கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 April, 2018

இதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..?


ராமு: உன் பெண்டாட்டி எப்பவாவது உன்கிட்டே கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்திருக்காங்களா…?

சோமு: நீ வேற, கோவிச்சுக்கிட்டு இருக்கும் போதுதான்டா அவ நிறையப் பேசுவா…!

************************


டாக்டர்: நீங்க நார்மலா இருக்கீங்க..!

நபர்: அதுக்கு எதுக்கு டாக்டர் இத்தனை டெஸ்ட் எடுக்கச் சொன்னீங்க..?

டாக்டர்: நான் நார்மலா இருக்க வேண்டாமா..? அதான்!

************************


பசங்களா…ஈசியா ஒரு கேள்வி கேட்கறேன்! யானை பெரிசா…எறும்பு பெரிசா…?

அப்படியெல்லாம் சும்மா சொல்லிவிட

முடியாது மிஸ்! ரெண்டோட டேட் ஆஃப் பர்த்தும் சொல்லுங்க

************************


பையன் 1 : எங்க அப்பா பெரிய பயில்வான் , பஸ்ஸை ஒரு கையாலேயே தள்ளிடுவாரு 

பையன் 2 : இது என்ன பிரமாதம்.. எங்க அப்பா பஸ்ஸை ஊதியே தள்ளிடுவாரு 

பையன் 1 : நெஜமாவா!!

பையன் 2 : ஆமாம், எங்க அப்பா பஸ் கண்டக்டர்..

************************


டாக்டர்: உங்க மாமியாருக்கு எந்த அதிர்ச்சியான நியூஸையும் சொல்லக் கூடாது!

மருமகள்: அப்ப எழுதிக் காண்பிக்கலாமா டாக்டர்...

************************


என் புருஷன் அல்வா செய்து கொடு, அல்வா செய்து கொடுன்னு நச்சரிச்சுட்டே இருந்தார்னு தீபாவளிக்கு அல்வா பண்ணினேன்.

அப்புறம்?

மனுஷன் அதுக்கப்புறம் வாயவே திறக்கலையே...

************************


குடும்பத்துக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணும்னு என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பா போயிடுச்சு.

ஏன் என்ன ஆச்சு?

என் மருமக விளக்கேத்தறதத் தவிர ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கிறா...

************************


BOSS Vs LEADER
வித்தியாசம் காட்டும் அழகிய
ஓவியங்களுடன்....

ரசித்த நகைச்சுவை
 துணுக்குகளும்....

20 April, 2018

கற்றாழை ஜூஸ் உடலுக்கு நல்லதா..?



கற்றாழை... `Aloe Vera' என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை... என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன.

பொதுவாக அலோயின் (Aloin), அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன.



கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கற்றாழையை உணவுப் பொருளாகவும், மருத்துவத்துக்கும், அழகு சாதனப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டுக் கொல்லையிலோ அல்லது தோட்டத்தின் கிணற்றோர வரப்புகளிலோ கற்றாழைச் செடிகளை நட்டு வளர்ப்பது கிராமப் பாரம்பரியங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இன்றும் கூட பலர் வீடுகளில் கற்றாழையை தொட்டிச் செடியாக வளர்த்து வருகின்றனர்.

பெரும்பாலும் பெண்களுக்கு உடல்சூட்டினால் வயிற்று வலி ஏற்பட்டால் சோற்றுக் கற்றாழை இலையின் தோலை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பொருளை உண்ணத் தருவார்கள். அதற்கு உடல்சூட்டைக் குறைக்கும் தன்மை உண்டு. அதன் காரணமாகத் தான் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை ஜெல் பலவிதமாகப் பயன்படுத்தம் படுகிறது.


