கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 April, 2018

தணிக்கையில் 14 இடத்தில் வெட்டு... தள்ளிப்போகும் காலா


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் பிரவேசத்துக்குபிறகு  மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் படம்   காலா.  சமீபத்தில் தணிக்கையை முடித்திருக்கும் காலா படககுழுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...  அது என்ன என்வென்றால் படம் U / A சான்றிதழை பெற்றிருப்பதுதான்...

படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் முக்கிய காட்சிகள் உள்பட 14 இடத்தில் வெட்டி நீக்கியிருக்கிறது... இதனால் படம் தன்னுடைய கம்பீரத்தை இழந்திருப்பதாக படக்குழு கருதுகிறது...

மேலும் இம்மாதம் 27 ம் தேதி படத்தை வெளியிட  திட்டமிட்டது படக்குழு ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என தெரிகிறது. இப்பிரச்சனை தீராவிடில் படம் தீபாவளிக்கோ அல்லது விநாயகர் சதுர்த்திக்கோ படம் வெளியாகலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் கதை மும்பை தாதாவான ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது, என்ற வதந்தியை இயக்குனர் ரஞ்சித் சமீபத்தில் வெளியான ஒரு பத்திரிகையின் நேர்காணலில் இந்த படம் எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் ஊக்கமளிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியது.  படம் வந்தபிறகு அவருடைய  கதையை போல் இருந்தால் அப்போதும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.2 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...