கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 November, 2013

இரண்டாம் உலகம் சினிமா விமர்சனம் / irandam ulagam movie review



முதலாம் உலகம் (நம் உலகம்)


அனுஷ்கா ஒரு மருத்துவர்... அவர் பணியாற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ஒரு நல்ல உள்ளம் படைத்தவராக ஆர்யா...

ஆர்யாவின் குணம் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். காதல், திருமணம், போன்றவற்றில் ஆர்வமில்லாத ஆர்யா... அனுஷ்காவின் காதலை நிராகரிக்கிறார்... மேலும்... உடல்நலம் சரியில்லாத தனது தந்தைக்காக திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில் அனுஷ்காவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து விடுகிறது. 

இதற்கிடையில் அனுஷ்காவை பார்க்க பார்க்க ஆர்யாவுக்கு காதல் மலர்கிறது. தன்னுடைய திருமண விருப்பத்தை ஆர்யா சொல்ல இப்போது அவர் மறுத்து விடுகிறார்..... ஒரு மருத்துவ கேம்புக்காக கோவா செல்லும் அனுஷ்காவை தொடர்ந்து செல்லும் ஆர்யா எப்படியோ முயன்று அனுஷ்காவை காதலிக்க வைக்கிறார்.


ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்க தொடங்கும்போது ஒரு இரவு தனியாக வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்... அங்கு மகிழ்ச்சியாக இருக்கும் இருவரும்... நான் கிளம்புகிறேன் என்று கிளம்பும் அனுஷ்காவை விரட்ட... ஓடிக்கொண்டிருந்த அனுஷ்கா கால் இடறி கீழே விழந்து எதிர்பாராத விதமாய் தலையில் அடிப்பட்டு இறந்துவிடுகிறார்... அப்போது இடைவேளை..!



உலகம் 2 (கற்பனை உலகம் அல்ல... இன்னொரு உலகம்)

அங்கு வீரம் நிறைந்த அனுஷ்கா... (வெறிபிடித்த ஒரு ஓநாயைக்கூட அசால்டாக தூக்கி வீசுகிறார் என்றால் பாருங்களேன்...) பார்ப்பதற்கு அவதார் மாதிரி ஒரு வித்தியாசமான உலகம் ஆனால் உண்மையில் பழைய ஹாலிவுட் படங்கள் போல் இருக்கிறது...

அங்கு ‌இருக்கும் ஆர்யா அனுஷ்காவை ஒருதலையாக காதலிக்கிறார். பலமுறை தன்னுடைய காதலை சொல்லி அனுஷ்காவிடம் நல்ல அடிவாங்குகிறார். இதற்கிடையில் அந்தப்பகுதி ராஜா அனுஷ்காவை தன்னுடைய அரண்மனைக்கு தூக்கிச்செல்கிறார்.. கோவம்கொண்ட ஆர்யா அனுஷ்காவை தன்னுடன் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.

அதற்கு தனக்கு ஒரு சிங்கத்தில் தோல் வேண்டும் என்றும்.... ஒரு சிங்கத்தை கொன்று அதன்தோலுடன் வந்தால் இவளை நான் ஒப்படைக்கிறேன் என்று சொல்ல உடனே காட்டுக்கு புறப்படுகிறார்.. ஆர்யா...

வெறிகொண்ட ஒரு கிராப்பிக்ஸ் சிங்கத்தை சண்டையிட்டு அதனுடைய தோலை ராஜாவுக்கு அளிக்கிறார்... தன்னுடன் அனுப்பும் அனுஷ்காவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் தயாராகிறது... காதல் என்னவென்று அறியாத அந்த உலகத்தில் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று ராஜாவை கொல்ல துணியும் அனுஷ்கா... ஆர்யாவை வெறுத்து தன்னையே மாய்த்துக்கொள்கிறார்...


திருமணம் நடக்க வேண்டிய இடத்தில் அனுஷ்கா இறந்து போகிறார்... அப்போது இடைவேளை...

இடைவேளை வரை இந்த இருகதைகளும் மாறிமாறி வருகிறது..

இப்படி இரண்டு உலகத்திலும் தன்னுடைய காதலியான அனுஷ்கா இறந்துபோக என்னசெய்வதென்று தெரியாமல் பித்துப்பிடித்தவராகிறார் ஆர்யா..

அதன்பிறகுதான் செல்வராகவனின் கொலைவெறி ஆரம்பிக்கிறது...

என்ன செய்வதென்று தெரியாமல்... இரண்டு உலகத்திலும் தனித்தனியே பைத்தியமாக சுற்றுகிறார் ஆர்யா....  இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா ஒரு சவால் விட்டு... அங்குள்ள ஒரு சாமி மலையில் ஏறுகிறார்...


அதே நேரத்தில் நம்முடைய உலகத்தில் இருக்கும் ஆர்யா என்ன செய்வதென்று புரியாது... தன்னை அழைப்பது போன்ற ஒரு காரில்ஏறி மலைமேல் போகிறார்... கடைசியில் இரண்டு ஆர்யாக்களும் ஏறுவது ஒரே மலைதான் என்று தெரிய வருகிறது...

