கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 April, 2018

இனம் இனத்தோடுதானே சேரும்...ளவுக்கு மீறினாலும் 
அமிர்தமாகவே
 இருக்கிறது...
உன்னோடான 
உரையாடல்கள்...

விலக விலக 
மறைவதில்லை நீ...
அப்போதுதான் 
எனக்குள் 
விஸ்வரூபம் 
எடுக்கிறாய்...!

னம் 
இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் 
உன் காதலும் 
என் காதலும்
சேரமறுக்கிறது...

மௌனத்திற்கு பொருள் 
சம்மதம் தானே
இந்த நாள்வரை 
அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் 
சம்மதம் மட்டுதான் 
கிடைக்க வில்லை..!

காதலை 
நம்பினோர் 
கைவிடப்படுவதி்ல்லை என்ற 
புதிய வரலாற்றை 
எழுதுவோம்
அன்பே...! 
கைகொடுத்து விடு...!


2 comments:

  1. //விலக விலக மறைவதில்லை நீ...அப்போதுதான்
    எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...!//

    ரசித்தேன் அனுபவப்பூர்வமாக!!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...