கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 February, 2014

மிரட்டும் போஸ்டர்கள்..!தமிழகத்தில் சமீப காலமாய் எழுதப்படாத ஒரு வராலாறு எழுச்சிப்பெற்று வருகிறது. அது எந்த நிகழ்வானாலும் உடனடியாக சுவரொட்டி தயாரித்து ஊர் முழுக்க ஒட்டிவிடவேண்டும் என்பதுதான். (முதலில் ஒரேகலரில்தான் அச்சடித்தார்கள் இப்போது வண்ண போஸ்டர்கள்தான்) அப்படியில்லையென்றால் பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துவிடவேண்டும் என்ற பழக்கம்தான் அது.

ஒருகாலத்தில் சினிமாத்துறையை மட்டுமே ஆக்கிரமித்திருந்த இந்த சுவரொட்டிகள் ஒட்டும் பழக்கம்... பின்பு அரசியலை ஆக்கிரமித்து இன்று சாமானியன் வீட்டு விஷேசம் வரை பரவிக்கிடக்கிறது...

பிறந்தநாள், திருமணம், காதுகுத்தல், தொடங்கி இரங்கல் செய்திவரையும்... அரசியல் தலைவர்களின் அசைவுகளில் தொடங்கி, அரசியலில் பதவி வழங்கியற்கு நன்றி.. தலைவர் பிறந்தநாள்.. தலைவர் வருகை, மற்றும் கட்சி புகழ்... என தினம் தினம் புதுசுபுதுசாக கண்டிப்பாக போஸ்டர் அடித்து ஒட்டியாக வேண்டும் என்ற பழக்கம் அனைத்து மக்களையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஒரு போஸ்டர் ஒட்டினால் கூடபோதும் ஆனால் ஒரு சுவர் இருந்தால் அந்த சுவர்முழுக்க ‌எரே போஸ்டரை ஒட்டி திகைக்க வைக்கிறார்கள்... அடுத்த நாள் அதை கிழித்து எறிந்துவிட்டு அடுத்தவர் ஒட்டுகிறார்.. சில இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்க்கு முன்பதிவும்கூட செய்துவிட்டுபோகிறார்கள்.. சிலசமயம் இது கைகலப்பாக மாறி வெட்டுக்குத்துவரை சென்றிருக்கிறது.
இதுபோதாதென்று சில ரியல் எஸ்டேட் விளம்ரங்கள், ஆண்களுக்கு பிரச்சனையா என்ற போஸ்டர்கள், கல்வி நிறுவன மற்றும் கணினி நிறுவன போஸ்டர்கள், கவர்ச்சி சினிமா போஸ்டர்கள் என ஒரு சில போஸ்டர்கள் பார்ப்பவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதை சாப்பிடுவதற்கு என்றே ஆடு மாடுகள் ரோட்டில் அலைகிறது இதனால் பல விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுபோதென்று டிஜிட்டல் பேனர்கள் பழக்கத்துக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிருக்கிறது... ஒருவர் இறந்துவிட்டால் அதை உடனடியாக 20க்கு 20 பிளக்ஸ் தயார்செய்து இறந்த அடுத்த 2 மணிநேரத்தில் வைத்துவிடுகிறார்கள்... இதுவே ஒரு அரசியல் மாநாடு.. அரசியல் கட்சி தலைவர்கள், பிறந்தநாள், வருகை, அறிவிப்பு, பிறவிழா இப்படி எதாவது ஒன்று இருந்தால் பேனர்களின் எண்ணிக்கை வழக்ககத்தைவிட எல்லை மீறி சென்று கொண்ருவிடுகிறது. இவைகள் சலைகளை மறைத்து இடத்தையும் ஊரையே குப்பை காடாக மாற்றி கொண்டிருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வைக்கப்படும் பெரியபெரிய விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் சாலையில் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை. பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையும், அரசியல் போஸ்டர்களையும் பார்த்து கொண்டே முன்னே செல்லும் வாகனங்களில் இடித்து விபத்துக்குள்ளாகிறார்கள். இவைகளை கண்டிக்க வேண்டியது யார்...? இதை கட்டுபடுத்தும் அதிகாரம் யார்கையில் உள்ளது...? எதுவும் தெரியவில்லை. 

இதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உண்டா...? சில வருடங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷன் விளம்பர பலகைகளை வைப்பதற்கு தடை விதித்தார்கள்... டிஜிட்டல் பேனர் ஒரு மக்காபொருள் அதற்கு தடை என்று சுற்றுச்சூழல் துறையும் தடையை அறிவித்தது.. ஆனால் அதையும் மீறி விளம்பர பலகைகள் வைப்பது நிற்கவில்லை.. அது ஏற்படுத்து இடைஞ்சல்களுக்கு சிறிதும் குறைவில்லாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

20x20 என்ற அளவில் ஒரு டிஜிட்டல் பேனர்அச்சடித்து ‌வைக்க... பிரிண்டிங் 8000 முதல் 10000 வரை செலவாகும்... சில பேனர்கள் 1 லட்சம் 2 லட்சம் வரைகூட செல்கிறது.. இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டுப்பார்த்தால் தலையோ சுற்றுகிறது.. அரசியல் வாதிகள் இப்படி செலவிடும் பணம் கண்டிப்பாக நேர்மையாக சம்மாதித்ததுதானா என்ற சந்தேகம் வரத்தானே செய்கிறது...?