மலைமேல் ஏறிய காரில் இருந்து கீழே விழ நினைக்கும் ஆர்யாவை இரண்டாம் உலக ஆர்யா காப்பாற்றி அந்த உலகத்திற்கு கொண்டு செல்கிறார்... (இரண்டாம் உலக ஆர்யாவின் அம்மாதான் இந்த இருவருரை தன்னுடைய தெய்வசக்தியால் சந்திக்க வைக்கிறார் என்று பின்னர் புரிய வைக்கிறார் இயக்குனர்)

அடப்பாவிகளா....

இதுவரை பொறுமையா படத்தை பார்த்தது பத்தாதுன்னு..  படம் தொடர்ந்தது... இரண்டாம் உலக ஆர்யா-அனுஷ்கா ஜோ்டியை காதல் வயப்படுத்தவே இந்த உலக ஆர்யாவை பயன்படுத்திக்கொள்கிறார் என்று புரியவருகிறது..


நம் ஆர்யா எப்படி அந்த ஜோடி சேர காரணமாகிறார்... என்று மீதிக்கதையை அப்படி இப்படி இழுத்து என முடித்திருக்கிறார்... மாபெரும் இயக்குனர் செல்வராகவன்...

படம்பார்த்த நான் விமர்சனம் எழுதலாமா இல்லை வேணாமா என்று பல்வேறு யோசனைகளுக்கிடையே சரி கொஞ்சம்பேரை காப்பாற்றிய பெருமையாவது நமக்கு இருக்கட்டும் என்று முடிவெடுத்து இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்...

இடைவேளை வரை வரும் கதையை முழுதாக நீட்டித்து முடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் பிக்கப் ஆயிருக்கும்.. ஆனால் தேவையில்லால் இரண்டு கதையும் ஒன்றாக்கி குழப்பியிருக்கிறார்..

வித்தியாசமான இரண்டாம் உலகத்தை காட்டப்போகிறேன் என்று சொன்னதால் நான் உள்பட அனைவரும் ஆர்வமாக இருந்தோம் ஆனால் அந்த உலகம் சாதாரண லைட்டிங் எப்பைக்ட் மற்றும் கொஞ்சம் சுமாரான கிராப்பிக்ஸ் கொண்டு செய்யப்பட்டுள்ளது என்று பார்க்கும் அனைவருக்கும் தெரிந்துப்போகிறது.


ஆர்யாவின் நடிப்பு அப்படியொன்றும் பிரமாதமாய் இல்லை.. கொஞ்சம் எதார்த்தம் தெரிகிறது... அதை கடைசி வரை தக்கவைத்துக்கொள்ள தவறியிருக்கிறார்.. இரண்டாம் உலக ஆர்யா பரவாயில்லை கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கிறார்...

அனுஷ்கா டாக்டர் கதாபாத்திரத்தில் எதார்த்தமாய் வந்திருக்கிறார்... இரண்டாம் உலக அனுஷ்கா கலக்கியிருக்கிறார்.. வீரமான பெண்ணாக தைரியமாக சண்டைக்காட்சிகள்... என அசத்தியிருக்கிறார்...

நகைச்சுவைக்கு என்று யாரும் இல்லை படத்தில் நகைச்சுவையும் இல்லை...

நம் காதலி இறந்துவிட்டால் என்பதற்காக கவலை அடைய வேண்டாம் நம் மனதுக்குள் உண்மையான காதல் இருந்தால் நம் காதலியை எந்த உலகத்திலாவது காண்டறிந்துவிடலாம் என்று கதையில் சாரம் சொ்லலியிருக்கிறது.

ஆனால் எந்த ஒரு வித்தியாசமான கதைகளமோ.. காட்சி அமைப்போ புதுமைகளை படத்தில் என் கண்ணுக்கு புலப்படவில்லை...

படம் பார்த்துவிட்டு கிளம்பும் அனைவரும் அப்பா முடிஞ்சதா என்ற மனநிலையோடு கிளம்புகிறார்கள்..

இந்த படத்தை எதற்கு இரண்டு வருடங்கள் எடுத்தார்கள் என்று புரியவில்லை...


ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார்... பாடல்கள் சுமார் ரகம்தான்... பின்னணி இசை அனிருத் இதுவும் பரவாயில்லை... சுமார் ரகம்தான்...

இந்த இரண்டாம் உலகம் படத்தை கண்டிப்பாக திரையில் பாருங்கள்... (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)... (சாவுங்கடா...)

19 comments:

  1. ஒருமுறை பார்க்கலாம்.ஒளிப்பதிவு, எபக்ட் எல்லாம் கலக்கல்..... ஆனால் திரைக்கதை?

    ReplyDelete
    Replies
    1. படத்தில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை...
      புதுமைகள் இருந்தால் இன்று ஜெயிக்க முடியும்..

