கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 February, 2014

நம் பலத்தை தீர்மானிப்பது யார்?



குருவிடம் சீடனாக விரும்பிய ஒருவன் தொடர்ந்து அவரை வந்து சந்திக்கிறான். தன் பலத்தால் நூறு பேரை வீழ்த்தும் சக்தியுடைய அவனை குரு பயிற்சிக்கு சேர்த்துக்கொள்கிறார்.

மாதங்கள் கழிகின்றன. பலமாத பயிற்சிக்குபிறகு குரு எதேச்சையாக சீடனை அழைத்து “இப்போது உன் சக்தியை சோதிக்கிறேன்.. எத்தனை பேரை நீ வீழ்த்த முடியும்“ என்று கேட்கிறார்.

பயிற்சிக்கு முன்பு நூறு பேரை வீழ்த்துவேன் என்று கூறிய அவன் பயிற்சிக்குப்பிறகு ‌ஐம்பது பேரை மட்டுமே வீழ்த்த முடியும் என்கிறான்..

பிறகும் சில மாதங்கள் கழிகின்றன. மறுபடியும் குரு சீடனை அழைத்து சக்தியை சோதனை நடத்த, அதே கேள்வியைக் கேட்கிறார். இப்போது உன்னால் எத்தனை பேரை வீழ்த்த முடியும்?

சீடன் பணிந்த கண்களோடு சொன்னான்.. “குருவே, இதை நானெப்படி சொல்ல முடியும்..? என் பலத்தை எதிரிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்“ என்கிறான்.

புன்னகைத்த குரு, சீடனை ஆசீர்வதித்து பயிற்சி முடிந்தது. வீட்டுக்கு போகலாம் என்று வழியனுப்பி வைக்கிறார்.

இக்கதை ‌போல்தான் நமது வாழ்வும், சாதாரணமான தேவைகளை தீர்மானிக்கும் போது கூட அது சராசரி நடைமுறைக்கு ஒத்துவருகிறதா எனப்பார்க்க வேண்டும். ஏனெனில், நம்முடைய பலம் எதிரே இருப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. பலம் பட்டுமல்ல பயனும்கூட.

நாம் என்னிவிடலாம் அனைவரையும் விட நாம் மேலானவன் என்று நமக்கு மேலே கோடிபேர் என்பதை உணராதவரை இந்த மயக்கம்தான் பலரை ஆட்கொண்டுவருகிறது. உண்மையான வீரம் மற்றவர்களை துன்புறுத்துவதிலோ அல்லது பிறரை இழிவுபடுத்துவதிலோ இல்லை. உண்மையான வீரம் ஆழமான அன்பைபே பொழியும்.


என்வாழ்க்கையில் இதுவரை சந்தித்தவர்களில் நிறையபேர் ரவுடி‌ப்போலவும், மிகப்பெரிய கோவக்காரர் போலவும் காட்டிக்கொள்கிறார்கள்... நான் அவர்களை பார்ப்பது இயலாதவர்களாகத்தான்... ஆம் சிலர் தன்னுடைய இயலாமையை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே கோவம், ரவுடிபோன்று பாவனை, அழுகை, வெறுப்பு என ஏதாவது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்...

கோவமோ, வீரமோ, அன்போ நாம் எவ்வளவு காட்டவேண்டும் என்பதை நாம் முடிவெடுக்க வேண்டாம் நம் எதிரில் இருக்கும் அடுத்தவர் காட்டும் அளவைப்பார்த்து முடிவெடுப்போம்.. அப்போதுதான் வாழ்க்கை தன்பயணத்தை எளிமையாக நகர்த்திக்கொண்டே இருக்கும்.

7 comments:

  1. #கோவமோ, வீரமோ, அன்போ நாம் எவ்வளவு காட்டவேண்டும் என்பதை நாம் முடிவெடுக்க வேண்டாம் நம் எதிரில் இருக்கும் அடுத்தவர் காட்டும் அளவைப்பார்த்து முடிவெடுப்போம்.#
    ஒப்புகொள்ள வேண்டிய உண்மை !
    த ம 2

    ReplyDelete
  2. உண்மை தான்... அடுத்தவர்களை வாழ வைப்பதே வீரம்... சும்மா தைரியத்தை "காண்பிப்பது" அல்பத்தனம்...

    ReplyDelete
  3. //சிலர் தன்னுடைய இயலாமையை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே கோவம், ரவுடிபோன்று பாவனை, அழுகை, வெறுப்பு என ஏதாவது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்... // உண்மை...

    ReplyDelete
  4. அருமையாச் சொல்லிட்டீங்க ஆசிரியர் ஐயா!

    ReplyDelete
  5. ஒரு உண்மையை மிக எதார்த்தமான கதையுடன் சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  6. நல்ல அறிவுரை.

    ReplyDelete
  7. உண்மையான வீரம் ஆழமான அன்பைபே பொழியும்.
    உண்மைதான்! இன்றுபோய் நாளைவா என்ற இரமனின் கூற்றும் இதன் அடிப் படையே ஆகும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...