எகிப்திய சொல் அகராதியின் படி கற்றாழை 'ஏபெர்ஸ் பாப்பிரஸ்' என்ற பெயரில் 16 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப் பட்டமைக்கு சான்றுகள் உள்ளன. இந்தியா, எகிப்தில் மட்டுமல்ல சீனா, ஜப்பான், கிரேக்கம், மெக்ஸிகோ, ஜப்பான் என உலக நாடுகள் அனைத்துமே நூற்றாண்டுகளாக கற்றாழையின் அருமையான பலன்களைப் பற்றி அறிந்து மருத்துவத்துறையில் அதனை “இறவாத்தன்மை கொண்ட தாவரம்” எனும் பெயரில் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றன. கற்றாழை அப்படி என்னென்ன பலன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது எனப் பார்த்தோமானால்;


பற்கள் மற்றும் பல் ஈறுகளின் ஆரோக்யத்தில் கற்றாழையின் பங்கு...

ஜெனரல் டென்ட்ஸ்டிரி என்று சொல்லப்படக் கூடிய பல் பொது மருத்துவ மலரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி கற்றாழை ஜெல் கலந்து தயாரிக்கப்பட்ட பற்பசைக்கு பற்குழி வராமல் தடுக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வேறு சாதாரண பற்பசைகளுடன் ஒப்பிடுகையில் கற்றாழை ஜெல் கலந்த டூத் பேஸ்டுக்கு பற்குழியை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏனெனில் கற்றாழை ஜெல்லில் இருக்கும் ஆந்த்ரோக்யூனோன் எனும் மூலப்பொருளுக்கு பற்கள் மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் காயங்களை ஆற்றும் சக்தி இருப்பதால் பற்கள் மற்றும் பல் ஈறுகளின் ஆரோக்யத்தில் கற்றாழை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.


மலச்சிக்கலைத் தடுப்பதில் கற்றாழை ஜெல்லின் பங்கு... 

நாளொன்றுக்கு 50 கிராம் முதல் 200 கிராம் வரையிலான கற்றாழை ஜெல்லை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கேப்சூகல்களாகவோ அல்லது தண்ணீரில் கலந்து ஜூஸாகவோ அருந்தினோமென்றால் 10 நாட்களில் மலச்சிக்கல் பிரச்னை படிப்படியாகக் குறைந்து நிரந்தரமாக மலச்சிக்கல் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்து விடும் என்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த மூலிகை மருத்துவ ஆராய்ச்சி கமிஷன் ஒன்று.

ஜெர்மனி அப்படிச் சொன்னாலும் கூட அமெரிக்காவில் கற்றாழை ஜெல்லை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை மருத்துவப் பொருட்களின் நம்பகத்தன்மைக்கு போதுமான சான்றுகள் சமர்பிக்கப் படாத காரணத்தால் அமெரிக்காவில் இப்போதும் கற்றாழை ஜெல் கொண்டு தயாராகும் மூலிகைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மலச்சிக்கலைத் தீர்க்கும் எனும் லேபிளின் கீழ் விற்பனை செய்யப்படும் கற்றாழை ஜெல்லுக்கு அங்கே தடை உண்டு என்கிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை கற்றாழை மூலிகைப் பொருட்களுக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இருப்பதில்லை. ஏனெனில் இங்கே கற்றாழை ஜெல் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்கென வீடுகளிலேயே வளர்த்துப் பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப் படுவதால் கற்றாழை மூலிகைக்கு இங்கே அத்தனை எதிர்ப்பு எழ வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

நீரழிவு நோயினால் தூண்டப்பட்டு ஏற்படக்கூடிய வயிற்றுப் புண்ணை ஆற்ற கற்றாழை ஜெல் பயன்படுகிறது.

கற்றாழையில் இருக்கும் ஆண்ட்டி ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஆண்ட்டி மைப்ரோபியல் பண்புகளுக்கு காயங்களை எளிதில் ஆற்றக்கூடிய திறன் உண்டு.


சூரியனிலிருந்து வரும் கடும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் சக்தி உண்டு.