ஆட்சியில் இருப்பவர்களே இந்த போஸ்டர் வழக்கத்தை கடுமையாக பின்பற்றி ஊரையே அசிங்கபடுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக அடுத்த கட்சிகளும் களம் இறங்கிக்கொள்கிறார்கள்... நாம் ஆளும் மாநிலம் அழகாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆள்பவர்களுக்கும்.. அதைச்சார்ந்த நகர, மாநகராட்சிக்கும் இருக்க வேண்டும். ஆனால் அவர்களே இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களும் போஸ்டர் ஒட்டி கொண்டு விளம்பரம் தேடி கொண்டிருந்தால் யார் தான் இதை கட்டுபடுத்துவது?


போருந்துகளில், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால், சில தனியார் சுவர்களில் அனுமதியின்றி விளம்பரப்படுத்தினால் தண்டனை என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எத்தனைபேர்மேல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை... இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்களா என்றும் தெரியவில்லை.
நாம் இருக்கும் பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு... சாலைகளில் உள்ள தடுப்புகளில் செடிகள் நடப்பட்டு பேணப்பட்டு... அழகாக வளர்ந்து நல்ல சுற்று சுழல் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதுபோன்று போஸ்டர் பேனர் வைக்கும் செலவுக்கு தானதர்மங்கள் செய்யலாம்... இயலாதவர்களுக்கு உதவலாம் ஆனால் அந்த எண்ணம் யார்மனதிலும் வருவதில்லை

சமீபத்தில் நகரின் ஒரு பிரபலத்தை சந்தித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை 7.00 மணிவரை வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த  மாணவர்களுக்கு ஏதாவது மாலை டி பிஸ்கெட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று உதவிகோரியதில் சொற்ப்ப உதவியே செய்தார். ஆனால் அதே வாரத்தில் கட்சி தலைவரின் சாதனைகள் நகர்முழுக்க பெரிய டிஜிட்டல்பேனர்கள் வைத்து அசத்தல் போஸ் கொடுக்கிறார்... எதை என்னவென்று சொல்வது... வீணான விளம்பர பணத்தை உதவிகள் செய்ய வேண்டும் எண்ணம் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

மேம்பாலங்கள், அவற்றின் தூண்கள், பேருந்து நிலையங்கள்.. பள்ளி, கல்லூரி, அரசுஅலுவலக சுற்றுச்சுவர்கள், இன்னும் பிற இடங்களில் அழகான ஓவியங்களோ அல்லது அங்கும் செடிகளோ வைக்கப்பட்டு ஊரை பார்பதற்கு குளிர்ச்சியாக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் அப்படியொரு சூழலில் வாழவே முடியாதா...?

10 comments:

 1. நாடோடிகள் படம் தான் ஞாபகம் வருகிறது...! பேனர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது... இதனால் எத்தனை விபத்துகள் ஏற்படுகிறது... விளம்பர உலகம் தான்... ஆனால் இது கொடுமை...

  ReplyDelete
 2. மற்ற போஸ்டர்கள் எல்லாம் சீக்கிரம் கிழிக்கப்பட்டுவிடும், அல்லது அதன் மேல் வேறு ஒரு போஸ்டர் ஒட்டப்படும் அதிலிருந்து கில்மா போஸ்டர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

  ReplyDelete
 3. ப்ளெக்ஸ் பேனர் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ,சுயநலக் காரர்களின் காதில் உங்களின் சங்கு சத்தம் ஏறுமா ?
  த ம 3

  ReplyDelete
 4. //இதுபோன்று போஸ்டர் பேனர் வைக்கும் செலவுக்கு தானதர்மங்கள் செய்யலாம்... இயலாதவர்களுக்கு உதவலாம்// இதேதான் நான் நினைத்தேன் சகோ...
  //ஓவியங்களோ அல்லது அங்கும் செடிகளோ வைக்கப்பட்டு ஊரை பார்பதற்கு குளிர்ச்சியாக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் அப்படியொரு சுழலில் வாழவே முடியாதா...// ஏக்கமாகத் தான் இருக்கிறது..சில இடங்களில் ஓவியம் வரைந்திருக்கிறார்கள்..ஆனால் அதன் மேலும் போஸ்டர்!!!! :-(

  ReplyDelete
 5. கொடுமையான விஷயம்! கவனத்தில் கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!

  ReplyDelete
 6. இப்போ எல்லாமே பேனர் மயமாகிவிட்டது...
  கல்யாணம் முதல் கருமாதி வரை எல்லாம் பிளக்ஸ் வடிவில்...
  நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...