      அதே சமயம் புதுமைகள் பார்வையாளர்களை சோதிப்பதுபோல் இருக்க கூடாது...

      Delete
    2. நீங்கள் முதலில் தமிழை பிழையில்லாமல் எழுதப்பழகுங்கள்!!!!!

      Delete
    3. தேடி பிடித்தேன் ஒன்றிரண்டு இருந்தது சரிபண்ணிட்டேன்...

      இன்னும் இருக்கான்னு கண்டுபிடிக்க முடியல...

      Delete
  2. இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
    இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

    உங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... டிடி...


      அழகா... நாலு லைன்ல முடிச்சிட்டாரு...

      Delete
    2. இதே கதையை இராமநாராயணன் சார்கிட்ட கொடுத்திருந்தா ஒரு 50 லட்சத்தில முடிச்சிட்டுருப்பாரு...

      Delete
  3. வணக்கம்
    பட விமர்சனம் அருமையாக எழுதியுள்ளிர்கள் படம் பார்த்தது போல உள்ளது.. வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எதிர் மறையா விமர்சனம் எழுத கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது...

      என்ன செய்ய படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து...

      Delete
  4. //இந்த இரண்டாம் உலகம் படத்தை கண்டிப்பாக திரையில் பாருங்கள்... (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)... (சாவுங்கடா...)//

    நீங்க ரொம்ப நல்லவரு!

    ReplyDelete
    Replies
    1. ஒரு விமர்சகரா படம் பார்க்க போகலாம்...
      ஒரு ரசிகரா போனா அவ்வளவுதான்...

      இது ஒரு பொழுதுபோக்கு படம் அல்ல...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. // இப்படி இரண்டு உலகத்திலும் தன்னுடைய காதலியான அனுஷ்கா இறந்துபோக என்னசெய்வதென்று தெரியாமல் பித்துப்பிடித்தவராகிறார் ஆர்யா..

    // அதே நேரத்தில் நம்முடைய உலகத்தில் இருக்கும் ஆர்யா என்ன செய்வதென்று புரியாது... தன்னை அழைப்பது போன்ற ஒரு காரில்ஏறி மலைமேல் போகிறார்... கடைசியில் இரண்டு ஆர்யாக்களும் ஏறுவது ஒரே மலைதான் என்று தெரிய வருகிறது...

    மலைமேல் ஏறிய காரில் இருந்து கீழே விழ நினைக்கும் ஆர்யாவை இரண்டாம் உலக ஆர்யா காப்பாற்றி அந்த உலகத்திற்கு கொண்டு செல்கிறார்... (இரண்டாம் உலக ஆர்யாவின் அம்மாதான் இந்த இருவருரை தன்னுடைய தெய்வசக்தியால் சந்திக்க வைக்கிறார் என்று பின்னர் புரிய வைக்கிறார் இயக்குனர்)

    அடப்பாவிகளா....

    இதுவரை பொறுமையா படத்தை பார்த்தது பத்தாதுன்னு.. படம் தொடர்ந்தது... இரண்டாம் உலக ஆர்யா-அனுஷ்கா ஜோ்டியை காதல் வயப்படுத்தவே இந்த உலக ஆர்யாவை பயன்படுத்திக்கொள்கிறார் என்று புரியவருகிறது..

    இரு உலகிலும் அனுஷ்கா சாகிறார் என்றீர்களே பிறகு எப்படி நமது உலக ஆர்யா அவர்கள் சேர உதவி செய்தார்?
    உலகம் 2 அனுஷ்கா தான் ஏற்கனவே செத்துட்டாங்களே...
    அதுக்கப்புறம் தானே 2ஆர்யாவும் சந்திச்சாங்க

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கேள்விதான்...
      மொத்தத்தையும் விமர்சனத்தில் சொல்லிவிட்டால் நன்றாக இருக்காது என்று சொல்லவில்லை...

      இரண்டாம் உலக அனுஷ்கா அந்த ஊரின் கன்னித்தாயாய் காப்பாற்றப்பட்டு... அந்த பகுதி ராஜாவை தாக்க முற்பட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கு காட்டில் வாழ்வதாக காட்டுகிறார்...பின்னர் அடிக்கடி ஊருக்கு வந்துபோகிறார்...

      இப்படியே போகிறது

      Delete
    2. நன்றி

      Delete
  7. அடப்பாவிகளா... சிங்கம் செத்துப்போச்சா...

    ReplyDelete

  8. இரண்டாம் உலகம் போன்ற படங்கள் இனி வராது தமிழ் சினிமா மிண்டும் பஞ்ச் டையலாக் உடன காலம் தள்ளும் புதுசா முயற்சி செய்தா விமர்சனம் எழுதி அதை தடுத்து விடுவம் இல்ல
    அப்ப பாருங்களன் விமர்சனம் எழுதின எல்லாம் படம் எடுத்தா அருமையான படம் கிடைக்கும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...