ரேடியேஷன் தெரபிக்குப் பிறகு நோயாளியின் சருமம் கடுமையான ரேடியேஷனின் தாக்குதலால் வாடிப் போய் பொல்விழந்த தோற்றம் பெறுவதைத் தடுக்க கற்றாழை ஜெல் உதவுகிறது.

19 April, 2018

நீங்க இப்படி யோசிப்பிங்களா...?













பார்க்க... ரசிக்க...
சிரிக்க... சிந்திக்க...

பயப்பட வச்சிட்டோம்ல...



பாலுக்காகவே
காலம் காலமாய்
கட்டிவைத்து
வஞ்சிக்கிறோம்
மாடுகளை...

அழகெனவே
சூடிக்கொள்ள...
கண்ணீர்  சிந்த
வைத்துவிடுகிறோம்
மலர் செடிகளை...

சாமரம்வீச
சிறகு வேண்டின்
சட்டென
உயிரறுத்து விடுகிறோம்
மயில்களை...

 கருணையின்றி
கல்லெறிந்து
காயப்படுத்துகிறோம்
காய்த்து கொடுக்கும்
கனிமரங்களை....

மகிழ்வென
உடுத்திகொள்வதற்காக
மொத்தமாய்
மாய்ந்துபோகிறது
பட்டுபுழு....

உயிர்கொண்டு
உயிர் கொள்கிறோம்...
மீனெனும் சுவைக்காக
கழுவேற்றுகிறோம்
புழுக்களை....

உள்ளிருக்கும்
ஆதிமனிதனை
இன்றளவும்
அமைதி படுத்துவது
ஆடும்  கோழியும்...

வாழ்வென
விரிவுபடுத்திக்கொள்ள
உயிர் அகற்றி
காயப்படுத்தி விடுகிறோம்
காடுகளை....

பல்லுயிர்
வேற்றுமை பாராது
காரணமின்றியே
அறுக்கிறோம்
உணவு சங்கிலியை

உண்மையில்
இன்றளவும்

நம்மை
சுற்றி வாழவே
பயந்துக் கொண்டுதான்
இருக்கிறது
சுற்றமும்.... சூழலும்....


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

18 April, 2018

வாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...



*********************************


உலகப் பாரம்பரிய நாள்

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என அறிவிப்பது பற்றி ஆலோசிக்கும்படி அதன் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

*********************************



கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை 
தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் 
வந்திருந்தார். 

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண 
பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான 
கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, 
ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? 
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் 
வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். 
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் 
கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து 
அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” 

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை 
வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். 
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார். 
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச 
இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் 
அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். 
அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு 
நேரம் ஏது?” என்றார். 

********************************* 


வாக்கியம் தேவையில்லை...

17 April, 2018

விடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க


மனைவி: ஏங்க இன்னும் போனையே நோண்டிக் கிட்டு இருக்கிங்க...

கணவன் : தூக்கம் வரலம்மா, வந்ததும் தூங்கிடுவேன்.

மனைவி: விடிஞ்சி ஒரு மணி நேரம் ஆவுது எருமை ....!!

கணவன் : ????!!!!???!?////?!!!??????


*******************************


மனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...

பையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...

அம்மா : எதுக்குடா மூணு ?!!?

பையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...

அம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...

பையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்...

அம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...

அம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...?


பையன் : அப்பாகூட தூங்கட்டும்...

இதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது !!!


*******************************



டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பிபி இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : பல்ஸ் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : சுகர் இருக்கா?

நர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும்?


*******************************

16 April, 2018

இனம் இனத்தோடுதானே சேரும்...



ளவுக்கு மீறினாலும் 
அமிர்தமாகவே
 இருக்கிறது...
உன்னோடான 
உரையாடல்கள்...

விலக விலக 
மறைவதில்லை நீ...
அப்போதுதான் 
எனக்குள் 
விஸ்வரூபம் 
எடுக்கிறாய்...!

னம் 
இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் 
உன் காதலும் 
என் காதலும்
சேரமறுக்கிறது...

