கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 March, 2014

அவள் இல்லாத தனிமைகளில்..!


   
னித்திருந்து
வானம் பார்க்கும் இரவுகளில்
சட்டென்று விழும்
எரி நட்சத்திரமோ...!

யாருமற்ற ஒரு நாளில்
பின்புற கொல்லையில்
இறகு உதிர்த்து சென்றிருந்த
பறவையோ...!

முற்றத்தில் ஓடும் நீரில்
படகுவிட ஆளில்லா
வெறுமையைத் தந்த
ஒரு மழையோ...!

விழாவற்ற ஒரு நாளில்
தெருவில் ஆடிஅசைந்து
ஆசீர்வதித்து வந்துகொண்டிந்த
ஒரு யானையோ...!

புல்வெளிகளில் காத்திருக்கையில்
அங்கு சிறகடித்துவரும்
வண்ணங்களில் வசப்படுத்தும்
ஏதோ ஒரு பட்டாம்பூச்சியோ..!


சப்பதங்களற்ற 

ஒரு ‌ஏகாந்த வேளையில்
வீற்றிருந்த என் நினைவை
எழுப்பிவிட்டு போகும் ஒரு குயிலோ..!

இன்னும் எதுவெதுவோ
வந்துப்போகிறது ஞாபக சுவடுகளாய்
அவள் இல்லது தவிக்கும்
என் தனிமைகளில்...!



11 comments:

  1. தனிமையின் கொடுமை...ஒவ்வொரு வரியிலும் ...வலி புரிகிறது !
    த ம +1

    ReplyDelete
  2. அற்புதமான உவமைகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நயமிகு உவமைகள்! நற்றமிழ்க் கவிதையில்!

    ReplyDelete
  4. அருமையாக உணர்வுகளை வெளிக்காட்டிய வலி நிறைந்த கவிதை வரிகள் !வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் இன்பக் கவிதைகள் இனிதே வசப்படட்டும் .த.ம.4

    ReplyDelete
  5. தனிமை கொடிதுன்னு சும்மாவா சொன்னாங்க.

    ReplyDelete
  6. அருமையான கவிதை! தனிமை விரைவில் நீங்கட்டும்!

    ReplyDelete
  7. தனிமையின் கொடுமை அருமையான கவிதையாக.

    ReplyDelete
  8. இப்படியெல்லாம் பட்டால் தான் பெண்ணின் அருகாமையின் அவசியம் தெரியும்:)

    கவிதை அருமை சௌந்தர்.

    ReplyDelete
  9. உவமையுடன் உணர்ந்த வலி அருமை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...