கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 December, 2013

உலகைவிட்டு மறைந்த கருப்பு வைரம்.... மேலும் சில தகவல்கள்..

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும், கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.

பிறப்பும் இளமையும்:

தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த நெல்சன் மண்டேலா சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார். இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட கல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.


அரசியல் போராட்டம்:

தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்த வந்த போதிலும், சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர். இதனை கண்ட மண்டேலா 1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார். போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல் அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில் போரட்டத்தை துவக்கினார். இதன் காரணமாக 1964 ஜூன் 12-ல் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது.
 
தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 
பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 99-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இவரின் போராட்ட முறையை கண்ட அமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.

மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

++++++++++++++++++++++++

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன. 
மார்ச் 3: தமிழ் முதல்தாள்;

மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;

மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்;

மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;

மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,

மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்;

மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்:

மார்ச் 17: வேதியியல், கணக்குபதிவியல்:

மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;

மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்,

மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.


பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரை நடக்கின்றன. 
மார்ச் 26: தமிழ் முதல்தாள்;

மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்;

ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள்;

ஏப்.2: ஆங்கிலம் 2ம் தாள்;

ஏப்.4: கணிதம்;

ஏப்.7: அறிவியல்;

ஏப்.9: சமூக அறிவியல்.
+++++++++++++++++++++++++
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம்

9 comments:

 1. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

  ReplyDelete
 2. நிமிர்ந்த நடையும் ,நேர்கொண்ட பார்வையும் ,எதற்கும் அஞ்சாத மனமும் எப்போதும் இளமையான தோற்றத்தோடும் காட்சி தரும் ஒரு சிறந்த மனிதர் என்று சொல்வதற்கு பொருத்தப்பாடானவர் நெல்சன் மண்டேலோ அவர்கள்
  தான் .தென் ஆபிரிக்காவில் பிறந்தாலும் சந்திரனைப் போல சூரியனைப் போலசட்டென்று நினைவிற்கு வரும் ஒரு சிறந்த கறுப்பு வைரம் நெல்சன் மண்டேலோ அவர்கள் .அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம் .மிக்க நன்றி சகோதரா பகிர்விற்கு .

  ReplyDelete
 3. ஆழ்ந்த இரங்கல்கள்...

  ReplyDelete
 4. வணக்கம்
  ஆழ்ந்த அனுதாபம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. இவரின் போராட்ட முறையை கண்ட அமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.\\ America crooked country this is the proof.

  ReplyDelete
 6. ஆழ்ந்த இரங்கல்கள்...
  +1

  ReplyDelete
 7. இருந்த இன்னொரு காந்தியும் மறைந்துவிட்டார்.
  அஞ்சலி செலுத்துவோம்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...