மௌனத்திற்கு பொருள் 
சம்மதம் தானே
இந்த நாள்வரை 
அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் 
சம்மதம் மட்டுதான் 
கிடைக்க வில்லை..!

காதலை 
நம்பினோர் 
கைவிடப்படுவதி்ல்லை என்ற 
புதிய வரலாற்றை 
எழுதுவோம்
அன்பே...! 
கைகொடுத்து விடு...!


15 April, 2018

சளித் தொல்லையா...? கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சிக்கனும்....


உடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம்!

தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப் படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம்.


இந்த சளியைப் போக்க நாம் கடைகளில் விற்கப்படும் டானிக்கை வாங்கிக் குடிப்போம். அப்படி குடிக்கும் போது, சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால் அது தற்காலிக நிவாரணி தான்.

ஒவ்வொருவரும் நம் உடலில் சளியை தேக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம். இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.




மஞ்சள்:

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் தான், அதன் மருத்துவ குணத்திற்கு காரணம். இது பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் இதை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். கீழே சளியை வெளியேற்ற மஞ்சளை உட்கொள்ளும் முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1 டீஸ்பூன் மஞ்சள்

1/2 டீஸ்பூன் உப்பு

1 டம்ளர் வெதுவெதுப்பான நீர்

தயாரிக்கும் முறை: 

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 3-4 முறை குடிக்க, சளி உருகி, தொண்டையில் கபம் தேங்குவது குறையும்.


இஞ்சி:

இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தாக்குதலை தடுக்கும் ஆன்டி-ஹிஸ்டமைன் ஏஜெண்ட்டும், சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன. அதோடு இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். அதற்கு இஞ்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பானம் போன்று தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 6-7 துண்டுகள்

மிளகு – 1 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால் பானம் தயார். இதை சளி பிடித்திருக்கும் போது, தினமும் குடித்து வர சளி விரைவில் வெளியேறும்

ஆவி பிடிப்பது

நல்ல சுடுநீரில் ஆவி பிடிப்பதால், சளி மற்றும் கபம் தளர்ந்து, சுவாசக் குழாய் சுத்தமாகி சுவாச பிரச்சனைகள் நீங்கி, நிம்மதியாக சுவாசிக்கலாம். முக்கியமாக ஆவி பிடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஆவிப் பிடிப்பதற்கு வெறும் சுடுநீர் மட்டுமின்றி, அத்துடன் சிறிது மூலிகைகளையும் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

தைம் – 1/2 டீஸ்பூன்

உலர்ந்த ரோஸ்மேரி – 1/2 டீஸ்பூன்

சுடுநீர் – 4-5 கப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் மூலிகைகளைப் போட்டு, பின் அந்நீரால் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி தினமும் 3-4 முறை செய்தால், சளி சீக்கிரம் வெளியேறிவிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை


சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேன் சுவாச பாதையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். அதே சமயம் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தடையில் சுவாசிக்க உதவும். சளி மற்றும் கபத்தை வெளியேற்ற எலுமிச்சை மற்றும் தேனைக் கொண்டு அற்புத பானம் தயாரித்து பருக வேண்டும்.


தேவையான பொருட்கள்:

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, தினமும் மூன்று வேளைப் பருக சளி மற்றும் கபம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

13 April, 2018

அம்பலமான ஸ்ரீரெட்டியின் பலான வாட்சப் சாட்டிங்...

திரை உலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ ரெட்டி பல்வேறு பிரபலங்களுடன் மிகவும் கீழ்தரமாக வாட்ஸ்அப் சாட்டிங் செய்துள்ளார்...

அந்த சாட்டிங் தகவல்கள் தற்போது சிவா வர்ஷா அவர்கள்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்....





12 April, 2018

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்க....!



தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இலவசமாக
கல்வி பயில்வது எப்படி*?

********************************

*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*?


*RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009*


*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?


முடியும்!


என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?


