகி நடந்த உன்னை
நெருங்க வைத்தது...

சிலையாய் நடந்த உன்னை
சிலிர்க்க வைத்தது....

வேகமாய் நடந்த உன்னை
நளினப்பட வைத்தது....

ரம்மியமாய் நடந்த உன்னை
ரசிக்க வைத்தது...

 ஆகையால் மழை நல்லது...!


நீ நட்டு வைத்த பூச்செடி
என்னை சபித்துக்கொண்டிருக்கிறது...

மழையில் நனைகிறதே என்று
குடைபிடித்ததற்கு....!

ஒருவேளை
உன்னை எனக்கு பிடித்தது போல்
செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?

அழிக்கவும் அழகாக்கவும்
செய்கிறது மழை...!

நீ போட்ட கோலத்தை
அழித்துவிடுகிறது...

நனையும் உன் கோலத்தை
அழகாக்குகிறது...

எதை அழிக்க வேண்டும்
எதை அழகாக்க வேண்டும்
என்று தெரிந்த மழையை...

ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னோடு சேர்ந்து..!

 
#மழைக்_கால_கவிதைகள்

10 comments:

  1. வணக்கம்
    மழைக்கால கவிதையின் வரிகள் அருமையக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அனைத்துக் கவிதைகளும் அருமை!. மிக ரசித்தேன்.

    செடிக்கு குடைப் பிடித்தீர்களா? ..கலக்கிவிட்டீர்கள் .. :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோ சிறப்பான வரிகள் இவை மேலும் தொடரட்டும் மழைபோல் மக்களின் மனதையும் கவரும் வண்ணம் .

    ReplyDelete
  4. தண்ணீரில் மிதக்கும் கோலமாய் தெரியும் அவளை நானும் ரசிக்கிறேன் !
    த ம 6

    ReplyDelete
  5. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //நீ நட்டு வைத்த பூச்செடி
    என்னை சபித்துக்கொண்டிருக்கிறது...

    மழையில் நனைகிறதே என்று
    குடைபிடித்ததற்கு....!

    ஒருவேளை
    உன்னை எனக்கு பிடித்தது போல்
    செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?/// அருமை அருமை...

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - கவிதைகள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. ஆகையால் மழை நல்லது...!

    அதனால் வந்த கவிதையும் நல்லது!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...