ஆம்.


*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018


*இந்த சட்டம் ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA ) கொண்டு வரப்பட்டது...


*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*?


★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★ தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர், 

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்

இருக்கும் தனியார் பள்ளிகளில் உங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*


*மற்றும் முதல் வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*

*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள் 8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*


இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து கல்வி பயிலலாம்.


*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*

*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*


பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.


*அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீதம் இடங்களை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும்* *குழந்தைகளுக்கு*

*கண்டிப்பாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்*

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம் அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.


*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் சிறுபான்மையினர் பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*


*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை. கட்டணம் செலுத்துங்கள் பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*


*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.


உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர், மெட்ரிக்பள்ளி இயக்குநர், இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.


சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!


*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்*


★ எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின்        கல்வி கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★ கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★ பெயர் தான் இலவசக்கல்வி !

★ இது கேவலம் அல்ல!

★ மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★ கவலை வேண்டாம்!

★ இது கனவல்ல! நிஜம் !



★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*

*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*


தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.



★ *விண்ணப்பம் செய்வது எப்படி*?


★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே விண்ணப்பிக்கலாம் .


1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்


*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்



★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*

1. பிறப்பு சான்று

2. குழந்தையின் புகைப்படம்

3. ஜாதி சான்று

4. வருமான சான்று

5. இருப்பிட சான்று

6. முகவரி ஆதாரம்


*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில் ஒவ்வொரு சான்றுக்கும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.


★ இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.


★தனியார் பள்ளிகளில் L.K.G வகுப்பிற்கான சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.


★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள். இது சட்ட விரோதமான செயலாகும்.



★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.


*இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள் குறிப்பிட்டு 16.04.2018 அன்று* *பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*



*20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*


*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*


*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*


★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.


★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!


★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.


★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.


*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*


★ ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.


★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.


★ 2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★ 2017-2018 ஆம் கல்விஆண்டில் 2,36,000 இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம் காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40,000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.


★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.


*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் இலவச சேரக்கை நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*


*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*


★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 


★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.


★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.



★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை*


*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*


*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*!


பெற்றோர்களே!

நண்பர்களே !

சமூக ஆர்வலர்களே!

சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !


*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*


*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*

*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*


*மேலும் இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்* *தனியார் பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும் .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்* *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அனுகலாம்...


மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 

நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?

அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.


*கவலை வேண்டாம்*!!

*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*


*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*

*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*


*******************************

*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே இலட்சியம்*

வீதியோர சிறார்களும்... விண்வெளி மனிதனும்...



***********************************



வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். 

***********************************


மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.


உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

***********************************

பார்க்க சிரிக்க...


***********************************

பார்க்க சிந்திக்க...

11 April, 2018

என்ன ஒரு புத்திசாலிதனம்...


Person 1 😐: கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட மொபைல் போன் 15'வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சி...!!!

Person 2😐: அச்சச்சோ.! உன் மொபைல் உடைஞ்சிருக்குமே....?

Person 1😐 : எப்படி உடையும்...? இப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் என் மொபைல அப்போவே FLIGHT MODE"ல வச்சிருந்தேன். பாதுகாப்பா லேண்டிங் ஆயிருக்கும்...

Person 2😠: உன் அறிவுல கொள்ளிகட்டைய வச்சி தீக்க...

*****************************************


மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன் : எனக்கு மறந்து போச்சு

மனைவி : இது கூடவா ?

கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும். 

*****************************************


மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?

மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?

மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்....

*****************************************


ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். நீங்க எப்ப ஃப்ரீ''

""எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது.
ஃபீஸ் வாங்குவேன்'

*****************************************

புது அறிமுகம்....


பார்க்க சிரிக்க படங்களுடன்
நான் ரசித்த சில நகைச்சுவைகளும்.....

Related Posts Plugin for WordPress, Blogger...